பட்டம்மாள் விஷயத்தில் அதிரடி காட்டும் ஜீவானந்தம்..ஜனனிக்கு கிடைத்த அதிர்ச்சி..வெளிவரும் உண்மை
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோடுக்கான ப்ரமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஜீவானந்தத்திற்கு ஜனனி மீண்டும் போன் செய்ய முயற்சி செய்ய ஜீவானந்தம் பட்டம்மாள் குடும்பத்தில் இருந்து யார் போன் செய்தாலும் எடுக்க கூடாது என்று கூறுகிறார்.
மேலும் ஆடிட்டர் வீட்டிற்க்கே வந்து எனக்கு இங்கே அக்கவுண்ட்ஸ் வேலை இருக்கிறது என்று சொன்னதை கேட்டு ஜனனி அதிர்ச்சி அடைகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த பல பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் சில மாதங்களாக ஆதிரை மற்றும் அருண் திருமணம் ஜவ்வாக இழுத்து கொண்டிருந்த நிலையில் பல மாதங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த ஜீவானந்தம் என்ட்ரி இப்போது கிடைத்திருக்கிறது.
ஆனாலும் ஜீவானந்தம் என்ன செய்யப் போகிறார்? எதற்காக பட்டம்மாள் ஜீவானந்தம் பெயரை கூறிக் கொண்டிருக்கிறார்? என்றும் ஜீவானந்தம் எதற்காக மதுரையில் உள்ள மொத்த பணக்காரர்களில் லிஸ்டையும் கேட்டிருக்கிறார்? என்றும் மொத்த உண்மைகளும் இன்னும் வெளிவராமல் தான் இருக்கிறது.
ஏற்கனவே ஒரு பணக்காரரை ஜீவானந்தம் தன்னுடைய குரூப் உடன் சென்று மிரட்டி கொடைக்கானலில் இருக்கும் அவருடைய சொத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி தரும்படி கேட்கிறார். அதுவும் என்னுடைய ஏழை மக்களுக்காக என்று ஜீவானந்தம் செய்யும் புரட்சியை பார்த்தால் ஏழைகளுக்காக பணக்காரர்களை வதம் செய்யும் கேரக்டராக இருக்குமோ என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் எதற்காக பட்டம்மாள் குடும்பத்தில் இருந்து யார் போன் பண்ணாலும் தன்னுடைய செக்கரட்டரி இடம் எடுக்கக் கூடாது என்று கூறுகிறார் என்பதுதான் புரிந்து கொள்ள முடியாத புதிராக இருக்கிறது. ஆனாலும் ஆதிரை திருமண நேரத்தில் ஜீவானந்தம் மாஸாக என்றிக்கொடுத்து குணசேகரனுக்கு பெரிய ஆப்பு வைக்கப் போகிறார் என்பது மட்டும் புலப்படுகிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரமோ வெளியாகி இருக்கிறது. அதில் தன்னுடைய நம்பரில் இருந்து போன் செய்தால் ஜீவானந்தம் எடுக்கல என்பதால் ஜனனி ஈஸ்வரியின் ஃபோனில் இருந்து முயற்சி செய்ய, அப்போது ஜீவானந்தத்தோடு அவருடைய செக்ரெட்டியும் காரில் சென்று கொண்டிருப்பதால் யாரு என்று ஜீவானந்தம் கேட்க, தெரியவில்லை என அவருடைய செக்ரட்டரி கூறுகிறார்.

பிறகு ஜீவானந்தம் பட்டம்மாள் சம்பந்தமாக எந்த நம்பரில் இருந்து போன் வந்தாலும் எடுக்காத என்று கூறுகிறார். அதை தொடர்ந்து வீட்டிற்குள் ஆடிட்டர் வர இங்கே இருந்து தான் கொஞ்சம் அக்கௌன்ட் வேலை எல்லாம் பார்க்க வேண்டியது இருக்கு என்று அவர் அப்பத்தா ரூமுக்கு செல்வதை பார்த்து ஜனனி அதிர்ச்சி அடைகிறார்.
அதே நேரத்தில் ரேணுகா இந்த ஆள் எதுக்கு இங்க வந்தாரு எனக்கு என்னமோ இது சரியின்னு தெரியல என்று சொல்ல, மண்டபத்தில் குணசேகரன் யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் அப்பத்தாவிடம் ஆடிட்டர் கையெழுத்து வாங்கும் போது அதை ஜனனி தடுப்பாரா? அதே நேரத்தில் ஜீவானந்தம் எதற்காக இப்படி நடந்து கொள்ளுகிறார் என்பதெல்லாம் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications