எதிர்நீச்சல்:குணசேகரனுக்கு எதிராக திரும்பிய கதிர்.சக்தி போட்ட ஒரே போடு..ஜனனி நிலைமை இனி அவ்வளவுதானா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் ஜனவரி 20ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் காணாமல் போன தர்ஷினி பற்றி குணசேகரன் சொன்ன வார்த்தையை கேட்டு கதிர் அதிர்ச்சியாகி அண்ணனுக்கு எதிராக பேசியிருக்கிறார். ஏற்கனவே நந்தினியை குணசேகரன் மரியாதை இல்லாமல் பேசியதற்கு இனி இப்படி பேசாதீங்க என்று வார்னிங் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் இப்போது தர்ஷினிக்கு ஆதரவாகவும் கதிர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதே நேரத்தில் தர்ஷினியை யார் கடத்தி இருப்பார்கள் என்ற கேள்விகள் அனைவருக்கும் வருகிறது. அந்த நேரத்தில் மீண்டும் ஜீவானந்தத்தை சீரியலில் கொண்டு வருவதற்காக இன்று வெளியான ப்ரோமோவில் ஜனனி சாருலதாவிடம் ஜீவானந்தம் போன் நம்பர் கேட்டிருக்கிறார். இதனால் இனி கதை விறுவிறுப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் கதை இப்போது வேகம் எடுத்து இருக்கிறது. இதுவரைக்கும் குணசேகரன் தான் ஒவ்வொரு இடத்திலும் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து ஜனனி ஒவ்வொரு இடத்திலும் சவால் விட்டுக் கொண்டிருந்தாலும் கடைசியில் எதுவும் சாதிக்கவில்லை. இதனால் ரசிகர்களுக்கு இந்த சீரியல் மீது சமீபகாலமாக அதிருப்தி ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இப்போது சீரியலில் கதை வேகம் எடுத்து இருக்கிறது. அதாவது குணசேகரனுக்கு எதிராக சக்தி ஏற்கனவே ஜனனி குரூப்போடு சேர்ந்து விட்டார். இப்போது கதிரும் கட்சி மாறி இருக்கிறார். நேற்றைய எபிசோடில் கூட தர்ஷினி காணாமல் போனதால் கடும் கோபத்தில் இருந்த சக்தி கரிகாலனையும் ஜான்சி ராணியும் அடித்து துவம்சம் செய்திருந்தார்.

அப்போது கூட விசாலாட்சி பெத்தவனே சும்மா இருக்கும்போது நீ என்னடா துள்ளுற என்று கேட்டபோது நான் பெக்கல ஆனாலும் தர்ஷினி என்னுடைய பொண்ணு என்று மாஸாக பேசி விசாலாட்சி வாயையும் சக்தி அடைக்க வைத்திருந்தார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ஜனனி சார்லதாவுக்கு போன் போட்டு தர்ஷினியை யாரோ கடத்திட்டாங்க மேம், நீங்க ஜீவானந்தம் சாரோட நம்பர் எனக்கு சென்ட் பண்றீங்களா என்று கேட்டிருக்கிறார்.
ஏற்கனவே தர்ஷினி கோவில் திருவிழாவில் வைத்து நான் உங்களை அப்பா என்று கூப்பிடவா என்று ஜீவானந்தத்தோடு எமோஷனலாக கனெக்ட் ஆகி இருப்பார். இதனால் இனி தர்ஷினியை கண்டுபிடிப்பதற்காக ஜீவானந்தம் களம் இறங்குவாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பார்த்தால் ஜீவானந்தம் வந்து தர்ஷினியை கண்டுபிடிக்கும் போது தர்ஷினியை ஜான்சி ராணி ஆள் வைத்து கடைசி இருக்க வாய்ப்பு இல்லை.
ஏதோ ஒரு புதிய வில்லன் தான் தர்ஷினியை கடத்தி இருக்க வேண்டும். ஏற்கனவே கதிரை அடியாட்கள் அடித்து கைகால் ஒடித்து விட்டிருந்த நிலையில் அது யார் என்று இப்ப வரைக்கும் தெரியாமல் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் போலீஸ் ஸ்டேஷனில் ஜான்சி ராணி மற்றும் கரிகாலனை போலீஸ்காரர்கள் போட்டு அடித்து துவம்சம் செய்ய அங்கு வரும் குணசேகரன் நீங்க எப்படி இவர்களை அடிக்கலாம் என்று கேள்வி கேட்டு முதல்ல அந்த ஜீவானந்தத்தை பிடிங்க அவன் தான் என் பொண்ண கடத்திருக்கணும் என்று கதையை மாற்றி விடுகிறார்.

அதோடு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கரிகாலனையும் ஜான்சி ராணியையும் வெளியே கூட்டிட்டு வந்ததும் கரிகாலனிடம் குணசேகரன் என் பொண்ணை உனக்கு தான் கல்யாணம் பண்ணி கொடுப்பேன் என்று சொல்ல, அப்போது கதிர் கண் கலங்கியபடி அவ சின்ன குழந்தைன்னா, அவளுக்கு போய் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்றியே? அது தப்பு என்று சொல்ல,

அப்போது குணசேகரன் என்னடா நீ மாறி மாறி பேசிட்டு இருக்கியா? என்று கோபப்படுகிறார். இதனால் இன்னிக்கு கதிர் கட்சி மாறி தர்ஷினிக்கு ஆதரவாக நிற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை கமெண்ட்ல சொல்லிட்டு போங்க.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications