வெளிச்சத்துக்கு வரும் உண்மை..கதிரை ஏமாற்றும் ஜனனி.. குணசேகரனுக்கு கிடைத்த அதிர்ச்சி
சென்னை: குணசேகரனை ஏமாற்றுவதற்காக ஜனனி புது திட்டம் ஒன்று போட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் ஜான்சிராணியோடு கோவிலுக்கு செல்வதற்காக தன் கூடவே ஜனனியும் சக்தியும் வர வேண்டும் என ஆதிரை கூறுகிறார்.
ஆதிரை சொன்ன வார்த்தையை கேட்டு அதிர்ச்சியான குணசேகரன் திட்டுகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை மற்றும் அருண் திருமணத்தை நடத்தி வைத்து விட வேண்டும் என்று குணசேகரனுக்கு எதிராக ஜனனியும் சக்தியும் பிளான் போட்டு கொண்டு இருக்கின்றனர். இது கதிர் மூலமாக குணசேகரனுக்கு தெரிய வருகிறது.
கதிர் எப்படியாவது சக்தியோடு இருக்கும் அருணை கண்டுபிடித்து விட வேண்டும் என்றும் சக்தி ஜனனியும் சேர்ந்து என்ன பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் யோசித்து அதற்காக பல கிரிமினல் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டுக்காண ப்ரமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆதிரை, ஜான்சி ராணியோடு தான் கோவிலுக்கு செல்லும்போது தன்னோடு ஜனனியும் சக்தியும் வர வேண்டும் என்று சொல்ல குணசேகரன் அவர்கள் எதுக்கு என்று கேட்ட, விசாலாட்சி துணையாய் இருக்கும் என்று சொல்ல துணையா இல்ல அம்மா வினையா தான் இருக்கு என்று திட்டுகிறார்.
பிறகு காரில் சக்தி, நந்தினி, ஜனனி எல்லோரும் சென்று கொண்டிருக்கும்போது கதிர் வெளியே சென்றிருக்கும் செய்தியை பற்றி சொன்னதும் அதிர்ச்சியான சக்தி அங்கே தான் கௌதமும், அருணுக்கு தங்கி இருக்காங்க என்று சொல்ல நந்தினி அதிர்ச்சி ஆகிறார்.
அதற்கு ஜனனி நீங்க கதிர்வேலுக்கு போன் பண்ணுங்க என்று சில ரகசியங்களை சொல்ல, உடனே நந்தினி கதிருக்கு போன் பண்ணுகிறார். கதிர் காரில் சென்றபடியே போனில் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த பிரமோ தற்போது இன்றைய எபிசோட்டுக்கான பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜனனி ஓட பிளான் குணசேகரனுக்கு தெரிய வருமா? அதுபோல கதிர் அருண் மற்றும் கௌதமை பார்த்து விடுவாரா? என்று எதிர்பார்ப்பும் இன்றைய ப்ரோமோவில் இருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்கள் அதிகமானோர் இந்த ஆதிரையின் திருமண டிராக்கை கொஞ்சம் சீக்கிரமாக முடித்து விடுங்கள் பல மாதங்களாக இதுதான் போய்க்கொண்டே இருக்கிறது. வேண்டுகோள் வைத்து இருக்கிறார்கள்.

எதிர் நீச்சலில் அடுத்தடுத்து சண்டை சச்சரவுகள் மட்டும்தான் இருக்குமா? இதுக்கு முடிவே இல்லையா? என்றும் சிலர் அலுத்துக் கொள்கிறார்கள். இன்னும் ஒரு சில ரசிகர்கள் சீக்கிரமாக ஜீவானந்தம் யார் என்பது பற்றிய எபிசோடு வரவேண்டும் என்றும் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications