எதிர்நீச்சலில் ஆதிரையின் சூப்பர் மாற்றம்.. அதிரடியாக மாற்றப்பட்ட கதை.. இனி நடக்கப் போவது இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் டிசம்பர் 18ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் அருண் ஆக்சிடென்ட் செய்தது குணசேகர் தான் என்ற உண்மையை ஆதிரை எஸ்கேஆர் குடும்பத்தில் சொல்ல அருண் வீட்டிற்கு சென்றிருக்கிறாள்.

அதே நேரத்தில் கரிகாலன் ஆதிரையிடம் வீட்டிற்கு வா என்று கூப்பிட ஆதிரை எதிர்பாராத செயலை செய்து இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

Ethirneechal Serial 2023 December 18th promo and episode full update

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இப்போது கதை பயணிக்க தொடங்கி இருக்கிறது. ஒரு சில மாதங்களாக எதிர்நீச்சல் சீரியல் பெரிய அளவில் ரசிகர்களை கவராத மாதிரி இருந்தது. காரணம் வீட்டுக்குள்ளேயே கதை சுற்றி சுற்றி வந்தது. ஆனால் இப்போது பெண்கள் சுயமாக முடிவெடுத்து குணசேகரனை எதிர்க்க துணிந்திருக்கின்றனர்.

இதனை அதிகமான ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதே போல கதை போய்க் கொண்டிருந்தால் மீண்டும் பழையபடி இந்த சீரியல் டிஆர்பி யில் முதல் இடத்திற்கு வந்து விடும். அந்த வகையில் குணசேகரனை எதிர்த்து ஈஸ்வரி எலெக்ஷனில் போட்டியிடுகிறார். அதுபோல நந்தினிக்கு மீண்டும் வேலை கிடைத்து அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் சந்தோஷமாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கலாம் என்று நினைத்திருந்த நேரத்திலேயே தன்னுடைய கண் முன்பே கதிருக்கு அடிபட்டு இப்போது கதிர் மருத்துவமனையில் ஆபத்தான நிலைமையில் இருக்கிறார்.

இதை பல மாதங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதிலும் எப்போது கதிருக்கு அடிப்படும்? கதிர் தன்னுடைய அடிப்படைத் தேவைகளை செய்ய முடியாமல் அடுத்தவர்களுக்காக காத்திருக்க வேண்டும் என்று பல ஆசைப்பட்டனர். அது இப்போது நடக்க தொடங்கி இருக்கிறது.

Ethirneechal Serial 2023 December 18th promo and episode full update

அதன்படி கதிரின் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக கூட நந்தினி உதவி செய்ய அதனால் கதிர் கண்ணீரோடு தன்னுடைய நன்றியை தெரிவித்து இருக்கிறார். இதனால் கதிர் இனி மன மாற்றம் அடைவாரா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இதுவரைக்கும் தன்னுடைய வேட்டை நாயாக குணசேகரன் கதிரை பயன்படுத்தி வந்த நிலையில் இப்போது கால் ஒடிந்து கிடக்கும் கதிரை வைத்து தனக்கு இனி பிரயோஜனம் இல்லை என்பதை தெரிந்து கொண்ட குணசேகரன் தன்னுடைய சுயரூபத்தை காட்டி கதிரை அலட்சியப்படுத்துவார்.

அதுக்கு பிறகு தான் கதிருக்கு நந்தினியின் அருமை தெரிய ஆரம்பிக்கும். அதுபோல ஆதிரை கட்டாய திருமண வாழ்க்கையில் வேறு வழியில்லாமல் இருந்து வந்த ஆதிரை இப்போது தைரியமாக தாலியை கழட்டி வீசி இருக்கிறார். அதுபோல இப்பொழுது வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார். தன்னுடைய அவசர புத்தியால்தான் அருணுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டது என்று குற்ற உணர்ச்சியில் இருந்த ஆதிரைக்கு குணசேகரன் தான் அருணுடைய இந்த நிலைமைக்கு காரணம் என்ற உண்மை தெரிந்திருக்கும் நிலையில் ஆதிரை அருண் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

தம்பி கதிரின் இந்த நிலைமைக்கு நியாயம் கேட்க போன குணசேகரன் முன்பு ஆதிரை தன்னுடைய அண்ணன்தான் அருணின் இந்த நிலைமைக்கு காரணம் என்பதை சொல்கிறார். அப்போது கரிகாலன் ஆதிரையை சமாதானம் செய்து வீட்டிற்கு கூட்டிட்டு போகலாம் என்று முயற்சி செய்ய, அதற்கு ஆதிரை கன்னத்தில் அறைந்து இருக்கிறார்.

அப்போது எஸ்.கே.ஆர் உனக்கு எங்கள் வீட்டில் இடம் இல்லை என்று ஆதிரையிடம் சொல்ல அதற்கு சாருபாலா, இல்ல எஸ்கேஆர் ஆதிரை இனி நம்ம வீட்டுல தான் இருப்பா என்று சொல்கிறார். இது சீரியலின் கதையின் முக்கிய திருப்பமாக இருக்கிறது. மற்ற சீரியல்களை கம்பேர் பண்ணும் போது இந்த சீரியல் தனித்துவத்தையும் இதில் தெரிய செய்து இருக்கிறது.

பொதுவாக இப்போது வரும் பல சீரியல்களில் கட்டாய திருமணம் நடைபெறுகிறது. பிறகு தாலி கட்டிய கணவர்தான் தனக்கு எல்லாம் என்று சொல்கிற மாதிரி அந்த கணவரை பற்றி புரிந்து கொண்டு அவரோடு வாழ்க்கையை நடத்துவது தான் பல சீரியல்களில் பார்க்க முடிகிறது.

ஆனால் ஆதிரை தனக்கு நடந்த கட்டாய திருமணத்திலிருந்து தான் காதலித்த நபருக்கு தண்ணால் ஏற்பட்ட கஷ்டத்தை தீர்ப்பதற்காக முயற்சி எடுத்து இருக்கிறார். இதன் நிலையில் ஆதிரை இனி அருண் வீட்டில் இருந்து அருனுக்காக சேவை செய்யப் போகிறாரா? அல்லது தன்னுடைய வாழ்க்கை தேவைக்காக அடுத்த கட்ட கலெக்டராக போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+