எதிர் நீச்சலில் வெளி வரும் உண்மை..குணசேகரனுக்கு கிடைத்த ஏமாற்றம்..கரிகாலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சென்னை: ஜனனியை தொடர்ந்து ரேணுகாவும் குணசேகரனை எதிர்த்து பேச தொடங்கி இருக்கிறார்.
வீட்டு மருமகள்கள் எல்லோரும் சத்தியம் செய்து தர வேண்டும் என்று குணசேகரன் விதண்டாவாதம் செய்கிறார்.
அருண் இதே ஊரில் தான் இருக்கிறார் என்பது போட்டோ மூலமாக கரிகாலனுக்கு தெரிய வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மே 24ம் தேதிக்கான எபிசொட்டின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் குணசேகரன் ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணத்தில் எங்களால் எந்த பிரச்சனையும் வராது என்று வீட்டில் இருக்கும் அனைவரும் சத்தியம் செய்து தர வேண்டும் என்று கேட்கிறார்.
குலசேகரனுக்கு எதிராக ரேணுகா நாங்க எதற்கு உங்களுக்கு சத்தியம் செஞ்சு தரணும் என்று பதில் கேள்வி கேட்க வீட்டில் இருக்கும் வேலைக்காரர்கள் விசாலாட்சி என அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். குணசேகரன் அப்படியா என்பது போன்று தலையை ஆட்டிக்கொண்டு நிற்கிறார்.

அதைத் தொடர்ந்து குடும்ப கோவிலுக்கு சென்று இருக்கும் கரிகாலனை பார்ப்பதற்காக அவருடைய நண்பர் அங்கே வர அவர் தான் எடுத்த போட்டோக்கள் மட்டும் வீடியோக்களை கரிகாலனிடம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கரிகாலன் தன்னுடைய நண்பரின் அருகில் டீ குடித்துக் கொண்டிருந்த அருண் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சடைந்துகிறார்.
டேய் இது யாருடா என்று கேட்க நான் தான் என்று அந்த நண்பர் சொல்ல, இல்ல உன் பின்னாடி இருக்கிறது அருண் தானே என்று கேட்க அங்கிருக்கும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கோவிலில் ஜனனி சக்தி, நந்தினி மூவரும் ஏற்கனவே அருண் மற்றும் கௌதம் இருவரையும் பார்த்துவிட்ட நிலையில் கதிர் இவர்களை பார்த்து விடக்கூடாது என்று பயந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது கதிருக்கும் உண்மை தெரிந்து விடுமோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

அருண் என்ற பெயரை சொன்னதும் கதிர், ஜான்சி ராணி, ஜான்சி ராணியின் கணவர் மூன்று பேரும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். இதனால் இனி என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இதே நேரத்தில் இந்த சீரியலில் ஆதிரை மற்றும் அருண் திருமணம் பலருக்கும் போர் அடிப்பதாக கமெண்ட்களில் கருத்துக்கள் குவிந்து கொண்டிருக்க கரிகாலன் தான் பாவம் என்று பலர் பீல் பண்ணியும் வருகிறார்கள்.
இன்னும் பல ரசிகர்கள் ஜீவானந்தம் அறிமுகம் எப்போது என்று கேள்வி எழுப்பி கொண்டு இருக்க, நாலு நாள் நடுரோடு காதலுக்காக நாலு வருஷம் இழுப்பீங்க போலயே என்று பலர் தங்களுடைய வருத்தத்தை கமண்ட்டுகளில் தெளிக்க, இந்த கல்யாண கதைக்கு ஒரு முடிவு கட்டுங்கள் என்று பலர் வேண்டுகோள் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications