எதிர்நீச்சல்: போலீஸ் ஸ்டேஷனில் ஜீவானந்தம் பேசும் வார்த்தை.. சட்டையை கழற்றி பரிதாப நிலையில் குணசேகரன்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ஜூலை 23ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குணசேகரின் பரிதாப நிலையை பார்த்து அதிகமான ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர்.
நியாயம் கேட்பதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு போன குணசேகரனுக்கு ஜீவானந்தம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்க்க முடியாத வகையில் சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அதனாலேயே இந்த சீரியலுக்கான பிரமோ குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிகமான ஆர்வம் இருக்கிறது.

ஜீவானந்தம் மற்றும் குணசேகரன் மோதிக் கொண்டிருக்கும் இப்போதைய நேரத்தில் அடுத்து குணசேகரன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று அறிந்து கொள்வதற்காக அதிகமான ஆர்வத்தேடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். நேற்றைய எபிசோடில் குணசேகரனை குண்டு கட்டாக தூக்கிய ஜீவானந்தம் ஆட்கள் வெளியே தூக்கிப் போட்டது ஒரு தரப்பினர் அதை சந்தோஷமாக பாராட்டிக் கொண்டிருக்கும் நிலையில் பலர் குணசேகரனின் நிலைமையை பார்த்து ஃபீல் பண்ணவும் செய்திருக்கிறார்கள்.
சீரியலில் இதுவரைக்கும் வில்லனாக இருந்த குணசேகரன் அதிகமான ரசிகர்களால் பாவம் பார்க்கப்பட்டு வருகிறார். ஐயோ இவருக்கா இந்த நிலைமை என்று பல கமெண்டுகள் குவிந்து கொண்டிருப்பதை காண முடிகிறது. அதே நேரத்தில் ஜீவானந்தம் தன்னை மிரட்டி தன்னுடைய கம்பெனியை பிடுங்கி வைத்திருக்கும் நிலையில் அந்த ஆற்றாமையையும், இயலாமையையும் குணசேகரன் தன்னுடைய நடிப்பால் காட்டி அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது வெளியான பிரமோவில் காரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு குணசேகரன், ஞானம், கதிர், ஆடிட்டர் என நான்கு பேரும் போய்க்கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் வீட்டிற்கு வந்த ஜனனி மற்றும் சக்தியிடம் ஈஸ்வரி என்னாச்சு ஜனனி என்று கேட்க, அந்த 40% ஷேர் அந்த ஆளு கைக்கு போயிட்டு அக்கா என்று ஜனனி சொல்ல, அந்த கௌதம் அந்த ஜீவானந்தத்தோட ஆளா தான் இருந்திருக்கிறான் என்று சக்தியும் சொல்கிறார்.
அதைக் கேட்டு மருமகள்கள் அனைவரும் அதிர்ச்சியாக இருக்கும் நிலையில் காரில் சென்று கொண்டிருக்கும் குணசேகரன் ஏய்... ஜீவானந்தம் என்கிட்ட மோதுறியா என்று கோபத்தோடு கத்திக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார். அங்கே ஜீவானந்தம் மற்றும் பர்ஹானா போலீஸ் ஸ்டேஷனில் குணசேகரனுக்கு முன்பே வந்து அமர்ந்திருக்கின்றனர்.
அங்கு ஜீவானந்தத்திற்கு சாதகமாக போலீஸ் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியான குணசேகரன் சோகமாக போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியே வருகிறார். வெளியே வரும்போது சட்டையை கழற்றி தோளில் தொங்க போட்டுவிட்டு பாவமாக வருகிறார். தற்போது இது குறித்து அதிகமான ரசிகர்கள் குணசேகருக்கு ஆதரவாக கமாண்ட் வெளியிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications