துப்பாக்கியோடு மிரட்டும் ஜீவானந்தம்.. வேட்டியை மடிச்சி கட்டி ஓடும் குணசேகரன்.. ஜனனி கேட்கும் கேள்வி
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு ஜீவானந்தம் பற்றிய உண்மைகள் தெரிய வந்திருக்கிறது.
இதுவரைக்கும் ஜீவானந்தம் குணசேகரனின் ஆள் என்று நினைத்துக் கொண்டிருந்த ஜனனிக்கு கடைசியில் அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் தற்போது வெளியான ஸ்பெஷல் ப்ரோமோவில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் அதிகமான ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஒரு சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் மாறிக்கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் எதிர்நீச்சல் சீரியல் பற்றி பல ரசிகர்கள் அடிக்கடி விவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த சீரியலுக்கான ப்ரோமோ எப்போது வெளியாகும் என்று பலர் காத்திருக்கின்றனர். அந்த வகையில் இன்றைய எபிசோடுக்கான ஸ்பெஷல் ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே இன்றைய எபிசோடுக்காக காலையில் ஒரு பிரமோ வெளியாகி இருந்தது. அதில் ஜீவானந்தத்தை பற்றி கேள்விப்பட்டதும் குணசேகரனும் கதிரும் ஆவேசமாக கம்பெனிக்கு வந்து பார்க்கின்றனர். அங்கே பர்ஹானா தன்னுடைய ஆட்களோடு அமர்ந்திருக்கிறார். அவரிடம் கதிர் தன் வீட்டில் பெண்களிடம் அதிகாரம் பண்ணுவது போல அதிகாரம் பண்ணிக் கொண்டிருக்க, இப்படி எல்லாம் இங்கே கத்தக்கூடாது என்று பர்ஹானா பேச, நீ என்ன இதெல்லாம் பேசுற என்று கதிர் பர்ஹானாவை அடிக்க பாய்கிறார்.

ஆனால் பர்ஹானா கதிருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவருடைய கையை முறுக்கி திருப்பி அடித்து விடுகிறார். இந்த நிலையில் அங்கு வரும் சக்தி மற்றும் ஜனனி இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து நீங்க தானே அப்பத்தா கைரேகை எடுத்துட்டு போனது..? உன் கூட வந்த ஆளை எங்கே? என்று கேட்டிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது இப்போது ஸ்பெஷல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் யாருடா அந்த ஜீவானந்தம் என் மொத்த சொத்துக்கும் எமனா வந்து நிற்கிறான். திடுதுப்புன்னு எங்கிருந்து வந்து என்ன தூக்கி சாப்பிடலாம் என்று நினைக்கிறான் அவன், என்று கம்பெனிக்கு வேகமாக வேட்டியை தூக்கி பிடித்துக் கொண்டு ஓடி வர அங்கு ஜீவானந்தம் கையில் துப்பாக்கியை வைத்து மேலே தூக்கி சுட்டபடி மிரட்டுகிறார்.
அதைப் பார்த்து ஜனனி இவ்வளவு நாளா நான் ஜீவானந்தம் மாமாவோட ஆள் என்று தான் நினைச்சேன். ஆனா இப்போ அவர பார்த்தா வேற மாதிரி இருக்கு. அப்போ உண்மையிலேயே இவரு யாரு? இவருக்கும் அப்பத்தாவுக்கும் என்ன சம்பந்தம் என்று புரியாத கேள்விகளை ஜனனி கேட்டுக் கொண்டிருக்கிறார். தற்போது இந்த பிரமோ இன்றைய எபிசோடுக்கான ஆர்வத்தை மேலும் அதிகரித்து இருக்கிறது.

-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications