ஜான்சி ராணியோடு குணசேகரன் போட்டிருக்கும் பிளான்.. அப்பத்தா வைத்த ஆப்பு.. ஜனனிக்கு வந்த சிக்கல்
ஆதிரையின் திருமண விஷயத்தில் அப்பத்தா குணசேகரின் டீலிங்கிற்கு சம்மதம் சொல்லி இருக்கிறார்.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் 16ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆதிரையின் திருமண விஷயத்தில் டபுள் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்.
குணசேகரன் நம்புகிற மாதிரியே அப்பத்தாவும் அவருடைய வழியிலேயே அவருக்கு நம்பிக்கை கொடுக்கிறார்.

ஜனனிக்கு வந்த சிக்கல்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனிக்கு புதியதாக வேலை கிடைத்திருக்கும் நிலையில் பணத்தேவை ஏற்படுகிறது. ஏற்கனவே அப்பத்தாவின் சொத்து ஆதிரை திருமண விஷயத்திற்கு கொடுக்க சம்மதித்து விட்டார் என்று நந்தினியும் ரேணுகாவும் குழம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அப்பத்தா தன்னுடைய சொத்து விஷயத்தில் எடுத்திருக்கும் முடிவு மற்றும் செய்து வைத்திருக்கும் செயல்களை பற்றி வெளியே சொல்லாமல் அது என்னுடைய இஷ்டம் நான் உங்களுக்கு எல்லாம் மாரல் சப்போர்ட் தான் கொடுக்கிறேன் என்று சொன்னேனே தவிர யாருக்கும் பைனான்ஸ் சப்போர்ட் செய்ய மாட்டேன் என்று கூறுகிறார். இந்த நிலையில் தற்போது நந்தினி ஜனனி மற்றும் கதிர் தங்களுக்கு தேவைப்படும் பணம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

ரகசிய சந்திப்பு
எதிர்நீச்சல் சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. குணசேகரன் தனது தம்பிகளிடம் ஆதிரைக்கு அருனுடன் திருமணம் செய்து வைக்கப் போகிறேன். அவனுடைய சொத்தை எல்லாம் நாம் புடுங்க வேண்டும் என்று பிளான் போட்டு அவர்களிடம் ஞானம் மற்றும் கதிரிடம் சத்தியம் வாங்குகிறார். ஆனால் ஜான்சி ராணி மற்றும் கரிகாலனிடம் நான் அப்பத்தாவிடம் இருக்கும் சொத்தை எழுதி வாங்கிவிட்டு அப்பத்தாவை விரட்டிவிட்டு கரிகாலனிற்க்கு தான் ஆதிரையை திருமணம் செய்து வைக்கப் போகிறேன் என்று ரகசியமாக சந்தித்து பேசுகிறார்.

அப்பத்தாவின் முடிவு
இந்த நிலையில் இன்றைய பிரமோ வில் குணசேகரன் அப்பதாவை தேடி கூப்பிட்டுக் கொண்டிருக்க, ஜனனி அப்பதா மாடியில் இருக்கிறார் என்று சொல்கிறார். மாடிக்கு வந்த குணசேகரன் அப்பத்தாவை பார்த்து என்ன அப்பத்தா உன்னுடைய பேத்தி கல்யாணத்தை அவ ஆசைப்பட்ட மாதிரி நடத்திடுவோமா? இன்னும் யோசிச்சுட்டு தான் இருக்கியா? என கேட்க. அப்பத்தா எதுவும் பேசாமல் பார்த்தபடியே நிற்க சரி நீ யோசி என்று குணசேகரன் கிளம்புகிறார். அதற்கு அப்பத்தா தான் நான் முடிவெடுத்து விட்டேன் என்று சொல்கிறார்.

ஜனனி என்ன சொல்லப் போகிறார்
அடுத்ததாக உங்க ரத்த பாசத்தை காட்டி புட்டிங்களே நாங்க உங்களுக்கு என்ன செஞ்சோம் என்று நந்தினியும், ரேணுகாவும் அழுதபடியே அப்பத்தாவிடம் பேசிக்கொண்டு கிளம்புகின்றனர். அங்கே ஜனனி மற்றும் சக்தி இருவரும் நின்று கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் உங்களுக்கு ஏதாவது சொல்லனுமா? என்று அப்பத்தான் கேட்கிறார். இந்த நிலையில் தங்களுக்கு ஏற்படும் பணத்தேவையை குறித்து ஜனனியும் சக்தியும் பேச இருக்கிறார்களா? அல்லது வீட்டில் நடக்கும் பிரச்சனையை பற்றி பேச இருக்கிறார்களா? என்பது இன்றைய எபிசோடில் தெரியலாம்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications