எதிர்நீச்சல்: சொத்து விஷயத்தில் குணசேகரனுக்கு அதிர்ச்சி கொடுத்த மருமகள்கள்.. பரபரப்பின் உச்சம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சாக அவரைப் போலவே நந்தினி மிரட்டுகிறார்.
அதே நேரத்தில் வீட்டு மருமகள்களின் பெயரில் இருக்கும் கம்பெனிகளை தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொள்ள குணசேகரன் பிளான் போடுகிறார்.

ஆனால் குணசேகரின் பேச்சுக்கு ஜனனி அதிரடியான பதிலை கொடுத்து அதிர்ச்சி கொடுக்கிறார். இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த எதிர்ப்பாராத திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே அப்பத்தாவின் ஷேரில் 40% மருமகள்களுக்கு பங்கு இருக்கிறதா? இல்லையா? அதே நேரத்தில் ஜீவானந்தம் அப்பத்தாவின் ரேகையை எடுத்துக்கொண்டு சென்றிருப்பதால் இனி என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் இருக்கிறது.

குணசேகரனிடம் அப்பத்தாவின் ஷேர் விஷயத்தில் மருமகளுக்கு ஏதோ தொடர்பு இருக்கிறது ஆனால் அதைவிட ஏதோ ஒரு பிரச்சனையும் இருக்கிறது என்று ஆடிட்டர் அலார்ட் செய்கிறார். ஆனால் என்ன பிரச்சனை என்பது குணசேகரனுக்கு தெரியாததால் குழப்பத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் ஜீவானந்தம் இன்னும் இரண்டு நாளில் அப்பத்தாவில் 40% ஷேர் தன்னுடைய பெயருக்கு மாற வேண்டும் அதை கௌதம் தான் செய்ய வேண்டும் என்றும் கௌதமுக்கு டெஸ்ட் வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் ஜீவானந்தம் தன்னுடைய வீட்டிற்கு வந்த சிசிடிவி பூட்டேஜ் போட்டோவை ஜனனி மற்றும் சக்தி கௌதமிடமே காட்ட, அதில் ஜீவானந்தம் புகைப்படம் இருப்பதை பார்த்தது கௌதம் அதிர்ச்சியானாலும் தான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். எதற்காக இங்கே வந்தேன் என்று எந்த ரகசியத்தையும் ஜனனியிடம் கூறாமல் இருக்கிறார். அதனால் கௌதம் நல்லவரா? கெட்டவரா? என்ற ஒரு எதிர்பார்ப்பும் இனி என்ன செய்யப் போகிறார் என்ற குழப்பமும் அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது.

இந்த நிலையில் ஏற்கனவே குணசேகரன் வீட்டு மருமகள்களின் பெயரில் இருக்கும் கம்பெனியின் சொத்துக்கள் அனைத்தையும் உங்கள் பெயருக்கு மாத்தி விடுங்க என்று ஆடிட்டர் கூறி இருப்பதால் மருமகள்களிடம் இன்றைய ப்ரோமோவில் கையெழுத்து கேட்கிறார். ஆனால் அதற்கு நந்தினி நான் இப்போ கையெழுத்து போட மாட்டேன்னு சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க என்று கேட்க, அதற்கு ரேணுகா அவரால் எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது என்று நக்கல் அடிக்கிறார்.
அதே நேரத்தில் வீட்டிற்கு வரும் சக்தி இடமும் கையெழுத்து கேட்க அதற்கு ஜனனி கையெழுத்து போடாத சக்தி என்று சத்தியை தடுத்து நிறுத்த, குணசேகரன் கோபமாகி ஜனனியை திட்டுகிறார். அதற்கு ஜனனி உங்ககிட்ட பேசுறதுக்கு பயம்னு நினைச்சுகிட்டு இருக்கீங்களா? என்று குரலை உயர்த்தி பேச, கோபமான குணசேகரன் இங்க பாருங்க என்று கையை ஆட்டி அனைவரையும் வார்ன் செய்கிறார்.

அப்போது நந்தினி," இந்தாம்மா... ஏய்.. இந்த குணசேகரனுடைய இன்னொரு முகத்த பாப்பீங்க.." அதான் மாமா நீங்க சொல்ல போறீங்க என்று நக்கல் அடிக்க, அருகில் இருக்கும் ரேணுகா பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து கோபமான குணசேகரன் இனி என்ன செய்யப் போகிறார் என்று இன்றைய எபிசோட்டில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications