எதிர்நீச்சலில் புது வில்லன் வந்ததும் இப்படியா ஆகணும்? “இதை” கவனிச்சீங்களா? அப்போ இது காப்பியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 17ஆம் தேதிக்கான எபிசோடில் புது வில்லன் விஷ்ணு ஜனனியின் சகோதரன் என்று தெரிய வந்திருக்கிறது.

அதே நேரத்தில் இதுவரைக்கும் குணசேகரனை மையமாகக் கொண்டு கதை நகர்ந்து இருந்த நிலையில் இனி ஜனனி குடும்பத்தை வைத்து கதை போகப்போகிறது.

அதே நேரத்தில் இந்த சீரியலின் கதை எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனரான திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் சீரியலின் கதையைப் போலவே இப்போது பயணிக்கிறது. அது பற்றி பார்ப்போம்.

Ethirneechal Serial 2023 October 17th promo and episode full update

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போல தான் அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஜீவானந்தத்தின் மனைவியை குணசேகரனும் அவருடைய தம்பி கதிரும்தான் கொலை செய்தார்கள் என்ற உண்மை ஜீவானந்தத்திற்கு தெரிய வருவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று நினைத்திருந்த நிலையில் இப்போது அது ஈஸ்வரி மூலமாக ஜீவானந்தத்திற்கு தெரிய வந்திருக்கிறது.

அதே நேரத்தில் அப்பத்தாவையும் ஜீவானந்தத்தையும் போட்டு தள்ளுவதற்காக குணசேகரன் சொல்படியே கதிரும் வளவனை சந்தித்து பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் குணசேகரனையும் கதிரையும் போட்டு தள்ளி அவர்கள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கி விடுவேன் என்று ஜீவானந்தம் கூறியிருக்கிறார். ஏற்கனவே இந்த ரகசியத்தை தெரிந்து கொண்ட கௌதம் குணசேகரனை போட்டு தள்ளுவதற்காக பிளான் போட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பக்கம் குணசேகரனுக்கு ஆதரவாக கதிரும் அந்தப் பக்கத்தில் ஜீவானந்தத்திற்கு ஆதரவாக கௌதமும் இருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் எல்லோருமே அப்பத்தாவின் கிராமத்திற்கு சென்று கோவில் திருவிழாவை நடத்தி அங்கு வைத்து தங்களுடைய பழியை தீர்த்து விடலாம் என்று இருக்கின்றனர். அதே நேரத்தில் ஜனனிக்கு பிரச்சனை கொடுக்கும் விதமாக கிருஷ்ணசாமி ஐயப்பன் (கிருஷ்ணா) என்ற பெயரில் ஆர் ஜே நெலு அறிமுகம் ஆகி இருக்கிறார்.

அவர் அறிமுகமான முதல் நாளே ஜனனி மற்றும் சக்திக்கு பிரச்சனைகளை கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் தன்னுடைய சித்தப்பா தான் நாச்சியப்பன் என்பதை கிருஷ்ணா கூறியிருக்கிறார். அதோடு தன்னுடைய சித்தப்பாவின் குழந்தைகள் யார் என்று தெரியாது ஆனால் அவர்கள் எனக்கு எதிரி தான் காரணம் அவர்கள் சொத்துக்கு வந்து விடக்கூடாது என்றும் பயம் இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

நாச்சியப்பனின் குடும்பத்தை காட்டுவதற்காகத்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாச்சியப்பன் தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து பேசி இருக்கிறார். தன்னுடைய குடும்பமும் பெரிய பணக்கார குடும்பம் தான். நான் ஜனனியின் அம்மாவை காதலித்த பாவத்துக்காக தான் இப்போது கஷ்டப்படுகிறேன். பணம் இருக்கும் போது ஊர் எப்படி நடந்து கொள்ளும், இல்லை என்றால் எப்படி நடந்து கொள்ளும் என்பது எனக்கு தெரியும்.

Ethirneechal Serial 2023 October 17th promo and episode full update

இப்போதும் நான் இவர்களை வேண்டாம் என்று தூக்கிப்போட்டு விட்டு போனால் என்னுடைய அண்ணன்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்லி இருந்தார். அதுபோலவே கிருஷ்ணா அறிமுகம் ஆன முதல் நாளே தன்னை கிருஷ்ண சுவாமி மெய்யப்பன் என்பதை தெளிவாக அழுத்தி கூறியிருந்தார். இந்த நிலையில் இனி அந்த கம்பெனி ஜனனியின் பெரியப்பா அதாவது கிருஷ்ணாவின் அப்பா மூலம் ஒருவேளை கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் கிருஷ்ணாவுக்கு ஜனனி மீது மேலும் கோபம் கூடும். ஜனனி மற்றும் சக்தி தன்னுடைய வாழ்க்கையில் இனி தனியாக பயணிக்க இருக்கும் நிலையில் கிருஷ்ணா அடுத்தடுத்து அவர்களுக்கு பிரச்சனையை கொடுத்து கதை வேறு விதமாக பயணிக்கும். இப்படியாக கதை போய்க்கொண்டு இருக்கும் நிலையில் இது ஏற்கனவே கோலங்கள் சீரியலில் அபி மற்றும் ஆதிக்கு இடையே இருந்த உறவு போலவே இப்போது எதிர்நீச்சல் சீரியலிலும் கதையை மாற்றி இருக்கிறார்கள்.

ஏற்கனவே குணசேகரனுக்கு அதிகமான முக்கியத்துவம் இருந்த நிலையில் குணசேகரனாக நடித்த மாரிமுத்து இறந்த பிறகு வேலராமமூர்த்தி அறிமுகமானார். ஆனால் அவரும் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் அதிகமாக சீரியலில் வர முடியாது என்ற சூழ்நிலை இருக்கும் நிலையில் கதையில் இப்போது அதிரடியான மாற்றம் செய்திருக்கின்றனர். ஆனாலும் இது இனி கோலங்கள் சீரியல் போலவே வெற்றியோடு சுவாரசியமாக இருக்குமா? அல்லது கோலங்கள் சீரியலின் பார்ட் 2வாக மாறப்போகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+