எதிர்நீச்சல்: ஆதிரையை ஓடிப் போக வைத்த ரேணுகா.. கரிகாலன் செய்த செயல்.. இனி குணசேகரன் முடிவு?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜூன் 16ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது
அருண் உடன் ஆதிரை திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினி சேர்ந்து புது பிளான் போட்டிருக்கிறார்.
ஜனனி பிளான் தெரியாமல் கரிகாலன் கோவிலில் லூசுத்தனமான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.
சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சுவிடும் வகையில் அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இதுவரைக்கும் பல மாதங்களாக ஆதிரை திருமண ட்ராக் ஜவ்வாக இழுத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அதன் இறுதி கட்டத்தில் வந்திருக்கிறது.

ஒரு பக்கம் ஆதிரைக்கு கரிகாலனோடு திருமணத்தை நடத்தி வைக்க குணசேகரன் பிளான் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் ஜனனி தன்னுடைய வீட்டு மருமகள்களோடு சேர்ந்து ஆதிரைக்கு பிடித்த அருண் உடன் திருமணத்தை செய்து வைக்க முடிவெடுத்து அதற்கான ரகசிய பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஜீவானந்தம் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
அதைத் தொடர்ந்து திருமணம் யாரோடு எப்படி நடக்க இருக்கிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு அனைவர் மனதிலும் இருக்கிறது.. ஆனால் பல மாதங்களாக இந்த திருமண டிராக் போய்க் கொண்டிருப்பதால் ரசிகர்கள் கொஞ்சம் சலிப்படைந்து இருக்கின்றனர். அதே நேரத்தில் நேற்றைய எபிசோடில் ஆதிரை திருமணத்திற்கு முன்பு குடும்ப குல சாமி கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்று வீட்டில் இருந்த மொத்த மருமகள்களும் சொல்ல, அதற்கு சப்போர்ட்டாக விசாலாட்சியும் ஆமா அவங்க போயிட்டு வரட்டும் என்று மிரட்டலாக பேசுகிறார்.
இதுவரைக்கும் குணசேகரனுக்கு பயந்தபடியே பேசிக் கொண்டிருந்த விசாலாட்சி இப்போ மனதிற்குள் குலசேகரன் பற்றி பயம் இருந்தாலும் வெளியே தைரியமாக எதிர்த்து பேசியதனால் ஆதிரையை ஜனனி, நந்தினி, ரேணுகா உடன் அனுப்பி வைத்து அவர்களுக்கு துணையாக கரிகாலன் மற்றும் கதிர் இருவரையும் அனுப்பி வைக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரையும் எப்படியாவது வண்டியில் இருந்து இறக்கி விட்டு விட வேண்டும் என்று ரேணுகாவும் நந்தினியும் பிளான் போட்டு இருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து இன்றைய எபிசோடுக்காக வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அனைவரும் கோவிலுக்கு வந்தடைந்த நிலையில் கோவிலில் அர்ச்சகர் அர்ச்சனை யாரு பேருக்கு பண்ணனும் என்று கேட்க அதற்கு நந்தினி ஆதிரை செல்வி என்று சத்தமாகவும் அருண் என்று மெதுவாகவும் கூறுகிறார். அதை கேட்ட கரிகாலன் எனது அருணா என்று ஷாக் ஆகிறார்.
அந்த நேரத்தில் சரியாக யோசித்த ரேணுகா, கரிகாலா நீ இங்க வா என்று கூறி கரிகாலனை வாசலில் நிறுத்தி 108 தடவை ஆதிரை கரிகாலன் கல்யாணம் சீக்கிரம் நடக்கணும் என்று சொல்லிக்கிட்டே இரு என்று சொல்லிக் கொடுக்க, அதுபோலவே கரிகாலனும் கண்ணை மூடி கடவுளிடம் ஆதிரை கரிகாலன் கல்யாணம் சீக்கிரமா நடக்கணும் என்று வேண்டிக்கொண்டே இருக்கிறார்.
அந்த நேரத்தில் ஜனனி, நந்தினி, ரேணுகா மூவரும் ஆதிரையை கூப்பிட்டுக் கொண்டு வெளி பக்கமாக ஓடிப் போகின்றனர். இந்த நிலையில் இன்று என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அதைத்தொடர்ந்து அதிகமான ரசிகர்கள் கரிகாலம் தான் பாவம் என்று பீல் பண்ணியும் வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications