காலில் விழுந்த விசாலாட்சி..கலங்கி போன குணசேகரன்..ஆதிரை எடுத்த முடிவு..பரபரப்பான திருப்பங்கள்
சென்னை: குணசேகரனின் அம்மா விசாலாச்சி ஆதிரைக்காக சாருலதாவின் காலில் விழுந்து கெஞ்சுகிறார்.
அது எப்படி எல்லோரும் பச்சோந்தியாக இருக்கீங்க என்று குணசேகரன் கேட்ட கேள்விக்கு ரேணுகா பதிலடி கொடுக்கிறார்.
தன்னுடைய அம்மா சாருலதா காலில் விழுந்ததை பார்த்து குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பல தருணங்கள் இன்றைய எபிசோடு நடக்க இருக்கிறது. நேற்றைய எபிசோட் அப்பத்தா பார்க்க விடாமல் குணசேகரன் தடுத்து நிறுத்தியதால் ஜனனி இன்ஸ்பெக்டர், வக்கீல் மற்றும் ஹியூமன் ரைட்ஸ் ஆபிஸர் என பலரையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார்.
ஆனாலும் அனைவர் முன்னிலையிலும் எல்லாரையும் பார்ப்பதற்கு அனுமதித்தால் இன்பெக்சன் ஆகி விடும் அதனால் தான் யாரையும் உள்ளே விடவில்லை. எனக்கு அப்பத்தா மீது அதிகமாக பாசம் இருக்கிறது என்று குணசேகரன் சீன் போட்டு நடித்து விட்டார்.. இந்த நிலையில் வந்த ஹியூமன் ரைட்ஸ் ஆபீஸர் சக்தி, ஜனனிக்கும் உரிமை இருக்கிறது அவர்களும் அப்பத்தாவை பார்க்க விட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
ஆனாலும் அவர்கள் போன பிறரு நர்ஸ் கலையிடம் நீங்க யாராவது உள்ளே வந்து அப்பத்தாவை பார்த்து அப்பத்தாவுக்கு ஏதாவது ஆகிவிட்டால் நான் நேத்து வந்து பஞ்சாயத்து பண்ண வந்த ஆபிஸர் எல்லாரையும் ஒரு வழி பண்ணிடுவேன் என்று மிரட்டுகிறார். அதுபோக அப்பத்தாவை ஜனனியின் முன்பு கதவை திறந்து பார்த்துக் கொண்டு ஜனனி பார்ப்பதற்குள் குணசேகரன் கதவை மூட சொல்லி விடுகிறார். இதனால் ஜனனி கோபமாக இருந்தார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரன் எல்லோரிடமும் எப்படித்தான் எல்லோரும் பச்சோந்தி மாதிரி இருக்கீங்களோ தெரியல என்று சொல்ல, அதற்கு ரேணுகா நீங்க எப்படி இருக்கீங்களோ அப்படித்தான் எல்லோரும் இருக்காங்க என்று பதிலடி கொடுக்கிறார்.
அடுத்ததாக சாருலதா குணசேகரன் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது ஆதிரை வீட்டிற்கு கீழே தரையில் அமர்ந்தபடி எனக்கு இன்னிக்கி ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும் என்று போராட்டம் செய்கிறார். அப்போது விசாலாட்சி வேறு வழியில்லாமல் சாருலதா காலில் விழுந்து என்னுடைய மகன் செய்த தப்புக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறுகிறார். அப்போது சரியாக வீட்டிற்குள் கதிர் மற்றும் குணசேகரன் வருகின்றனர். இவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியாகின்றனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications