எதிர்நீச்சல்: ஜனனியை எதிர்த்து வீட்டுக்குள்ளே வந்த கிருஷ்ணா.. தொடங்கியது புது ஆட்டம்.. இனி கதை இதுவா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் டிசம்பர் 9ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஜனனிக்கு கம்பெனியில் எதிரியாக வந்திருக்கும் கிருஷ்ணசுவாமி மெய்யப்பன் குணசேகரன் வீட்டிற்க்கே வந்து ஜனனி மற்றும் சக்தியை மிரட்டுகிறார்.
அப்போது ஜனனிக்கு எதிராக கிருஷ்ணாவுக்கு ஆதரவாக குணசேகரன் பேசுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பாக்காத வகையில் பல அதிரடியான திருப்பங்கள் வந்திருக்கிறது. ஒரு சில நாட்களாகவே எதிர்நீச்சல் பெண்கள் மீண்டும் மீண்டும் தோற்றுப் போய்க் கொண்டிருப்பது போன்ற கதை போய்க்கொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் வருத்தத்தை தெரிவித்து வந்திருந்த நிலையில் இப்போது சீரியல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று ஜனனிக்கு கம்பெனி தொடங்குவதற்கு பிரச்சனை கொடுப்பதற்காக அறிமுகமான அவருடைய சித்தப்பா பையன் மீண்டும் நேற்றைய எபிசோட்டில் வந்திருக்கிறார். அதுவும் குணசேகரன் வீட்டுக்கே வந்து சக்தி மற்றும் ஜனனி அட்வான்ஸ் கொடுத்து இருக்கும் கம்பெனி இனி அவர்களால் வாங்க முடியாது. அந்த கம்பெனியை நான் வாங்க வேண்டும். என்னுடைய பிசினஸில் அவர்கள் தேவையில்லாமல் பிரச்சனை செய்கிறார்கள்.
நான் ஏற்கனவே அவர்களுக்கு வார்னிங் கொடுத்து இருந்தேன். ஆனால் அவர்கள் அந்த கம்பெனியை விட்டு விலகுவதாக தெரியவில்லை என்று வீட்டிற்கு வந்து குணசேகரன் முன்பு கிருஷ்ணசாமி மெய்யப்பன் மிரட்டி இருந்தார். இந்த நிலையில் இதற்கு குணசேகரன் என்ன பதில் சொல்லப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்போடு சீரியல் முடித்து இருந்தனர்.

அதே நேரத்தில் இன்று வெளியான ப்ரோமோவில் ஒரு வீட்டில் நந்தினி வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது அந்த வீட்டினர் அங்கு விருந்தினராக வந்த நந்தினியின் அப்பாவிடம் நாங்கள் வீட்டு வேலைக்கு புது ஆள் ஒருவர் வைத்துவிட்டோம் என்று சொல்லி நந்தினியை கூப்பிட அங்கே நந்தினியை பார்த்ததும் நந்தினியின் அப்பா அதிர்ச்சி ஆகிறார்.
அதைத் தொடர்ந்து குணசேகரன் வீட்டில் கிருஷ்ணா அமர்ந்து இருக்க அங்கு வரும் ஜனனி அவரிடம் உங்களுக்கும் எங்களுக்கும் இருக்கிறது பிசினஸ் பிரச்சனை. அதை இங்க வச்சு பேச வேண்டிய அவசியம் இல்ல. முதல்ல இங்கிருந்து கிளம்புங்க என்று விரட்ட, அதற்கு கோபமான குணசேகரன் நீ என்ன வெளியே போக சொல்றது..? நாலே நாலு புடவையை கக்கத்துல எடுத்துட்டு வந்தவன் நீ...
இது எவ்வளவு பெரிய குடும்பத்து பிள்ளை, நீ வெளியே போக சொல்லுறியா..? என்று மிரட்டுகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கும் நிலையில் குணசேகரனுக்கு ஆதரவாக புதிய வில்லனும், களமிறங்கி இருக்கும் நிலையில் இனி இவர்கள் இருவருடைய பிரச்சனையையும் சமாளித்து ஜனனி எப்படி வீட்டுப் பெண்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு போகிறார் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது.
அதே நேரத்தில் ஏற்கனவே கேட்டரிங் பிசினஸ் தொடங்கிய நந்தினிக்கு குணசேகரன் முட்டுக்கட்டை போட்டு இருந்தார். இப்போது வீட்டு வேலைக்கு போய் இருக்கும் நந்தினிக்கு அங்கு அவருடைய அப்பாவே பிரச்சனையாக வந்திருக்கிறார். இதனால் இனி சீரியலில் கதை விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications