எதிர்நீச்சலில் பரபரப்பு.. குணசேகரனை அவமானப்படுத்திய கரிகாலன்.. அடிக்க பாய்ந்த நந்தினி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குணசேகரனை முகத்துக்கு நேராக புகழ்வது போன்று கரிகாலன் இகழ்கிறார்.

அதைத் தொடர்ந்து குணசேகரன் சொன்ன வார்த்தையை கேட்டு கோபமான நந்தினி குணசேகரனை அடிக்க பாய்ந்து போகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து எதிர்பாராத பல திருப்பங்கள் வந்து கொண்டு இருக்கும் வகையில் இன்றைய எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத பல நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. அதனாலேயே நேற்று எபிசோடு முடிவடைந்ததும் ப்ரோமோ வெளியான நிலையில் அதை பார்த்த ரசிகர்கள் பாராட்டி கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே நேற்றைய எபிசோடில் கதிர் எங்கே போனார் என்று நந்தினி கேட்ட கேள்விக்கு அதிகமாக பேசிய நந்தினியை, குணசேகரன் அடிக்கவும் பாய்ந்து இருந்தார். பேச்சுக்கு பேச்சு எதிர்த்துப் பேசிய நந்தினி, "கதிர் வந்ததும் இங்க நடந்ததை பற்றி நான் சொல்லப்போகிறேன். அவன் எனக்காக இருக்கப் போகிறாரா? அல்லது உங்க பக்கம் நிற்க போகிறாரா என்று பார்த்துக் கொள்ளலாம்" என்று சொல்ல, "என்னுடைய தம்பி எனக்கு வேட்டை நாய். நான் கடி என்று சொன்னால் கடிப்பான் வாலை ஆட்டிட்டு நில்லு என்று சொன்னால் நிற்பான்" என்று திமிராக குணசேகரன் பேசி இருந்தார்.

அதற்கெல்லாம் சவால் விடும் வகையில் நந்தினியும் கதிர் வந்ததும் இங்கு நடந்ததை எல்லாம் சொல்லப் போகிறேன். அதற்குப் பிறகு அவன் யாரை வெட்டப் போகிறான் என்று தெரியும் என்று சவால் விட்டிருந்தார். நான் மட்டும் நினைத்து இருந்தால் என்னைக்கோ என் புருஷனை என் முந்தானையில் முடிஞ்சு வெச்சிருக்க முடியும் அப்படி வைக்க வேண்டிய அவசியம் இல்லன்னு தான் நான் விட்டு இருந்தேன் என்று சொல்ல, நீ ஒழுங்கா இருந்தா அவன் ஏன் வெளியில போகப் போறான் என்று குணசேகரன் நந்தினியை அவமானப்படுத்தி இருந்தார்.
இப்படியாக இருக்கையில் இன்றைய பிரமோவில் குணசேகரனிடம் ஞானம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அருகில் இருக்கும் கரிகாலன், "எல்லாரும் மாமா ஜெயிச்சுட்டாருன்னு பேசிகிட்டு இருக்கீங்க. ஆனா அவர்தான் ஒவ்வொரு விஷயத்திலும் தோத்துகிட்டு இருக்காரு" என்று சொல்ல, அதற்கு கோபமாக குணசேகரன் ஏய் நீ என்ன கேவலப்படுத்துறியா என்று கோபப்படுகிறார்.
அதைத் தொடர்ந்து ஞானம் கதிர் எங்கே போனான் என்ற கேள்வி கேட்க, அதற்கு குணசேகரன், கதிரை ஒரு வேலை விஷயமா அனுப்பி இருக்கேன். அவன் அதுல திரும்பி வந்தாலும் வரலாம், இல்ல பிணமாக கூட வரலாம். என்ன வேணாலும் நடக்கும் என்று சொல்ல அப்போ கிச்சனில் அழுது கொண்டிருந்த நந்தினி இதை கேட்டு எடு தொடப்பக்கட்டையை என்று கோபமாக கிளம்பி வந்து, என் புருஷன் இப்ப வந்து ஆகணும் என்று குணசேகரனிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications