சக்திக்கு திடீர் ஆக்சிடென்ட்.. குணசேகரன் சொன்ன வார்த்தை.. வெளிவந்த உண்மை.. எதிர்பாராத சீரியல் முடிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனவரி 29ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சக்திக்கு ஆக்சிடென்ட் நடந்து இருக்கிறது. வீட்டுப் பெண்கள் எல்லோரும் தர்ஷினியை தேடிப்போய் இருக்கும் நிலையில் சக்திக்கு ஆக்சிடென்ட் ஆனதால் வீட்டு மருமகள்கள் அதிர்ச்சியில்
இருக்கின்றனர்.
அதே நேரத்தில் வீட்டு பெண்கள் தர்ஷினியை தேடிக் கொண்டிருப்பதை வைத்து குணசேகரன் எப்போதும் போல அலட்சியமாக பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் எதிர்பாராத திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் கதையில் புதுப்புது பிரச்சனைகள் நாளுக்கு நாள் வந்து கொண்டே இருக்கிறது. இதற்கு ஒரு என்டே கிடையாதா என்று சொல்கிற மாதிரிதான் எதிர்நீச்சல் சீரியலில் இப்போது கதைக்குள் கதை என்கிற போது பிரச்சனைக்குள் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது.
ஒரு பிரச்சனை முடிவே வராத நிலையில் அடுத்த பிரச்சனை வந்து பார்க்கும் ரசிகர்களையும் எரிச்சல் அடைய வைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே ஆதிரை பிரச்சனை ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு இருக்கிறது. அதை தொடர்ந்து ஈஸ்வரியும் குணசேகரனும் எலக்ஷனில் நிற்கின்றனர். அதுவும் முடிவுக்கு வரவில்லை...
அதே நேரத்தில் கதிரை மர்ம நபர்கள் சிலர் அடித்து கைகால் உடைத்து இருக்கின்றனர். அது பற்றிய உண்மையும் தெரியவில்லை. அப்பத்தா காணாமல் போனார் அதுவும் என்ன ஆச்சு என்று தெரியவில்லை.. இப்படியான நிலையில் இப்போது தர்ஷினியை யாரோ கடத்திருக்கிறார்கள். இதுவும் யார் என்னவென்று தெரியாமல் இருக்கும் நிலையில் அடுத்ததாக இன்று வெளியான ப்ரோமோவில் சக்தியை ஒரு கார் ஆக்ஸிடெண்ட் செய்கிறது.
தண்ணீர் குடித்தபடியே சக்தி ரோட்டை கடக்கும்போது கார் இடிக்கிறது.. இது எதார்த்தமாக நடந்ததா அல்லது வேண்டுமென்றே நடந்த ஆக்ஸிடென்ட்டா என்று இன்றைக்கு எபிசோடில் தான் தெரியவரும். ஒரு பக்கத்தில் குணசேகரன் தன்னுடைய மகள் காணாமல் போய் இருக்கிறார் ஆனாலும் கொஞ்சம் கூட பதட்டமில்லாமல், இந்த வீட்டு பெண்கள் எங்கன்னு கேட்டா நாங்க அங்க இருக்கிறோம் இங்க இருக்கிறோம்னு சொல்லிக்கிட்டு இருக்குறாங்க...
ஆனா அவளுக எங்க இருப்பாளுகன்னு எனக்கு தெரியும் என்று வழக்கம்போல குதர்க்கமாக பேசிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் தர்ஷினியை கடத்தி கொண்டு போன கார் நம்பரை வைத்து அந்த காரின் உரிமையாளரின் அட்ரஸை கண்டுபிடித்தாச்சு என்று சக்தி மொத்த குடும்ப பெண்களையும் கூட்டிக்கொண்டு போயிருந்த நிலையில் கடைசியில் அது பொய்யான அட்ரஸ் என்று தெரிய வருகிறது.
அங்கிருந்த ஆட்களிடம் சக்தி நீங்க ஒரு பொண்ண கடத்திக்கொண்டு வந்துட்டு தெரியாதுன்னு நடிச்சிட்டு. இருக்கீங்களா என்று மிரட்டுகிறார் ஆனால் அங்கு இருப்பவர்கள் எல்லாருமே வயதானவர்கள் ஆகவும் ஒன்னும் தெரியாதவர்களாகவும் தான் இருப்பது போன்று தெரிகிறது. இதனால் இவர்கள் தர்ஷினியே காப்பாற்றுவார்களா இல்லையா என்ற கேள்வியை பெரியதாக வருகிறது.

அதற்குள் இப்போது சக்திக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது. இனி தர்ஷினி கதையை விட்டு விட்டு இந்த வாரம் முழுக்க இனி சக்தி உயிர் பிழைப்பாரா இல்லையா என்ற ஹைப்பில் இயக்குனர் கதையை ஓட்டப் போகிறார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications