ஜான்சி ராணிக்கு பதிலடி கொடுத்த நந்தினி.. கௌதம் செயலால் ஏற்பட்ட பரபரப்பு.. அதிரடியில் எதிர்நீச்சல்
சென்னை: கோவிலுக்கு ஜான்சி ராணி ஆதிரையை கூட்டிக்கொண்டு சக்தி, ஜனனி, நந்தினி மூவரும் வருகின்றனர்.
ஜான்சி ராணி பேசும் வார்த்தையை கேட்டு கடுப்பான நந்தினி முகத்துக்கு நேராக திட்டி விடுகிறார்.
நந்தினி பேசுவதை கேட்டு கோபமாகும் கதிர் அடிக்கப் போகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பரபரப்பான திருப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆதிரை மற்றும் அருண் திருமணம் முடியும் வரைக்கும் அருண் மற்றும் கௌதம் இருவரும் தனியாக ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்று ஜனனியும் சக்தியும் முடிவெடுத்து வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அருண் இருக்கும் ஊருக்கே கரிகாலனின் அம்மாவான ஜான்சி ராணி ஆதிரையை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு பரிகாரம் செய்வதற்காக வருகிறார். இதனால் சக்தியை கரிகாலன் குடும்பத்தினர் மற்றும் கதிர் பார்த்து விடக்கூடாது என்று சக்தியும் ஜனனியும் பயந்து கொண்டிருக்கின்றனர்.
அருண் மற்றும் கௌதம் இருவரும் ஹாயாக டீக்கடையில் டீ குடித்துவிட்டு ரோட்டில் நடந்து கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் காரில் வரும் கதிர் அவர்களை பார்த்து விடக்கூடாது என்று நந்தினி போன் பண்ணி கதிரை கடுப்பேற்றும் விதமாக பேசிக்கொண்டே இருக்கிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடி ல் ஜான்சி ராணி கோவிலுக்கு வந்த நிலையில் கோவிலில் வைத்து ஆதிரையிடம் ஜான்சி ராணி ஏதோ சொல்ல, அதனால் கோபமாகும் நந்தினி திட்டுகிறார். அதை தடுக்கும் ஜனனி, அக்கா சும்மா இருங்க அக்கா என்று சொல்ல, அப்போ அவங்க பேசிக்கிட்டே இருப்பாங்க நம்ம சும்மா இருந்துகிட்டே இருக்கணுமா என்று கேட்கிறார்
அதற்கு கதிர் வாய மூடிகிட்டு இரு என்று அனைவரும் முன்னாடியும் நந்தினியை திட்டுகிறார். அதைத்தொடர்ந்து அனைவரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே ரோட்டில் அருண் மற்றும் கௌதம் இருவரும் நடந்து வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது பார்த்த நந்தினி அது அருண் தானே அய்யோ மாட்டிக்கிட்டாங்களே என்று பதறுகிறார். தற்போது இந்த பரபரப்பான ப்ரோமோ வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த பிரமோவை பார்த்த நெட்டிசன்கள் சிலர் திட்டியும் வருகிறார்கள். அருண் மற்றும் கௌதம் இருவரில் யாருக்காவது ஒரு மெசேஜ் பண்ணி இருக்கலாம். போன் பண்ணி இருக்கலாம். எதற்காக வில்லனை பெரிய ஆளாக காட்ட வேண்டும் என்பதற்காக இப்படி செய்ய வேண்டும். ஹீரோயினிக்கு முக்கியத்துவம் கொஞ்சம் அதிகமாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சிலர் கருத்து கூறி வருகிறார்கள்.
இன்னும் ஒரு சிலர் கௌதம் கையால் கதிர் அடி வாங்க வேண்டும் அப்போதுதான் கதை சூடு பிடிக்கும் என்று கருத்து தெரிவிக்க, இன்னும் சிலர் அருண் ஆதிரை கல்யாணம் எதிர்நீச்சல் செய்திகளுக்கு சாபக்கேடு என்று தங்களுடைய கோபத்தையும் காட்டி வருகின்றனர்.அது மட்டுமல்லாமல் நம்ம வீட்டு பெண்களை நாம் கேவலமாக நடத்தினால் வெளியில் இருந்து வருபவர்களும் அப்படித்தான் நடத்துவார்கள். அதற்கு இந்த ஜான்சி ராணி கேரக்டர் நிருபணம் என்று சிலர் கருத்துக்களையும் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications