கதிருக்கு ஜான்சி ராணி வச்ச ஆப்பு.. குணசேகரனுக்கு பட்டம்மாள் கொடுக்கப் போகும் அடுத்த பிரச்சனை
ஆதிரையின் திருமணத்தை நிறுத்துவதற்காக பட்டம்மாள் அப்பத்தா இடம் குணசேகரன் டீலிங் பேசுகிறார்.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் 13-ஆம் நாளுக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
ஜான்சி ராணியை கதிர் அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார்.
இனி கதிர் கதறி அழுகிற சத்தம் மட்டும்தான் கேட்கும் என்று ஜான்சி ராணி புது பிளான் போடுகிறார்.
ஆதிரையின் திருமணத்தை நிறுத்துவதற்காக பட்டம்மாள் அடுத்த முயற்சியை எடுக்கிறார்.

ஜனனியின் எதிர்ப்பு
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதரைக்கு கரிகாலன் உடன் திருமணத்தை நடத்தி விட வேண்டும். அதுவும் வருகிற முதல் முகூர்த்தத்தில் திருமணத்தை வைத்துவிட வேண்டும் என்று குணசேகரன் ஆதிரையின் அம்மா மற்றும் அப்பாவிடம் சொல்கிறார். மண்டபத்தை பார்த்து என்னிடம் சொல்லுங்கள் வருகிற 3ஆம் தேதி திருமணம் நடக்கும் என்று உறுதியாக கூற, ஆதிரைக்கு விருப்பம் இல்லாத திருமணத்தை செய்து வைக்க கூடாது என்று ஜனனி தடுத்து நிறுத்துகிறார்.

அம்மாவின் கேள்வி
எங்க தங்கச்சிக்கு என்ன செய்யணும்னு எங்களுக்கு தெரியும் உன் வேலைய பாத்துட்டு போ என்று கதிர் ஜனனியை திட்ட, குணசேகரனின் அம்மா விஷாலாட்சி தங்கச்சி பாசம் இருக்கிறவன் தான் அவ மருந்து குடிச்சுகிட்டு ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிகிட்டு இருக்கும்போதும் போய் பார்க்காமல் இருந்தீங்களா? செத்தா சாகட்டும்னு இருந்துட்டு இப்ப உயிரோட வந்ததும் அவ எங்க இஷ்டத்துக்கு தான் இருக்கணும்னு சொல்றீங்களா? இதுதான் தங்கச்சி பாசமா? என்று குணசேகரன் மற்றும் கதிரை பார்த்து கேட்கிறார்

அடுத்த பிளான்
அம்மாவின் கேள்விக்கு குணசேகரன் எனக்கு மானம்தான் முக்கியம். அதற்காக நான் இறங்க மாட்டேன் என்னுடைய பரம விரோதி உடன் என்னால் சம்பந்தம் பேச முடியாது என்று கூறி விடுகிறார். அப்போது வெளியே சென்றிருந்த பட்டம்மாள் மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கிறார். இனி பட்டம்மாவால் திருமணத்தை நிறுத்துவதற்கு அடுத்த முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே பட்டமாவின் ஷேர் விஷயத்தை பற்றி அரசு விசாரித்துக் கொண்டிருக்கிறார். இதனால் இனி ஆதிரையின் திருமணத்தை வைத்து அரசு என்ன பிளான் வைக்கப் போகிறாரோ என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

அப்பத்தாவின் டீலிங்
இந்த நிலையில் இன்றைய புரோமோ வில் கதிர் ஜான்சி ராணியை அவமானப்படுத்தி வெளியே போகச் சொல்லி தள்ளி விடுகிறார். கோபத்தில் வெளியே வந்த ஜான்சி ராணி, ஜான்சி ரானியை என்ன நெனச்சுக்கிட்டான் அவன். இன்னையோட முடிச்சுக்கிறேன் அவன, இனி அவனோட அலறல் சத்தம் தான் கேக்கணும் என்று கோபத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு மாடியில் இருந்து வரும் குணசேகரன் என்னிடம் ஏதோ பேசணும்னு சொன்னியாம்ல என்று அப்பத்தாவிடம் கேட்க, கல்யாண ஏற்பாட்டை உடனடியாக நிறுத்து என்று அப்பத்தா சொல்கிறார். இதை நிறுத்துவதற்கு யோசிக்கிறேன் என்று குணசேகரன் சொல்ல, அதுக்கு பதில் என்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கிற என்று அப்பத்தா கேட்க? உன்னால எதை செய்ய முடியுமோ அதைத்தான் கேட்கிறேன் என்று கூறுகிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications