எதிர்நீச்சல்: சக்தியை விட்டு போகும் ஜனனி.. குணசேகரன் போடும் புது பிளான்.. தர்ஷினியை கடத்தியது இவரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜனவரி 30 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தர்ஷினியை காப்பாற்ற போன இடத்தில் சக்திக்கு ஆக்சிடெண்ட் ஆகி இருக்கும் நிலையில் இப்போது சக்தி மருத்துவமனையில் இருக்கிறார். ஆனால் ஜனனி தான் தர்ஷினியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சக்தியை மருத்துவமனையில் விட்டு விட்டுப் போகிறார்.

அதே நேரத்தில் குணசேகரன் தன்னுடைய மகளை ஜீவானந்தம் தான் கடத்தி வைத்து இருக்கிறார் என்று கிருஷ்ணசாமி மெய்யப்பன் மற்றும் அவருடைய அண்ணன் ராமசாமி மெய்யப்பனிடம் சொல்லிக் கொண்டு தன்னுடைய மகளை காப்பாற்ற வேண்டும் என்று புது பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.

Ethirneechal Serial 2023 January 30th promo who kidnapped Darshini?

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத அடுத்தடுத்த புது பிரச்சனைகளும், திருப்பங்களும் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் தர்ஷினியை சிலர் கடத்திக் கொண்டு போயிருந்தனர். தர்ஷினியை கடத்தியது யார் என்று இப்ப வரைக்கும் தெரியாமல் இருக்கிறது.

அதே நேரத்தில் தர்ஷினியை காப்பாற்ற வேண்டும் என்று வீட்டு பெண்கள் தனியாக சக்தியை தேடி திரிந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நேற்று சக்திக்கும் ஆக்சிடென்ட் ஆகிவிட்டது. சக்தியை ஆக்சிடென்ட் செய்தவர்கள் யார் என்னவென்று தெரியவில்லை. ஆனால் சக்தி இப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இனி ஆண் துணை இல்லாமல் பெண்கள் பெரிய போராட்டத்திற்கு பிறகு தர்ஷினியை கண்டுபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் தர்ஷினியை கடத்தி வைத்திருந்த ஆண்கள் ஒரு பெண்ணிடம் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தனர். அதனால் ஒருவேளை தர்ஷினியை கடத்தி வைத்தது ஜான்சி ராணி ஆகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கரிகாலனை வேண்டாம் என்று ஆதிரை போய்விட்ட நிலையில் தர்ஷினியை குணசேகரன் கரிகாலனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

Ethirneechal Serial 2023 January 30th promo who kidnapped Darshini?

ஆனால் இப்ப வரைக்கும் தர்ஷினி கரிகாலனை திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருக்கின்றார். இதனால் தர்ஷினியை ஜான்சி ராணி கடைசி வைத்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்து வருகிறது. அந்த சந்தேகம் வலுக்கிற மாதிரி தான் சில நாட்களாக குணசேகரன் வீட்டுக்குள்ளும் ஜான்சி ராணி காணாமல் இருக்கிறார்.

அதே நேரத்தில் ஒருவேளை ஜான்சி ராணி தர்ஷினியை கடத்தவில்லை என்றால் புதியதாக ஒரு வில்லி அறிமுகமாக போகிறாரா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியலில் எதிரிகளுக்கு பஞ்சமே இல்லாமல் தான் புதியது புதியதாக ஒவ்வொரு எதிரிகளாக வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்றைய ப்ரோமோவில் கூட மருத்துவமனையில் இருக்கும் சக்தியை பார்த்துக் கொள்வதற்காக ஈஸ்வரி ஜனனி இடம் சொல்ல, அதற்கு ஜனனி இல்லக்கா நாம நான்கு பேரும் சேர்ந்து தான முதலில் தர்ஷினியை தேட தொடங்கினோம்.

Ethirneechal Serial 2023 January 30th promo who kidnapped Darshini?

அது எந்த விதத்திலும் தடைப்படக்கூடாது, நாம எப்படியும் சேர்ந்து தர்ஷினியை தேடி கண்டுபிடித்து விட வேண்டும் என்று அங்கிருந்து கிளம்புகிறார். அதே நேரத்தில் வீட்டில் குணசேகரன் தன்னுடைய தம்பிகளை நம்பாத குணசேகரன் ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி இடம் என்னுடைய மகளை ஜீவானந்தம் தான் கடத்தி வைத்திருக்கிறான். அவனுக்கு துணையாக அந்தச் சாருலதா இருக்கிறார். அவங்களை பழிவாங்கணும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் இன்றைய எபிசோடில் செம திரில்லர் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+