எதிர்நீச்சல்: துப்பாக்கியோடு வந்த ஜீவானந்தத்திற்கு அதிர்ச்சி கொடுத்த தர்ஷினி.. குணசேகரன் கேட்ட கேள்வி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் 7ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் கோவில் திருவிழாவிற்கு வரும் ஜீவானந்தத்திடம் ஈஸ்வரி பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு குணசேகரன் வந்துவிடுகிறார்.

அதே நேரத்தில் குணசேகரனை கொலை செய்ய வேண்டும் என்று துப்பாக்கியோடு வந்த ஜீவானந்தத்திற்கு தர்ஷினி அதிர்ச்சி கொடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அதாவது எதிர்நீச்சல் சீரியலில் தன்னை அப்பத்தாவிற்காக அவமானப்படுத்திய ஜீவானந்தத்தை போட்டு தள்ள வேண்டாம் என்ற முடிவில் இருந்து வரும் குணசேகரனுக்கு அந்த சிந்தனைக்கு வலு சேர்க்கும் விதமாக ஜீவானந்தம் ஈஸ்வரியின் முன்னாள் காதலன் என்ற ரகசியமும் தெரிய வந்திருக்கிறது.

இந்த நிலையில் இதற்காக கதிர் மற்றும் கிள்ளிவளவனை சேர்த்துக் கொண்டு ஜீவானந்தத்தை மட்டும் அல்லாமல் அப்பத்தாவையும் போட்டு தள்ள வேண்டும் என்று கோவில் திருவிழாவை நடத்துகிறார். ஆனால் இந்த ரகசியம் தெரிந்த மருமகள்கள் குணசேகரனால், ஜீவானந்தத்திற்கு எதுவும் ஆகி விடக்கூடாது. ஏற்கனவே குணசேகரன் மற்றும் கதிரால் ஜீவானந்தத்தின் மனைவி உயிர் போய்விட்டது என்று அதை நினைத்து பயந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று எபிசோடில் ஜீவானந்தம் குழந்தை வெண்பாவை அவரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று ஈஸ்வரி உடம்பு சரியில்லை என்று எல்லாரையும் கோவிலுக்கு அனுப்பி வைத்து விடுகிறார். இப்படியாக இருக்கும் நிலையில் இன்று வெளியான பிரமோவில் ஈஸ்வரி ஜீவானந்தத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் அங்கு வரும் குணசேகரன் வணக்கம் ஜீவானந்தம், என்ன ஈஸ்வரி இவரை பார்த்து பேச தான் உடம்பு சரியில்லைனு பொய் சொன்னியா? என்று நக்கலாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கவுதம் துப்பாக்கியை வைத்து குணசேகரனுக்கு குறி வைத்துக் கொண்டிருக்கிறார்.
இதனை போனில் பேசிக்கொண்டே இருக்கும் கதிர் பார்த்து விடுகிறார். அதைத்தொடர்ந்து ஜீவானந்தத்திடம் ஈஸ்வரியின் மகள் தர்ஷினி,சார் வெண்பா எங்க அம்மாவை அம்மா என்று கூப்பிடுகிறா, நான் உங்களை அப்பானு கூப்பிடலாமா என்று கேட்டு ஜீவானந்தம் தோள் மேல் சாய்ந்து கண்கலங்கி அழுகிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இந்த கோவில் திருவிழாவில் யாருடைய கதை முடிய போக போகிறதோ என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

அதே நேரத்தில் ஜீவானந்தத்தை தந்தை என்று இப்போது குணசேகரன் சொல்லி இருக்கும் நிலையில் இது தெரிந்தால் குணசேகரன் என்ன மாதிரி ரியாக்ட் பண்ணுவார் என்பதை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதோடு இந்த திருவிழா காட்சிகளை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக வைத்து சீக்கிரமாக முடித்து அடுத்த கட்ட கதை நகர்வை கொண்டு போனால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

அதுபோல இந்த கோவில் திருவிழாவில் அப்பத்தாவின் கதை முடிய போகிறதா? அல்லது குணசேகரனுக்கு ஏதாவது ஆகப்போகிறதா என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications