தர்ஷினியை கடத்தியது யார்? பெண்கள் கண்டுபிடித்த உண்மை.. விட்டுட்டு போன ஜீவானந்தம்.. கடைசியில் தான் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பிப்ரவரி மூன்றாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதோடு ஸ்பெஷல் ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது. அதில் தர்ஷினியை கண்டுபிடிப்பதற்காக ஜனனி, ஈஸ்வரி, நந்தினி, ரேணுகாவோடு சென்ற ஜீவானந்தத்தை போலீசார் அதிரடியாக கைது செய்து இருக்கின்றனர்.

ஏற்கனவே எதிர்நீச்சல் பெண்களுக்கு ஆதரவாக இருந்த சக்திக்கு ஆக்சிடென்ட் ஆகி இருக்கும் நிலையில் இப்போது துணைக்கு வந்த ஜீவானந்தத்தையும் போலீசார் கைது செய்து விட்ட நிலையில் இப்போது தர்ஷினி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை பெண்களே கண்டுபிடித்து இருக்கின்றனர். அதே நேரத்தில் மருத்துவமனையில் இருக்கும் சக்தியை பார்ப்பதற்காக கதிர் வந்திருந்த நிலையில் அவருக்கு சக்தி அதிர்ச்சி கொடுக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

 Ethirneechal Serial 2023 february 3rd promo Who kidnapped Darshini?

அந்த வகையில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி எதிர்நீச்சல் சீரியலில் கதை வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. தர்ஷினி கடத்தப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்ப வரைக்கும் தர்ஷினியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும் அதற்கு சரியான நேரம் இப்போது வந்திருக்கிறது.

அதாவது எதிர்நீச்சல் பெண்கள் தாங்களாகவே முன்னுக்கு வருவது போன்றுதான் கதை இருந்து வருகிறது. ஆனால் இத்தனை நாட்களாக சக்தி இந்த பெண்களுக்கு துணையாக இருந்தார். ஆனால் கடந்த சில எபிசோடுகளுக்கு முன்பு சக்திக்கு ஆக்சிடென்ட் ஆகி அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார். அதற்கு பிறகு நேற்று முன்தினம் எபிசோடில் எதிர்நீச்சல் பெண்களுக்கு சில ஆண்களால் பிரச்சனை வந்த போது அந்த இடத்திற்கு ஜீவானந்தம் வந்து யாரும் எதிர்பார்க்காமல் உதவி செய்திருந்தார்.

 Ethirneechal Serial 2023 february 3rd promo Who kidnapped Darshini?

ஆனாலும் அதுவும் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வந்தது. அதாவது ஜீவானந்தம் ஹீரோவாக வருவதற்காக தான் சக்தியை மருத்துவமனையில் அட்மிட் ஆக்கி விட்டார்களா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர். ஏற்கனவே இது போலத்தான் எதிர்நீச்சல் பெண்கள் தங்களுடைய பிசினஸில் அடுத்த அடி எடுத்து வைக்கும் போது சக்திக்கு அம்மை போட்டு இருந்தது. அதுபோல இப்போதும் கதாநாயகனை மருத்துவமனையில் படுக்க வைத்து விட்டு இயக்குனர் ஜீவானந்தமாக கெத்து காட்டுகிறார் என்று அனைவரும் ஃபீல் பண்ணி வந்திருந்தனர்.

 Ethirneechal Serial 2023 february 3rd promo Who kidnapped Darshini?

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோ வேற லெவலில் இருக்கிறது. அதாவது குணசேகரன் ஏற்கனவே கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக எதிர்நீச்சல் பெண்கள் மற்றும் ஜீவானந்தத்தை தேடி போலீஸ் வந்திருக்கிறது. அப்போது பெண்கள் எல்லோரும் ஒளிந்து கொள்ள அந்த இடத்தில் ஜீவானந்தத்தை போலீசார் கூப்பிட்டு போகின்றனர். அதைத்தொடர்ந்து எதிர்நீச்சல் பெண்கள் தைரியமாக அதுவும் தர்ஷினியை அடைத்து வைத்திருக்கும் வீட்டை கண்டுபிடித்து விட்டனர்.

 Ethirneechal Serial 2023 february 3rd promo Who kidnapped Darshini?

இப்படியான நிலையில் இன்னொரு ஸ்பெஷலான ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது. அதில் மருத்துவமனையில் இருக்கும் சக்தியை பார்ப்பதற்காக கதிர் வந்திருக்கிறார். வந்த இடத்தில் வீட்டுப் பெண்கள் எல்லோரும் எங்கே என்று விசாரிக்க அதற்கு சக்தி நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் அவங்க கிடையாது. அவங்க ரொம்பவே தைரியமா இருக்காங்க.

 Ethirneechal Serial 2023 february 3rd promo Who kidnapped Darshini?

அவங்கள அவங்க போக்கிலையே விட்டுருங்க. தயவுசெய்து அவங்கள தொந்தரவு பண்ணாதீங்க என்று சொல்ல, அதற்கு கதிரும் சரி என்று தலையாட்டிக் கொண்டிருக்கிறார். ஆக மொத்தம் குணசேகரனுக்கு எதிராக தம்பிமார்களும் திரும்பி விட்டார்கள். இப்போது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே தர்ஷினியை மீட்டுக் கொண்டு வர பெண்கள் மட்டுமே போயிருக்கின்றனர்.

இந்த நிலையில் தர்ஷினியும் இந்த இடத்தில் இருந்தால் கண்டிப்பாக நமக்கு உயிருக்கு ஆபத்து என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவரும் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதோடு தர்ஷினியை கடத்தி வைத்தது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியாமல் இருக்கும் நிலையில் இன்று இதற்கான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+