எதிர்நீச்சலில் திடீர் ட்விஸ்ட்.. ஜீவானந்தத்தை சந்திக்கும் ஜனனிக்கு கதிரால் அதிர்ச்சி..வெளியான ரகசியம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு என்ன ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ஜீவானந்தத்தை பார்க்க வேண்டும் என்று அவருடைய சொந்த ஊரில் காத்திருந்த ஜனனிக்கு அதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதே நேரத்தில் அந்த இடத்தில் கதிர் கிள்ளிவளவனோடு காத்திருக்கும் நிலையில் ஜனனி எந்த மாதிரி முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து எதிர்பார்க்காத பல திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஜீவானந்தத்தை கொலை செய்ய வேண்டும் என்று குணசேகரன் கிள்ளிவளவனை கதிரோடு அனுப்பி வைத்திருக்கிறார். இந்த நிலையில் ஜீவானந்தத்தை தேடி ஜனனியும் அவருடைய சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார்.
இந்த நிலையில் ஜனனிக்கு அடைக்கலம் கொடுத்த நபரும் அவருடைய மனைவியும் ஜீவானந்தத்தை பற்றி பெருமையாக பேசுகின்றனர். ஆரம்பத்தில் ஜீவானந்தம் ஈஸ்வரியை சந்திக்கும் போது சுவற்றில் சித்தாந்தம் எழுதும் நபராக காட்டப்பட்ட நிலையில் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தத்திற்கு பல தலைமுறைகளாக பல ஏக்கர் நிலங்களும் கோடிக்கணக்கான சொத்துக்களும் இருந்தது என்றும் அவருடைய அப்பா பெரிய வள்ளல் என்றும் அறிமுகம் கொடுத்திருந்தனர்.
அதோடு ஜீவானந்தத்திற்கு கல்யாணம் முடிந்து அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார் என்று நேற்றைய எபிசோடில் வெளியானது. அதோடு குழந்தை மற்றும் மனைவி பற்றி ஜீவானந்தம் நினைத்து பார்க்கும் நினைவுகளாக, "வா வா என் தேவதையே" எனும் பாடலோடு காட்சிகளும் இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில் இன்றைய எபிசோடுகான பிரமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஜீவானந்தம் தன்னுடைய கிராமத்திற்கு நடந்து வந்து கொண்டிருக்க, அதே நேரத்தில் காரில் வளவன் மற்றும் கதிர் காத்திருக்கின்றனர். அப்போது ஜனனியிடம் அவருக்கு அடைக்கலம் கொடுத்த நபர், "உன்னை சந்திக்க ஜீவானந்தம் இன்னைக்கு வராரு மா" என்று சொல்ல, அதற்கான ஜீவானந்தத்தை சந்திக்க போவதற்கான பாதையையும் அவர் காட்டிக் கொடுப்பதற்காக கூட்டிக் கொண்டு வருகிறார். இப்படியான பரபரப்பான நிலையில் குணசேகரன் வீட்டில் சக்தியை அவமானப்படுத்துகிறார்.
அதாவது சக்திக்கு அம்மை போட்டு இருந்த நிலையில் இன்று சக்திக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி ரேணுகா குளிப்பாட்டுகிறார். அதற்கு அதை பார்த்த குணசேகரன் ஓஹோ கண்காட்சியா.? வியாதிகள் எல்லாம் கொண்டாட கொண்டாடத்தான் நம்ம மேல ஒட்டிக்கிட்டே இருக்கும் என்று சொல்ல, அதற்கு நந்தினி எல்லாரும் உங்கள மாதிரி இல்ல மாமா, நாங்க எல்லாம் மனுச பிறவிங்க நீங்க தெய்வ பிறவி என்று பதில் சொல்லி கொடுக்கிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications