எதிர்நீச்சல்: குணசேகரனின் சுயரூபத்தை காட்டிய சக்தி.. ஞானம் கேட்ட கேள்வி.. விசாலாட்சிக்கு விழுந்த அடி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் 18ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் ஜீவானந்தம் மனைவியை கொலை செய்தது குணசேகரன் தான் என்ற உண்மையை சக்தி வீட்டில் அனைவர் முன்பும் சொல்ல அதைக் கேட்டு ஞானம் மற்றும் விசாலாட்சி அதிர்ச்சி அடைகின்றனர்.

அதோடு குணசேகரன் பற்றிய உண்மையை நாங்கள் போலீஸிடம் சொல்லி இருந்தால் இன்னைக்கு எல்லாரும் உள்ளே போய் இருப்பாங்க என்று சக்தி தன்னுடைய அம்மா விசாலாட்சியை மிரட்டுகிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜீவானந்தத்தின் மனைவியை குணசேகரன் மற்றும் கதிர் ப்ளான்படி கொலை செய்திருந்தனர். அதைத்தொடர்ந்து இப்போது பட்டம்மாள் மற்றும் ஜீவானந்தத்தை கொலை செய்ய வேண்டும் என்று குணசேகரன் பிளான் போட்டிருந்தபடியே பட்டம்மாளையும் கொலை செய்துவிட்டனர்.
குணசேகரன் பாலில் மயக்க மருந்து கொடுத்து பட்டம்மாள் மயங்கி இருக்கும் போது அவரை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போவது போன்று காரில் போய்க்கொண்டிருந்த நிலையில், குணசேகரன் தன்னை நோக்கி சிலர் துப்பாக்கியால் சுட்ட போது தன்னுடைய தம்பிகளை கூட்டிக்கொண்டு காரில் இருந்து இறங்கி போயிருந்த நேரத்தில் அப்பத்தா இருந்த கார் வெடித்து சிதறி இருந்தது.

இந்த நிலையில் இது குறித்த பிரச்சனை வீட்டுக்குள்ளே புகுந்தமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே அப்பத்தாவை காருக்குள் குண்டு வைத்து கொலை செய்தது ஜீவானந்தம் தான் என்று குணசேகரன் கம்பளைண்ட் செய்து இருந்த நிலையில் இது பற்றி நேற்று எபிசோடில் ஈஸ்வரி விசாலாட்சி மற்றும் ஞானத்திடம் கோபமாக பேசி இருந்தார்.
அப்பத்தா இறந்த பிறகு வீட்டில் யாருக்கும் சொல்லாமல் குணசேகரன் ராமேஸ்வரத்துக்கு சென்று அஸ்தியை கரைக்க போயிருக்கிறார். இது சக்தி மற்றும் ஜனனிக்கு மேலும் சந்தேகத்தை கொடுத்து இருக்கிறது. கார் வெடித்த இடத்தில் சிதறி கிடந்த அப்பத்தாவின் புடவையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்திருந்த ஜனனி மற்றும் சக்தி இருவரும் வீட்டில் அனைவரிடமும் புடவையைக் காட்டி அழுது கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் விசாலாட்சி, தன்னுடைய அம்மா போலத்தான் என்னுடைய மாமியார் இருந்தார். நான் எத்தனையோ முறை அவரை திட்டியிருக்கிறேன். அவரும் என்னை திட்டி இருக்கிறார் ஆனால் ஒரு அம்மா ஸ்தானத்தில் தான் நான் அவரை பார்த்து வந்தேன் என்றெல்லாம் கதறி அழுது கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ஈஸ்வரி கேட்கும் கேள்விகளுக்கு ஞானம் கோபப்படுகிறார். அப்போது சக்தி கோபமாக, அந்த மனுஷன் ஜீவானந்தம் பொண்டாட்டியை கொன்னுது உங்க அண்ணன் தான் என்று சொல்ல அதைக்கேட்டு விசாலாட்சி திருத்திருவென முழிக்கிறார். கூடவே அன்னைக்கு மட்டும் நாங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிருந்தேன்னு வை உங்க புள்ளைங்க எல்லாம் ஜெயிலுக்குள்ள என்று சக்தி விசாலாட்சியை பார்த்து சொல்ல அதற்கு ஞானம் என்ன எல்லாரும் சேர்ந்து நாடகம் போடுறீங்களா? என்று கேட்கிறார்.
அதற்கு ரேணுகா உங்க அண்ணன் வேட்டிய புடிச்சுகிட்டு சுத்துவ இல்ல. ஜீவானந்தம் பொண்டாட்டியை யாரு கொன்னதுன்னு போய் கேளு என்று கோபமாக கத்துகிறார். இந்த நிலையில் குணசேகரன் பற்றிய மொத்த உண்மையையும் இன்று ஞானம் மற்றும் விசாலாட்சிக்கு தெரிய வரும்போது அவர்கள் என்ன முடிவெடுக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications