எதிர்நீச்சல்: குணசேகரனை எதிர்த்து ரேணுகா சவால்.. வெளி வந்த ஜனனியின் பிளான்.. இனி நடக்கப் போவது?
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் தன்னுடைய குழந்தைக்கு விருப்பமில்லாத சடங்கு சம்பிரதாயங்கள் வேண்டாம் என்று ரேணுகா குணசேகரனிடம் கோபமாக சண்டை போடுகிறார்.
இத்தனைக்கும் காரணம் ஜனனி தான் என்று குணசேகரன் ஜனனியை திட்டி கொண்டு இருக்க, அதற்கு ஜனனி என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

அதே நேரத்தில் குணசேகரன் ஞானத்திடம் உன்னுடைய மாமியாரிடம் சொல்லி முறை செய்ய வர சொல்லு என்று உறுதியாக கூறுகிறார். இதனால் இனி ஐஸ்வர்யாவை வைத்து வீட்டில் அடுத்த பிரச்சனை கிளம்ப போகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் இந்த சீரியலின் கதையும் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது. இதுவரைக்கும் சில மாதங்களாக ஆதிரை காதல் மற்றும் திருமண ட்ராக் இழுத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அது முடிவுக்கு வந்து அடுத்த பிரச்சனை தொடங்கியிருக்கிறது.

நேற்றைய எபிசோடில் ஆதிரை மற்றும் கரிகாலனை நந்தினி, ரேணுகா மறு வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கின்றனர். முதலில் திட்டியிருந்தாலும் பின்பு ஆதிரையிடம் அருணுடைய நிலைமையை கூறி நடந்த நிகழ்வுகள் எல்லாத்தையும் எடுத்துக் கூறியதும் ஆதிரை மீண்டும் இவர்களுடைய அணியில் சேர்ந்து விட்டார். இந்த நிலையில் வீட்டிற்கு வந்ததும் ஆரத்தி எடுக்க வேண்டும் என்று குணசேகரன் பிரச்சனை செய்து கொண்டிருந்தார்.
அப்போ சரியாக அந்த நேரத்தில் ஐஸ்வர்யாவை ஸ்கூலில் இருந்து கூட்டிக்கொண்டு வந்த டீச்சர் அவர் ஏஜ் அட்டென்ட் பண்ணி மூன்று நாட்கள் ஆகிறது என்று சொல்ல, அதை கேட்டு ரேணுகா அதிர்ச்சியாகி அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார். மூன்று நாட்களாக பெத்த அம்மாகிட்ட கூட சொல்லலையே என்று கேட்க, சொன்னா மட்டும் இங்க என்ன நடந்துரும்..? அக்காவுக்கு நடந்தது தானே எனக்கும் நடக்கும் என்று அழுது கொண்டிருக்கிறார்.

எப்போதும் கண்டுகொள்ளாத குணசேகரன் இப்போதும் இதை கண்டுகொள்ளாமல் அடுத்து என்ன நடக்க வேண்டுமோ அதை பார்ப்போம் குழந்தை பெரிய மனுஷியா ஆகி இருக்கு பெத்த அம்மாக்கு இதுகூட தெரியல. என்னத்த தான் பிள்ளையை பார்க்கிறீர்களோ..? வீட்டுல என்ன வேலை பார்த்துட்டு இருக்கீங்க? நீங்க இத்தனை பொண்ணுங்க இருந்தும் குழந்தைக்கு என்ன நடந்திருக்குன்னு உங்களுக்கு தெரியல என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.
இதனால் கோபமான ரேணுகா தாங்கள் காலையில் தூங்கி முழித்ததில் இருந்து இரவு தூங்குவது வரைக்கும் செயல்கள் அனைத்தையும் சொல்லிக்காட்டி தங்களுடைய கஷ்டத்தை கூறிக் கொண்டிருந்தார். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத குணசேகரன் எப்போதும் போல முகத்தை திருப்பிக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் தனக்கு எந்த சடங்கு சம்பிரதாயமும் வேண்டாம் என்று ஐஸ்வர்யா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதுபோல தன் அப்பா ஞானத்தின் இயலாமையையும், அதனால் அவர் படும் அவமானத்தையும் ஐஸ்வர்யா பேசியதை கேட்டு அதிர்ந்து போன ஞானம் இதையெல்லாம் உனக்கு பேசுவதற்கு யாரு சொல்லி கொடுத்தா? என்று அதிரடியாக கேள்வி கேட்கிறார். இந்த நிலையில் குணசேகரனும் அதையே கேட்க? நான் நீங்க பேசுவதை கேட்டு தான் இப்படி எல்லாம் பேசுறேன். நீங்க பேசுவதை பார்த்து யாரையும் இப்படி எல்லாம் பேசக்கூடாதுன்னு கத்துக்கிட்டு நான் இப்படி பேசுறேன் என்று ஐஸ்வர்யா பதிலடி கொடுக்கிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் குணசேகரன் ஞானத்திடம் உன் மாமியார் கிட்ட சொல்லி முறையை ஏற்பாடு செய்ய சொல்லு என்று சொல்ல, கடும் கோபத்தில் இந்த மாதிரி வேலை எல்லாம் எவனாவது பார்த்தீங்கன்னு வச்சுக்கோங்க.. என்று கையை நீட்டி மிரட்டியபடி குணசேகரனை பார்த்து ரேணுகா கத்த, என்னம்மா செய்வ என்று குணசேகரன் கேட்க என்ன வேணாலும் செய்வேன் என்று ரேணுகா கடுப்பு கோபத்தில் கூறுகிறார்.
இந்த நிலையில் ஜனனி அமைதியாக வீட்டை விட்டு வெளியே செல்ல அப்போது குணசேகரன் ஏய்... நாச்சியப்பன் பெத்த மகளே. இதுக்கெல்லாம் ஆரம்ப புள்ளி நீ தானே..!? இதுக்கெல்லாம் கூடிய சீக்கிரம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன். அந்த வீட்டுல இருந்துகிட்டு இந்த வீட்டுக்கு வெடி வைக்கிறியா? என்று கேள்வி கேட்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான விறுவிறுப்பு அதிகரித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications