எதிர்நீச்சல்: குணசேகரனுக்கு ஆப்பு வைத்த ஜனனி.. வீட்டிற்கே வந்த போலீஸ்.. இனி நடப்பது இது தானா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் 30-ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குணசேகரனை கைது செய்வதற்காக போலீஸ் வீட்டிற்கு வந்திருக்கும் நிலையில் அதை பார்த்து கதிர் அதிர்ச்சியாகிறார்.

அதே நேரத்தில் அப்பத்தா கேசில் சாருலதா தான் வக்கீலாக ஆஜராகி இருக்கிறார் என்பது குணசேகரனுக்கு தெரியாமல் இருக்கிறது.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே நேற்று எபிசோடில் எலக்ஷனில் நிற்பதற்காக ஈஸ்வரி சம்மதம் என்று தெரிவிக்க, அதைத் தொடர்ந்து எலக்சன் ஆபீசுக்கு சென்று இருந்த குணசேகரன் குடும்பத்தினர் மற்றும் எஸ் கே ஆர் குடும்பத்தினர் வழக்கம் போல வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சாருலதா நான் சுயமாக யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் இந்த தேர்தலில் தனித்து நிற்கிறேன். அதுபோல ஈஸ்வரியால் சொல்ல முடியுமா என்று கேட்க அதற்கு ஜனனியின் பிளான் படி குணசேகரை குழப்பிவிட்டு ஈஸ்வரி ஆமா நானும் சுயமாக தான் முடிவு எடுத்து இருக்கிறேன். யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று கூறியிருந்தார்.
சாக்லேட்டுக்காக நடித்த சீன்.. கடைசியில் விக்ரமன் சொன்ன மாதிரியே ஆகிட்டு.. மனம் திறந்த நடிகை மோகினி

ஆரம்பத்தில் ஜனனி சொன்ன அறிவுரையை கேட்காத குணசேகரன் பின்பு எஸ் கே ஆர் குடும்பத்துடன் தான் தோற்கக் கூடாது என்பதற்காக ஆமாம் சாமி போட்டிருந்தார். இப்படியான நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சாருலதாவும் ஜனனியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சாருலதா ஜனனி இடம் அப்பத்தா கேசில் ஆஜராகி இருக்கும் வக்கீல் நான்தான் என்பது குணசேகரனுக்கு தெரியுமா என்று கேட்கிறார்.

அப்போது ஜனனி தெரியும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார். அதை தொடர்ந்து வீட்டில் விசாலாட்சி இடம் ஜனனி அப்பத்தா கேஸில் ஜீவானந்தத்திற்கு சம்மதம் இல்லை குற்றவாளி வேறொருத்தர் என நிரூபித்தால் உங்கள் மகன் எங்க வழியில் தலையிட கூடாது என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு போலீஸ் வந்து ஸ்டேஷனுக்கு வர சொல்ல அதற்கு கதிர் வர முடியாது என்று சொல்கிறார்.
அதற்கு போலீஸ் நீங்க வரவில்லை என்றால் போர்சை கொண்டு வந்து அள்ளிட்டு போற மாதிரி இருக்கும் என்று சொல்ல, இதை கேட்டு குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைகிறது. இதை தொடர்ந்து வழக்கம் போல நடிகர் வேல ராமமூர்த்திக்கு வேற சூட்டிங் எதுவும் வந்துவிட்டதா? அதனால் தான் ஜெயிலுக்கு போவது போன்று மீண்டும் கதையை கொண்டு போகப் போகிறாரா என்ற கேள்விகளும் இருக்கிறது.
அதனாலேயே ஈஸ்வரியை தேர்தலில் நிற்க வைத்து புது பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்போது குணசேகரன் ஜெயிலுக்கு போவது போன்று இனி கதை நகரப் போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications