நந்தினிக்காக குணசேகரனை எதிர்த்து பேசிய கதிர்.. எலக்ஷனில் வெற்றி யாருக்குத் தெரியுமா? செம முடிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனவரி எட்டாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் முதல் முறையாக நந்தினிக்காக அனைவர் முன்பும் குணசேகரனை கதிர் எதிர்த்து பேசி இருக்கிறார். தன்னுடைய மனைவியை வாடி போடி என்று குணசேகரன் பேசக்கூடாது என்று கதிர் சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
கதிருக்கு கை கால்களில் அடிபட்டு படுத்த படுக்கையாக இருந்தபோது நந்தினி தான் அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். இந்த நிலையில் இன்று அனைவருடைய முன்பும் வைத்து தன்னிடம் கேள்வி கேட்ட நந்தினியை குணசேகரன் வாடி போடி என்று பேச அதனால் கதிர் கோபமாகி இருப்பதை பார்த்ததும் ரசிகர்கள் இப்பவாவது கதிருக்கு சுய புத்தி கொஞ்சம் வர தொடங்கி இருக்கிறது என்று கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
அதேபோல விசாலாட்சியின் தம்பி அதாவது குணசேகரனின் சாமியார் மாமாவிடம் குணசேகரன் இந்த எலெக்ஷனில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று கேள்வி கேட்க அதற்கு அவர் ஒரு பதிலை சொல்லி இருக்கிறார். அதைக் கேட்டு குணசேகரன் பயங்கரமாக கோபமாகி இருக்கிறார். அப்படி என்னதான் நடந்தது என்பதை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பல அடுத்தடுத்த மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதுவரைக்கும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தான் ஒவ்வொரு இடத்திலும் ஜெயித்துக் கொண்டிருப்பார். ஜனனி குரூப் எப்போதும் வாய் சவடால் விட்டு சபதம் போட்டுக் கொண்டேதான் இருப்பார்களே தவிர ஒரு இடத்தில் கூட ஜெயித்தது கிடையாது.
இதனால் ரசிகர்களுக்கு இந்த சீரியலின் மீது அதிருப்தி ஏற்பட்டு இருந்தது... இப்படியான நிலையில் இப்போது ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இந்த சீரியலின் போக்கு மாறத் தொடங்கி இருக்கிறது.. ஏற்கனவே குணசேகரனுக்கு எதிராக அப்பத்தாவின் கேஸை மீண்டும் விசாரிக்க கூறி சக்தி மற்றும் ஜனனி கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கின்றனர்.

அதை தொடர்ந்து ஆதிரையும் தனக்கு விருப்பம் இல்லாத கல்யாணத்தை நடத்தி வைத்ததற்காக குணசேகரன், கதிர் மற்றும் ஞானம் மூவர் மீதும் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார். இப்படியான நிலையில் குணசேகரன் ஈஸ்வரியை எதிர்த்து இப்போது எலக்ஷனில் நிற்கிறார். அதில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குணசேகரன் வீட்டுக்கு அவருடைய தாய் மாமா வந்திருக்கிறார். அவரிடம் குணசேகரன் இந்த எலக்ஷனில் யார் ஜெயிப்பாங்க என்று கேட்க, அதற்கு அவர் ஏற்கனவே இந்த வீட்டு மருமகளுங்க கிட்ட இதுக்கு நான் பதில் சொல்லிட்டேன் என்று சொல்ல, அதற்கு கோபமான குணசேகரன் ஓவரா ஆடாதீங்க என்று சொல்கிறார். அதற்கு நந்தினி இப்ப என்ன ஆடிட்டோம் என்று கேள்வி கேட்க அதற்கு பயங்கர கோபத்தில் குணசேகரன் வாய மூடுடி என்று கத்துகிறார்.

இதற்கு கதிர் அண்ணே.... என்று சத்தம் போட்டு வாடி போடின்னு எல்லாம் பேசாதீங்க என்று கோபமாக சொல்ல குணசேகரன் அதிர்ச்சியாகி எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து எழுந்து போகிறார். அப்போது விசாலாட்சி குணசேகரனை சமாதானம் செய்ய பார்க்கின்றனர். இதை பார்த்து நந்தினி ஜனனி என வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர்.
இந்த நிலையில் கதிர் உண்மையில் மன மாற்றம் அடைந்திருக்கிறாரா? அல்லது ஏற்கனவே குணசேகரன் கதிரை வேட்டை நாய் என்று சொன்னபோது அதற்கு கோபப்பட்டு பேசிய நந்தினியை குணசேகரனை அடித்த போதும் ஆரம்பத்தில் பில்டப் செய்த போல நந்தினிக்காக சப்போர்ட் செய்துவிட்டு பிறகு நந்தினியை நீங்க அடித்து இருக்கக்கூடாது கொன்னே போட்டு இருக்கணும் என்று பேசியது போல இப்போதும் பல்டி அடிக்க போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications