ஜான்சி ராணி சொன்ன அந்த வார்த்தை.. அடிக்க பார்த்த தர்ஷன்.. பரபரப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 18ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஈஸ்வரியின் கேரக்டரை தப்பாக பேசிய ஜான்சி ராணியை தர்ஷன் அடிக்கப் போகிறார்.

அதே நேரத்தில் விசாலாட்சி மொத்த குடும்பத்தையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் எதிர்பார்த்து இருந்த அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. குணசேகரன் ஜெயிலுக்கு போன பிறகு இனி கதை எப்படி நகர போகிறது என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது கிருஷ்ணா என்கிற புது வில்லன் அறிமுகமாகி இருக்கிறார். அதுவும் அவர் ஜனனியின் தம்பிதான்.

ஏற்கனவே குணசேகரன் கதிர் ஒரு பக்கம் பிரச்சினை செய்து கொண்டிருக்கும் நிலையில் இனி கிருஷ்ணாவும் அவருடைய குடும்பத்தினரும் புதியதாக சீரியலில் அறிமுகமாகி இருக்கின்றனர். அவர்களால் இனி கதையில் வேகம் ஏற்பட இருக்கிறது. அதே நேரத்தில் ஜீவானந்தத்திற்கு தன்னுடைய மனைவியை கொலை செய்தது குணசேகரனும் அவருடைய தம்பி கதிரும் தான் எந்த உண்மை ஈஸ்வரி மூலமாக தெரிய வந்திருக்கிறது.
ஆனால் அதே நேரத்தில் ஈஸ்வரியை இத்தனை நாட்களாக தன்னிடம் உண்மையை மறைத்து விட்ட காரணத்திற்காக ஜீவானந்தம் திட்டி அனுப்பி விடுகிறார். இந்த நிலையில் இனி குணசேகரன் வீட்டு பெண்களுக்கு உதவி செய்வதற்காக யார் வருவார்கள் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதே நேரத்தில் அப்பத்தா இனி என்னிடம் எந்த உதவியும் எதிர்பார்க்க கூடாது என்று கறாராக கூறி இருக்கிறார்.

அதுபோல கோவில் திருவிழாவில் அப்பத்தா மற்றும் ஜீவானந்தத்தை போட்டு தள்ள வேண்டும் என்று கதிர் குணசேகரனின் சொல்படியே வளவனை சந்தித்து பிளான் போட்டு இருக்கிறார்.
அதே நேரத்தில் அந்த பங்க்ஷனில் வைத்து குணசேகரனையும் அவருடைய தம்பியையும் போட்டு தள்ள வேண்டும் என்று ஜீவானந்தம் பிளான் போட்டு இருக்கிறார் இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் வீட்டிற்குள் ஜான்சி ராணியின் ஆட்டம் அதிகரித்து இருக்கிறது.

நேற்றைய எபிசோடில் தாரா கரிகாலனையும், ஜான்சி ராணி யையும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது தர்ஷன் ஜான்சி ராணி எப்போது என்கிட்ட அடி வாங்க போகுதுன்னு தெரியல. அன்னைக்கி எனக்கு கோபம் அவ்வளவு வந்துச்சு. ஆனா வயசு காரணம் காட்டி தான் நான் கை நீட்டாமல் இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க, இதை எல்லாம் கேட்ட ஜான்சி ராணி விசாலாட்சியை கூட்டிக்கொண்டு மாடிக்கு வந்து இவர்களிடம் விசாரிங்கள் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் சக்தியும் ஜனனியும் வீட்டிற்கு சோகமாக வருகின்றனர். அப்போது தாரா விசாலாட்சி இடம் இந்த ஜான்சி ராணியும் கரிகாலனும் வீட்டில் இருக்கிறது எனக்கு பிடிக்கல என்று சொல்ல, அதற்கு விசாலாட்சி பிடிக்கலன்னா போங்கடி என்று சொல்ல, அதற்கு தார இது எங்க வீடு அவங்களை வேணா ஓட சொல்லுங்க என்று திட்டுகிறார்.
அதைத்தொடர்ந்து ஞானம், கதிர், கரிகாலன் மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கதிர் யோசித்துக் கொண்டே இருக்க ஞானம் என்ன நடந்துச்சுன்னு சொல்லு என்று சொல்ல இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை எல்லாம் ஜான்சி ராணி ஒளிந்து நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதை தொடர்ந்து மாடியில் வீட்டு பெண்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது ஜான்சி ராணி புள்ளை பெக்கும் போது புருஷனை நினைத்து பெத்திருக்க மாட்டா என்று திமிராக பேச அதை கேட்டு கோபமான தர்ஷன் அடிக்க கையை ஓங்கி பாய்கிறார். அப்போது எல்லோரும் தர்ஷனை பிடித்து கொள்கின்றனர். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications