குணசேகரனை மிரட்டும் சாருலதா.. ஜனனி ரகசியமாக செய்யும் செயல்.. பரபரப்பில் எதிர்நீச்சல்
சென்னை: குணசேகரன் இடம் சாருலதா திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று மிரட்டுகிறார்.
குணசேகரனுக்கு தெரியாமல் ஜனனி விசாலாட்சியோடு சேர்ந்து புது பிளான் போடுகிறார்.
விசாலாட்சி ஆதிரை மற்றும் அருண் உடைய திருமணத்திற்கு அப்பத்தாவிடம் ஆசிர்வாதம் கேட்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த பல அதிரடியான திருப்பங்கள் நடைபெற தொடங்கி இருக்கின்றது. பலரும் ஜீவானந்தம் யார் என்று எதிர்பார்த்த நிலையில் ஜீவானந்தமாக இயக்குனர் திருச்செல்வம் அறிமுகமாகிவிட்டார்.
இந்த நிலையில் இனி ஜீவானந்தம் என்ன மாதிரி குணசேகரனுக்கு பிரச்சனையை கொடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர். ஒரு பக்கம் ஆதிரை திருமண விஷயத்தில் குணசேகரன் பிஸியாக இருக்கிறார். அதே நேரத்தில் அப்பத்தா தனக்கு எழுதிக் கொடுத்த 40% ஷேர் விஷயத்திலும் ஆடிட்டரோடு சேர்ந்து புது பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் எஸ் கே ஆர் குடும்பம் அருணை கடத்தி வைத்திருப்பது குணசேகரனும் அவருடைய குடும்பமும் தான் என்று போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கின்றனர். அது பற்றி குணசேகரனிடம் போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கும் நிலையில், குணசேகரன் வழக்கம் போல திமிராக பேசிக் கொண்டிருக்கிறார்.

அதுபோல நேற்றைய எபிசோட்டில் அப்பத்தாவிடம் நீ ஆசைப்பட்ட மாதிரியே ஆதிரை கல்யாணம் நடக்க போகுது. ஆனா மாப்பிள்ளை தான் மாறிடுச்சு. ஆனாலும் நீ எனக்காக எழுதி தந்த 40% சொத்துக்கு பதிலுக்காக நான் ஆதிரை கல்யாணத்தை சிறப்பா செய்து முடிக்கிறேன் என்று அப்பத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு கிளம்புகிறார்.
இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் விசாலாட்சி அப்பத்தாவிடம் உங்க பேத்திக்கு அருண் கூட கல்யாணம் நடக்க போகுது அவளை ஆசீர்வாதம் பண்ணுங்க அத்தை என்று கேட்கிறார். அதே நேரத்தில் எஸ் கே ஆர் கம்பெனியில் இருக்கும் குணசேகரன் போலீஸ்காரர்களிடம் இவங்கள தனியா கூட்டிட்டு போய் விசாரிங்கப்பா என்று சொல்கிறார்.

இவருடைய நக்கலை பார்த்த சாருலதா அதிகமா பேசாதீங்க குணசேகரன் என்று கையை நீட்டி பேச, அதை கேட்டு காண்டான கதிர் ஏன் என்ன பண்ணுவ? என்று திமிரா பேச, நாளைக்கு நடக்க இருக்கிற கல்யாணத்தை நடக்க விடாமல் பண்ணுவேன் என்று சாருலதா பதிலடி கொடுக்க, அண்ணன் தம்பிகள் அனைவரும் திகைத்துப் போய் இருக்கின்றனர்.
இந்த நிலையில் இனி ஜனனி பிளான் போட்டபடி அருணோடு ஆதிரைக்கு எப்படி திருமணத்தை நடத்தி வைக்க போகிறார்? அதே நேரத்தில் ஜீவானந்தம் வந்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications