தர்ஷினியை தேடி போய் மாட்டிய ஈஸ்வரி குரூப்.. ஆனால் காப்பாற்ற போறது யாருன்னு பாருங்க! செம டுவிஸ்ட்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பிப்ரவரி 5ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட் கிடைத்திருக்கிறது. அதாவது தர்ஷினியை காப்பாற்ற போன ஈஸ்வரி குரூப் ரவுடிகளிடம் மாட்டிக் கொள்ள கடைசியில் என்னதான் நடந்தது என்ற எதிர்பார்ப்பு வந்திருக்கிறது.
மற்றொரு பக்கத்தில் சக்தியிடம் கதிர் தான் திருந்தி விட்டேன் என்பதை சொல்லி தன்னுடைய அண்ணனுக்காக தான் இத்தனை நாட்கள் செய்த தப்பான வேலைகள் எல்லாவற்றையும் ஒத்துக்கொள்கிறார் இதனால் இன்றைய காட்சிகள் அனல் பறக்க போகிறது... அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் தர்ஷனியை கடத்தி கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் எப்போதான் தர்ஷனியை கண்டுபிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் எதிர்நீச்சல் பெண்களுக்கு துணையாக ஆரம்பத்தில் சக்தி இருந்த நிலையில் கடைசியில் அவருக்கும் எதிர்பாராத விதமாக கார் ஆக்ஸிடெண்ட் வருவது போல காட்சிகளை வைத்ததும் இனி பெண்களின் நிலைமை அவ்வளவுதானா என்று ரசிகர்கள் நினைத்து இருந்த நிலையில் தான் ஜீவானந்தம் என்ட்ரி கொடுத்தார்.

அவரும் ஆபத்திலிருந்து எதிர்நீச்சல் பெண்களை காப்பாற்றி விட்டு பிறகு இந்த வழியா போனீங்கனா தான் தர்ஷினியை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டு போலீஸோடு சென்றுவிட்டார். போலீஸ் தன்னை கைது செய்ய வந்ததும் பெண்களை லாவகமாக அங்கிருந்து தப்பி போக வைத்துவிட்டு ஜீவானந்தம் போய்விட்ட நிலையில் எப்படி இனி எதிர்நீச்சல் பெண்கள் மட்டும் அங்கிருக்கும் ரவுடிகளோடு சண்டை போட்டு தர்ஷனியை காப்பாற்றப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தது.
இப்படியான நிலையில் தான் இன்றைய எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் தர்ஷினி அவரை அடைத்து வைத்திருந்த ரவுடிகளிடம் இருந்து தப்பி காட்டுக்குள் ஓடி வந்து கொண்டிருக்கிறார். அவரை இரண்டு ரவுடிகள் துரத்திக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கத்தில் ஜீவானந்தம் சொன்ன மாதிரியே அதே பாதையில் போய் அங்கிருந்த காப்பி எஸ்டேட்டை எதிர்நீச்சல் பெண்கள் கண்டுபிடித்து விட்டனர்.

அதோடு அங்கு சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும்போது தர்ஷினி ஏற்கனவே என்னை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள் காப்பாற்றுங்கள் என்று எழுதிய கடிதத்தை பார்த்து விடுகிறார்கள். இதை பார்த்ததும் எல்லோரும் கதறி அழுது கொண்டு இருக்கின்றனர். மறுபக்கத்தில தர்ஷினி காட்டுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறார். ஒரு இடத்தில் நின்று மறைந்து இருந்து பார்ப்பது போன்ற காட்சி இருக்கிறது.
அது தன்னைத் தேடி சித்தி அம்மா எல்லாரும் வந்துருப்பதை பார்க்கிறாரா? அல்லது வேறு இடத்திற்கு ஓடிப் போவதற்கு சரியான பாதையை பார்க்கிறாரா என்று தெரியவில்லை. ஆனாலும் இதில் ஒரு சின்ன லாஜிக் மிஸ்டேக் இருக்கத்தான் செய்கிறது. அதாவது தர்ஷினி ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக இருக்கிறார். ஆனால் தன்னை அடைத்து வைத்திருக்கும் ரவுடிகளிடம் அதை காட்டாமல் இருக்கிறார்.
தனக்கு குத்துச்சண்டை தெரியும் என்பதை தர்ஷினி மறந்துவிட்டாரா என்று தான் யோசிக்க வைக்கிறது. ஏற்கனவே ரோட்டில் வைத்து ஜான்சி ராணி கரிகாலன் பைக்கில் தர்ஷினியை ஏற்றுவதற்கு முயற்சி செய்யும்போது கூட தனக்கு தெரிந்த வித்தையை வைத்து ஜான்சி ராணி முகத்தில் ஒரு பஞ்ச் கொடுக்காமல் அந்த இடத்திலும் அழுது கொண்டிருந்தார். அங்கு தர்ஷன் வந்து தான் காப்பாற்றினார். அதனால் இன்று ஓடிக்கொண்டே இருக்கும் தர்ஷினி இப்படியே ஓட போகிறாரா?

அல்லது தர்ஷினியை காப்பாற்ற போய் அந்த ரவுடிகளிடம் தன்னுடைய அம்மா சித்தி எல்லாம் மாட்டிக் கொண்ட போது அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனக்கு தெரிந்த பாதுகாப்பு கலைகளை பயன்படுத்தி அங்கிருந்து குடும்பத்தோடு தப்புவார்களா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. எதிர்நீச்சல் பெண்களின் கையில் எந்த ஆயுதங்களும் இல்லாமல் அந்த எஸ்டேட்டுக்கு போயிருக்கின்றனர்
அங்கிருக்கும் ரவுடி இடம் துப்பாக்கி எல்லாம் இருக்கிறது இவர்களிடமிருந்து எப்படி தர்ஷினியோடு வெளியே வரப் போகிறார்கள் என்று பார்ப்போம். எப்படியும் இன்றைய எபிசோட்டில் இதற்கான முழு காட்சிகளும் இருக்காது. இந்த வாரம் முழுக்க இதற்கான காட்சிகள் போய்க் கொண்டே இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல சக்தியை மருத்துவமனைக்கு வந்து பார்க்க வந்த கதிர் நான் இத்தனை நாட்களாக எல்லா தப்பும் அந்தாளுக்காக தானடா பண்ணுனேன் என்று என்று குணசேகரனை பற்றி பேசி கதறி அழுது கொண்டிருக்கிறார். இதனால் தான் அண்ணனுக்காக செய்த தப்புகளை எல்லாம் சொல்லி இவர் போலீசில் சரணடைய போகிறாரா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications