எதிர்நீச்சல்: ஆதிரை இருக்கும் இடத்தை கண்டுபிடித்த குணசேகரன்.. காணாமல் போன அருண்.. "திடீர்” திருப்பம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கௌதம்க்கு போன் செய்து அருண் இன்னும் காணவில்லையே என்று கேட்க அருண் அப்பவே கிளம்பிவிட்டான் என்று கௌதம் கூறுகிறார்.
அதே நேரத்தில் ஜனனி ஆதிரையை கூட்டிக்கொண்டு போயிருக்கும் இடம் குணசேகரனுக்கு தெரிய வருகிறது.
இதனால் குணசேகரன் அந்த இடத்திற்கு கரிகாலனை கூட்டிக் கொண்டு வேகமாக கிளம்புகிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்து இருந்த உச்சகட்டமான ஆதிரை திருமண ட்ராக் முடிவுக்கு வந்து இருக்கிறது. ஆதிரை ஓடிப் போனது தெரிந்த குணசேகரன் தற்கொலை முயற்சி செய்து குடும்பத்தால் காப்பாற்றப்பட்டாலும் ஆதிரையை ஆள் வைத்து தேடிக் கொண்டிருக்கிறார்.

குணசேகரன் தூக்கு மாட்ட போனதை பார்த்து பயந்து போன விசாலாட்சி ஆதிரை ஓடித்தான் போயிருக்கிறார் என்றும் கோவிலில் வைத்து கல்யாணம் பண்ண போறாங்க என்ற உண்மையையும் நேற்றைய எபிசோடில் உளறி விட்டார். அதனால் அனைத்து கோவிலிலும், ரெஜிஸ்டர் ஆபீசிலும் ஆள் வைத்து பார்க்க வேண்டும் என்று குணசேகரன் ஞானத்தை மிரட்ட அதற்கான முழு வீச்சில் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் ஜான்சி ராணி இன்னைக்கு மட்டும் கரிகாலனுக்கும் உன் தங்கச்சிக்கும் கல்யாணம் நடக்கலைன்னா நான் யாருன்னு நீ முழுசா பார்க்க போற, இதுவரைக்கும் நீங்க பாத்துட்டு இருந்த ஜான்சி ராணி வேறு இனி நீங்க பார்க்கப் போற ஜான்சி ராணி வேறு உனக்கு நான் தான் எமன் என்பது போன்று குணசேகரனிடம் வீர வசனங்கள் பேசி இருக்கிறார்.
ஏற்கனவே நான் நல்லா இருக்க கூடாது நினைச்சவங்களும் என் சொந்த பந்தங்கள் எல்லாரும் நான் அவமானப்படுறதை பார்த்துக்கோங்க என்று நேற்றே குணசேகரன் புலம்பி இருந்தார். அதே நேரத்தில் ஜனனி ஆதிரையை கூட்டிக்கொண்டு கோவிலுக்கு வந்த நிலையில் அருண் இன்னும் கோவிலுக்கு வராமல் இருக்கிறார். சக்தி போன் பண்ணி பார்த்தாலும் அருண் போனை எடுக்கவில்லை.
இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜனனி கௌதமிற்கு ஃபோன் பண்ணி அங்கே என்ன நடக்கிறது? அருண் இன்னும் ஏன் இங்கு வரவில்லை என்று கேட்க, என்னது அருண் இன்னும் அங்க வரலையா? என்று கௌதம் கேட்க, அதைக் கேட்ட ஜனனி அதிர்ச்சியாகி என்னது வரலையா? என்று கேட்கிறார். அதற்கு அங்கு நடந்தவை பற்றி எல்லாம் கௌதம் போனில் ஜனனியிடம் கூறுகிறார்.
அதே நேரத்தில் மண்டபத்தில் ஞானத்திற்கு போன் வருகிறது. அதை எடுத்து பேசி ஞானம் அண்ணே அவங்க கிடைச்சிட்டாங்க, வத்தலகுண்டு முப்பத்தாம்மா கோவில்ல இருக்காங்க என்று சொல்ல கதிரும் ஞானமும் இன்னைக்கு இருக்கு அவங்களுக்கு என்று வேட்டிய மடிச்சு கட்டிக்கொண்டு கிளம்புகின்றனர்.
அதைத்தொடர்ந்து குணசேகரன் கரிகாலா எந்திரிடா என்று சொல்ல, கோவிலில் ஜனனி என்ன பண்ணுவது என்று தெரியாமல் பயந்தபடி தவித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இந்த பிரமோ இன்றைய எபிசோடுக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் இதை பார்த்த ரசிகர்கள் பலரும் எப்படியோ அருண் ஓடிப் போய்விட்டார். அவரை விட்டு விடுங்கள் இந்த கரிகாலனுக்கே ஆதிரை கல்யாணத்தை முடித்து வைத்து இந்த பிரச்சனையை இன்றோடு முடித்து விடுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications