எதிர்நீச்சல்: கோவிலுக்கே வந்த குணசேகரன்.. தப்பிக்க முடியாமல் திணரும் ஜனனி.. கௌதம் சொன்ன வார்த்தை
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை திருமணம் நடக்கும் கோவில் குணசேகரனுக்கு தெரிந்து விட்டது.
அதே நேரத்தில் மலையில் இருந்து கீழே இறங்கிய அருண் எங்க போனான் என்று தெரியாமல் மொத்த குடும்பமும் தவிக்கின்றனர்.
கோவிலுக்கு குணசேகரன் குடும்பத்தோடு வர அங்கிருந்து ஜனனி ஆதிரையை காப்பாற்ற முடியாமல் திணறுகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பரபரப்பான திருப்பங்கள் இன்றைய எபிசோட்டில் நடைபெற இருக்கிறது. இதுவரைக்கும் பல மாதங்களாக ஆதிரை திருமண ட்ராக் இழுத்துக் கொண்டே இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து கொண்டு இருந்த நிலையில் இன்று அதற்கான முற்றுப்புள்ளி வருவதற்கான அறிகுறிகள் தெரிகிறது.
கோவிலுக்கு இன்னும் அருண் வரவில்லையே என்று ஜனனியும் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் பயத்தோடு இருக்கும் நிலையில் கவுதமுக்கு போன் செய்து விசாரிக்கும் நிலையில் கௌதம் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அருண் எங்கே இருக்கிறான் என்று கண்டுபிடித்து விடுகிறேன் என்று கூறியிருந்தார்.

அதே நேரத்தில் ஆதிரை திருமணம் நடக்கும் இடம் குணசேகரனுக்கு தெரிய வந்ததால் மொத்த குடும்பமும் அந்த கோவிலுக்கு கிளம்பி வருகின்றனர். இந்த நிலையில் ஜனனி மீண்டும் மீண்டும் அருணுக்கு போன் முயற்சி செய்து கொண்டிருக்க அருண் போனை எடுக்கவில்லை.
இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் காரில் குணசேகரன் கரிகாலனை கூட்டிக்கொண்டு வேகமாக வந்து கொண்டிருக்கிறார். அதே நிலையில் கௌதம் மீண்டும் ஜனனிக்கு போன் செய்து நான் விசாரித்து பார்த்ததில் அருண் மலையை விட்டு கீழே இறங்கிட்டான் என்று சொல்கிறார்.
அதற்கு அதிர்ச்சியான ஜனனி அப்படி மலைய விட்டு இறங்கிட்டானா ஏன் இன்னும் வந்து சேரல? என்று கேட்கிறார். அதே நேரத்தில் குணசேகரன் கரிகாலனிடம் உனக்கும் ஆதிரைக்கும் நடக்கப்போற கல்யாணம் ரொம்ப வித்தியாசமான கல்யாணம் பா என்று சொல்கிறார்.

இந்த நிலையில் தாங்கள் இருக்கும் இடத்தை குணசேகரன் தெரிந்துக்கொண்டுவிட்டார் என்று தெரிந்த ஆதிரை அண்ணன் எல்லாம் இங்கு வந்தால் என்ன நடக்கும்ன்னு தெரியல என்று சொல்ல, அதற்கு சக்தி முதல்ல இங்க இருந்து கிளம்புவோம் என்று கூப்பிடுகிறார். அதே நேரத்தில் கோவில் வாசலில் குணசேகரன் காரில் இருந்து வேகமாக இறங்கி வருகிறார் இதை பார்த்த ரேணுகா பதட்டத்தில் இருக்கிறார்.
இந்த பரபரப்பான ப்ரோமோ வெளியான நிலையில் அதிகமான ரசிகர்கள் இன்று ஆதிரையின் திருமணம் கரிகாலனுடன் நடந்து விடுமா? என்று ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் ஜீவானந்தம் இந்த கல்யாணத்தில் அருணுடன் என்ட்ரி ஆனால் வேற லெவலில் இருக்கும் என்பதும் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனாலும் நடப்பதை இன்று இரவு பார்க்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications