எதிர்நீச்சல்: பெட்டியோடு சிக்கிய குணசேகரன்.. அதிர்ச்சி கொடுத்த வசு.. மாட்டிய வீடியோ.. ஈஸ்வரி பேசியது ஹைலைட்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் டிசம்பர் 26 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குணசேகரனுக்கு எதிராக ஜனனி மற்றும் ஈஸ்வரிக்கு ஆதரவாக வாசு வீட்டிற்குள் வந்திருக்கிறார்.
அதே நேரத்தில் கரிகாலனை வசு மாட்டி விடுகிறார். அப்போது குணசேகரன் புது பிரச்சனையில் மாட்டி இருக்கிறார்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் ஒரு சில மாதங்களுக்கு பிறகு இப்போது தான் வேகம் எடுக்கத் தொடங்கி இருக்கிறது. குணசேகரன் மற்றும் ஈஸ்வரி இருவரும் எதிரெதிராக தேர்தலில் களமிறங்கும் நிலையில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அதோடு குணசேகரனுக்கு ஆதரவாக ஜனனியின் எதிரியாக இருக்கும் அவருடைய சித்தப்பா பையன் கிருஷ்ண சுவாமி மெய்யப்பன் மற்றும் அவருடைய அண்ணன் ராமசாமி ஐயப்பன் இருவரும் வந்திருக்கின்றனர். ஏற்கனவே பணபலம் மற்றும் படைபலத்தோடு இருக்கும் குணசேகரனுக்கு புதியதாக இப்போது கூட்டணியில் வந்திருக்கும் நிலையில் இனி குணசேகரன் ஆட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் கதிர் கை காலில் அடிபட்டு நடக்க முடியாமல் வீட்டில் இருக்கும் நிலையில் இதை சாதகமாக்கி கொண்டு வீட்டு பெண்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்பதும் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இத்தனை நாட்களாக வாய்சவடால் மட்டுமே விட்டுக் கொண்டிருக்கும் ஜனனி குரூப் இப்போதும் அப்படித்தான் செய்யப் போகிறார்களா? அல்லது நிஜத்தில் ஜெயித்து குணசேகரனுக்கு ஆட்டம் காட்டப் போகிறார்களா? என்று இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும்.
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வீட்டிற்கு வந்த வாசுவை குணசேகரன் எதுக்காக இங்க வந்திருக்க என்று கேட்க அதற்கு வாசு என்னை வர சொன்னது மட்டும் தான் அவரு, ஆனா அதுக்கு ஐடியா கொடுத்தது கரிகாலன் தான் என்று பிளேட்டை மாத்தி போடுகிறார். அதைத்தொடர்ந்து கரிகாலன், ஞானம், கதிர், குணசேகரன் நான்கு பேரும் மீட்டிங் போடுகின்றனர்.

அப்போது இவ்வளவு கூட்டமா இருந்தாதான் பலம்னு நினைக்கிறாளுங்க அந்த கூட்டணியை நம்ம உடைக்கணும் என்று சொல்ல, அப்போது கரிகாலன் அதுதான் நடக்காது என்று அபசகுணமாக பேசுகிறார். அடுத்ததாக வீட்டிற்கு மூன்று வெள்ளை வேஷ்டி போட்ட நபர்களை வரவைத்து அவர்களுக்கு பெட்டி பெட்டியாக குணசேகரன் பணத்தை கொடுக்கிறார்.
அதற்கு ஈஸ்வரி நீங்க பண்ணுறது ரொம்ப தப்புங்க என்று சொல்ல, என்ன தப்பு முடிஞ்சா நீ ஜெயித்து பாரு என்று குணசேகரன் பேசிக் கொண்டிருக்கிறார். இதை எல்லாமே வாசு வீடியோவாக எடுத்துக் கொண்டிருக்கிறார். இனி குணசேகரன் பணம் கொடுத்து தான் ஓட்டுக்களை விலைக்கு வாங்கினார் என்பது ஆதாரமாக இருக்கப் போகிறது. இதனால் குணசேகரன் வாசுவிடம் மாட்ட போகிறார்.

ஏற்கனவே அப்பத்தாவை கொலை செய்தது யாரு என்று ஜனனி கேஸ் போட்டு இருக்கிறார். அதைத்தொடர்ந்து ஆதிரையும் தனக்கு கட்டாய திருமணம் நடத்தி வைத்ததற்காக குணசேகரன் மீது கேஸ் போட சொல்லி நீதிபதி கூறி இருக்கும் நிலையில் இப்போது எலெக்ஷனில் மக்களுக்கு பணம் கொடுத்ததற்காக அடுத்து பிரச்சனையிலும் மாட்ட போகிறார். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் ஒவ்வொரு இடத்திலும் குணசேகரன் தான் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்போது சுற்றிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளில் எப்படி தப்பிக்க போகிறார்? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications