பெருமை பேசும் குணசேகரன்..பதிலடி கொடுத்த ரேணுகா..வெளிச்சத்துக்கு வந்த ஜனனி செய்த ரகசியம்
சென்னை: ஆதிரை எடுத்த முடிவுக்கு காரணம் நான் தான் என்று ஜனனி அருண் இடம் கூறுகிறார்.
பணத்தை கொடுத்தால் வேலை செய்ய பல பேர் இருக்காங்க என்று குணசேகரன் பெருமை பேசுகிறார்.
ஆதிரை, அருண் திருமணத்தை நடத்தி வைத்து விட வேண்டும் என்று ஜனனி அருணிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மே 6ஆம் தேதிக்கான எபிசோட்டுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் குணசேகரன் பணத்தை கடைக்காரங்க கிட்ட தூக்கி எறிஞ்சா வீட்டில் வந்து இறக்கி வச்சுட்டு போயிருவான் எல்லாத்தையும் என்று சொல்ல, அதற்கு ரேணுகா பிறகு எதுக்கு எங்க கிட்ட சொல்றீங்க என்று பதிலடி கொடுக்கிறார்.
அதற்கு ஜனனி கிச்சனில் இருந்தபடியே கண்மூடித்தனமா நம்ம சொல்றத செய்வதற்கு அடிமை இருக்குன்னு சந்தோஷப்படுறதுக்காகத்தான் என்று சொல்ல, கதிர் உடைய முகம் மாறுகிறது. குணசேகரனும் வில்லங்கமாக முகத்தை மாற்றுகிறார்.

அடுத்ததாக அருணை ஜனனி, நந்தினி, ரேணுகா மூவரும் சந்திக்கின்றனர். அப்போது ஆதிரை மேல உனக்கு இருக்கிறது. உண்மையான காதல் தானா என்று கேட்க அதற்கு வரும் எல்லாரும் முன்னாடியும் அவ ஓகே என்று சொல்லிட்டு தான போனா என்று சொல்கிறார். அதற்கு ஜனனி நான் தான் அப்படி சொல்ல சொன்னேன் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இந்த நிலையில் மீண்டும் ஆதிரை மற்றும் அருண் திருமண டிராக் தொடங்கி விட்டதே என்று ரசிகர்கள் பீல் பண்ணி இந்த பிரமோவிற்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆதரவு மற்றும் அருன் திருமணம் நடக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை யார் அந்த ஜீவானந்தம் என்பதை மட்டும் காட்டுங்கள் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.

அதோடு ஜனனியை விடவும் குணசேகரனை கலாய்ப்பதில் ரேணுகா அசத்துகிறார் என்று ரேணுகாவுக்கு அதிகமான வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த நாலு நாளு லைவ்வுக்காக நாலு வருஷம் இப்படியே ஓட்டி விடுவாங்க போல, அதனால கதையை மீண்டும் ஆதிரை திருமணம் பக்கம் திருப்பாதீங்க என்று கருத்துக்கள் குவிக்கிறது.












Click it and Unblock the Notifications