எதிர்நீச்சலில் சூப்பர் திருப்பம்.. அடுத்தடுத்து 7 பிரச்சனைகள்.. ஜனனி சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் சக்தி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனவரி 4ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே ஜனனி மற்றும் சக்தி இருவரும் ஒன்றாக சேர்ந்து தங்களுடைய குடும்ப வாழ்க்கையை தொடங்கி இருக்கின்றனர்.
அதே நேரத்தில் சீரியலில் இதுவரைக்கும் குணசேகரன் மட்டுமே ஜெயித்துக் கொண்டு இருந்த நிலையில் இப்போது ஜனனியும் அவரை சார்ந்த பெண்களும் குணசேகரனை எதிர்த்து ஜெயிக்க தொடங்கி இருக்கின்றனர்.
அந்த வகையில் ஆதிரை தன்னுடைய அண்ணன்களே தனக்கு பிடிக்காத கல்யாணத்தை நடுத்தெருவில் வைத்து செய்து வைத்தனர் என்று அண்ணன்கள் மூன்று பேர் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் மேலும் சில சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதாவது எதிர்நீச்சல் சீரியலில் தற்போது ஜனனியின் அம்மா சக்தியின் துணையோடு குணசேகரன் வீட்டில் தங்கி இருக்கிறார். ஜனனிக்காக சக்தி செய்யும் செயல்களை பார்த்து சக்தி மீது தான் வைத்திருக்கும் காதலை உணர்ந்த ஜனனி சக்தியிடம் தன்னுடைய காதலை தெரிவித்து இருக்கிறார்.

ஏற்கனவே குடும்பத்தை வேண்டாம் என்று விட்டு விட்டு தன்னுடைய காதலிக்காக (ஜனனியின் அம்மாவிற்காக) குடும்பத்தை பிரிந்த ஜனனியின் அப்பா தற்போது குடும்பத்தின் மீது இருந்த பாசத்தினால் ஜனனியின் அம்மாவை பிரிந்து மீண்டும் தன்னுடைய குடும்பத்தோடு சேர்ந்து இருக்கிறார்.
இதனால் ஜனனியின் அம்மா தனியாக இருக்க சக்தி அவரை இந்த நேரத்தில் தனியாக விட்டால் சரிப்பட்டு வராது என்று தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். ஆனால் இது பிடிக்காத விசாலாட்சி முதலில் அவரை வீட்டை விட்டு வெளியே போக சொல்லு என்று மிரட்டினார். ஆனால் அதற்கு சக்தி அவங்களை வெளியே போக சொன்னா நானும் வெளியே போய் விடுவேன் என்று மிரட்டி சண்டை போட்ட பிறகு விசாலாட்சி அமைதியாகி விடுகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கத்தில் இன்று வெளியான ப்ரோமோவில் ஜனனி சக்தியிடம் எனக்கு எல்லாம் நீ என்ன பண்ணிட போறன்னு யோசித்து இருக்கிறேன். ஆனால் உன் குடும்பமும் என் குடும்பம் தான்னு அனைவரையும் நீ எதிர்த்தல ... அப்போ தான் உன்ன பத்தி நான் புரிஞ்சுகிட்டேன்.

மயக்கம் இருக்குன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தயக்கம் தேவையில்லைன்னு தோணுச்சு அதான் சொல்லிட்டு நீ என் சோல் மேட் என்று பேசிக் கொண்டிருக்கும்போது நீ சாதாரணமாக ஒரு வார்த்தை சொன்ன அதை நான் சாகுற வரைக்கும் மறக்க மாட்டேன் என்று ரொமான்டிக்காக பேசிக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்நீச்சல் சீரியல் ஒரு மணி நேர ஸ்பெஷல் எபிசோடு வெளியாக இருக்கிறது. அதற்கான ஸ்பெஷல் ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது. அதில் ஜனனி தான் அடுத்தடுத்து நான்கு பிரச்சனைகளை சந்திக்க போவதாக கூறி இருக்கிறார். ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் இப்போதைக்கு ஏழு பிரச்சனைகள் இருக்கிறது. அதாவது முதல் பிரச்சனையாக எலக்சன் இருக்கிறது. அதில் குணசேகரன் ஜெயிக்கப் போகிறாரா? அல்லது ஈஸ்வரி ஜெயிக்கப் போகிறாரா என்று பார்க்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து ஆதிராயின் இரண்டாவது திருமணம் அருணோடு எப்படி நடக்க போகிறது என்று ஜனனி பார்க்க வேண்டும். அதைத் தொடர்ந்து தர்ஷினி கரிகாலன் மேரேஜ் பிரச்சனையும் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஜீவானந்தம் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதுபோல அப்பத்தா இறந்து போனது போல ஏற்கனவே காட்டியிருக்கும் நிலையில் அவர் எப்போது இனி மீண்டும் வருவார் என்ற காட்சிகளும் இருக்கிறது.

அதைத்தொடர்ந்து ஜனனிக்கு கம்பெனியில் பிரச்சனை அதுமட்டுமல்லாமல் குணசேகரன் முக்கிய பிரச்சனையாகவும் இருக்கிறது. இந்த ஏழு பிரச்சனைகளையும் ஜனனி முடித்தால்தான் சீரியலில் சுவாரசியம் இருக்கும். இதுவரைக்கும் எந்த இடத்திலுமே ஜெயிக்காத ஜனனி குரூப் இப்போது நாங்கள் எல்லா இடத்திலும் ஜெயித்தது போல இனிவரும் பிரச்சனைகளிலும் ஜெயிப்போம் என்று ப்ரோமோவில் வீர வசனம் பேசி இருக்கின்றனர். இதனால் என்ன சாதனை செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications