ஜனனி வெளிச்சத்துக்கு கொண்டு வரும் உண்மை..அடித்து ரணகளப்படுத்தும் கதிர்..பரபரப்பில் எதிர்நீச்சல்
சென்னை: ஜனனி சக்திக்கு போன் பண்ணி நீ வீட்டுக்கு வந்து விடு என்று கூறுகிறார்.
சக்தியோடு அருண் இருக்கும் நிலையில் சக்தி வீட்டிற்கு வந்தால் அருண் மாட்டிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் கதிர் செய்த அட்டூழியங்களை பொறுக்க முடியாமல் நந்தினி திட்டி கொண்டு இருக்க அந்த நேரம் கதிர் வந்து விடுகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மே 16 தேதி எபிசோடு காண ப்ரமோ வெளியாகியிருக்கிறது. அதில் வீட்டில் நிலைமை சரியில்லை என்று ஜனனி சக்திக்கு போன் போடுகிறார். அப்போது முக்கியமான விஷயத்துக்காக தான் நான் கால் பண்ணுனேன். இங்க பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு நீ கிளம்பி வந்துடு என்று கூறுகிறார்.

அடுத்ததாக நந்தினி மனுஷங்களை மதிக்க தெரியாதவன் அவன் பண்ற பாவத்திற்கு எல்லாம் அவ்வளவு அனுபவிக்க போறான் பாருங்க என்று கூறி அழுகிறார். அப்போது அங்கே வந்த கதிர் என்னடி அப்படி நான் அனுபவிக்க போறேன் என்று கேட்டு நந்தினியின் கழுத்தை பிடித்து நெறிக்கிறார். சுத்தி நின்ற அனைவரும் ஓடி சென்று அவரை தடுத்து நிறுத்துகின்றனர்.
இந்த நிலையில் இனி கதிர் ஆட்டத்திற்கு முடிவு வைக்க வேண்டும் என்று அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் நேற்றைய எபிசோடில் கதிர் ஞானத்தை அடிக்கும் போது இந்த சக்தி கதிரை அடித்திருக்கலாம் அதனால் தப்பே இல்லை. அப்போதுதான் ஞானத்தோட வலி என்னன்னு தெரியும் என்று சிலர் கருத்து கூறி வருகின்றனர்.

சக்தி இப்போது தான் ஜனனியை புரிந்து கொண்டு நல்லபடியாக இருந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கௌதமை பார்த்து மீண்டும் சக்தி மாறிவிடக்கூடாது என்று பலர் கருத்து கூறி வருகின்றனர். தன்னுடைய மகன்கள் செய்யும் செயல்களை பார்த்து விசாலாட்சி அழுவதை பார்த்தும் பலர் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications