எதிர்நீச்சல்: பட்டம்மாள் ஷேர் பற்றி குணசேகரனுக்கு தெரிய வந்த உண்மை.. எல்லாம் கை மீறி போச்சு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜூன் 29ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஜனனியோடு சேர்ந்து ரேணுகா நந்தினி, சக்தி என அனைவரும் வீட்டை விட்டு கிளம்புகின்றனர்.
அதைத்தொடர்ந்து குணசேகரனுக்கு பட்டம்மாள் ஷேர் பற்றிய ரகசியம் தெரிய வர குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆரம்பத்தில் இருந்து ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து கொண்டிருந்த ஆதிரை திருமணம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. இது பலருக்கும் ஏற்றுக் கொள்ள முடியாத முடிவாக இருக்கிறது.
கரிகாலன் ஆதிரையை கல்யாணம் செய்து கொண்டதால் இனி ஆதிரை என்னவெல்லாம் கஷ்டப்பட போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இந்த பிரச்சனையில் இருந்து இனி ஆதிரை சுயமாக முடிவெடுத்து வெளியே வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அனைவரிடமும் இருக்கிறது.

இந்த நிலையில் ஆதிரையின் திருமணத்தை தொடர்ந்து ஜீவானந்தம் என்ன ஆனார்? என்பது பற்றியும் பட்டம்மாள் ஷேர் என்ன பிரச்சனையில் இருக்கிறது? என்பது பற்றியும் எதிர்பார்ப்பும் கேள்விகளும் ரசிகர்களிடம் இருக்கும் நிலையில் தற்போது அதற்கு பதில் சொல்லும் விதமாக புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே நேற்றைய எபிசோட்டில் ஜனனியை கதிர் மற்றும் குணசேகரன் இருவரும் வீட்டை விட்டு போக சொல்லி பிரச்சனை செய்து கொண்டிருந்த நிலையில் ஜனனியை அடிக்க வந்த கதிரை சக்தி அடித்து இனி என் பொண்டாட்டியை யாராவது தப்பா பேசினா கழுத்தை அறுத்து போட்டு விடுவேன் என்று மிரட்டி இருந்தார். இந்த நிலையில் இதனால் கோபமான கதிர் நீயும் ஜனனியோடு சேர்ந்து வெளியே தான் போகணும்னு சொல்ல, அதற்கு நான் தாராளமாக போறேன் என்று சக்தி கூறி இருந்தார்.
அதுமட்டுமில்லாமல் ரேணுகா மற்றும் நந்தினி இருவரும் என்னிடம் காலில் விழுது மன்னிப்பு கேட்டு விட்டால் நான் வீட்டிற்குள் உங்களுக்கு அனுமதி தருகிறேன் இல்லைன்னா நீங்களும் வெளியே போகணும்னு குணசேகரன் மிரட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இனிமே நாம இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஜனனி சக்தியை வீட்டை விட்டு வெளியே போக கூப்பிடுகிறார்.
அப்போது ரேணுகா எல்லாரும் சேர்ந்து வெளியேறுவோம் என்று சொல்லி கிளம்ப, கதிர் நந்தினியை போய் மிரட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது குணசேகரன் அதான் இருக்காலா இவா..!? எல்லாரையும் கூட்டிட்டு போவா என்று கத்துகிறார். இதைத்தொடர்ந்து குணசேகரனை பார்ப்பதற்காக ஆடிட்டர் வீட்டிற்கு வருகிறார். அவர் பட்டம்மாள் ஷேருக்கும் உங்க வீட்டு மருமகளுக்கும் ஏதோ பெரிய சம்பந்தம் இருக்கு சார் என்று சொல்கிறார்.
அதைக் கேட்டு கடுப்பான குணசேகரன் இப்பதான் அவங்க எல்லாரையும் வீட்டை விட்டு அடிச்சு வெளியே விரட்டி விட்டேன் என்று சொல்ல, தப்பு பண்ணிட்டீங்களே சார் என்று ஆடிட்டர் கூறுகிறார். இந்த நிலையில் ரோட்டில் நின்றபடி ஜனனியும் சக்தியும் என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்கின்றனர். தற்போது இந்த ப்ரோமோ இன்றைய எபிசோட்டிற்க்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications