எதிர்நீச்சல்: கதிர் பிளானை உடைத்த நந்தினி.. கதறி அழுத ஈஸ்வரி.. ஜனனி சொன்ன வார்த்தை..பரபரப்பின் உச்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் இருபதாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் அப்பத்தாவின் ஃபங்ஷனில் என்ன நடக்கப் போகிறதோ என்று குழப்பத்தில் ஈஸ்வரி அழுது கொண்டிருக்கிறார்.

Ethirneechal Serial 2023 October 20th promo full update

அதே நேரத்தில் கோவில் திருவிழாவிற்கு முன்பே ஊருக்கு கிளம்பி போகும் கதிர் சொன்ன வார்த்தையை வைத்து நந்தினி கேள்வி எழுப்புகிறார்.

எதிர்நீச்சல் சீரியல் வரும் ஞாயிற்றுக்கிழமை அப்பத்தாவின் ஊரில் நடக்கும் கோவில் திருவிழா மற்றும் அதைத்தொடர்ந்து அப்பத்தா தன்னுடைய ஷேர் விஷயத்தில் எடுக்க போகும் முடிவு பற்றிய எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. ஏற்கனவே நேற்றைய எபிசோடில் அப்பத்தா கோவில் திருவிழாவை நீங்கள் நடத்தி முடித்ததும் அடுத்த நாள் நான் என்னுடைய ஃபங்ஷனை வைத்திருக்கிறேன்.

மாமன்னன்னை ரீ கிரியேட் செய்த எதிர்நீச்சல்.. மீண்டும் வந்த குணசேகரன்.. அப்பத்தா செய்த மாஸ்
அதில் ஜீவானந்தம் கண்டிப்பாக கலந்து கொள்வார். என்னுடைய சொத்து விஷயத்தில் அப்போதுதான் நான் முடிவு சொல்ல போகிறேன் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். அதே நேரத்தில் திருவிழாவிற்கு முன்பு இரண்டு நாட்களுக்கு முன்பே நாங்கள் எல்லோரும் ஊருக்கு கிளம்பி விடுவோம் என்று அப்பத்தாவும் கூறி இருந்தார்.

ஆனால் விசாலாட்சி நான் என்னுடைய மகன் வந்து என்னை கூப்பிட்ட பிறகுதான் நான் அந்த கோவில் திருவிழாவுக்கு வருவேன் என்று கூறியிருந்தார். இப்படியான நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் எல்லோரும் கோவில் திருவிழாவிற்கு போவதற்காக கிளம்பி இருக்கின்றனர். அதில் முந்தைய நாள் ஜீவானந்தத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த ஈஸ்வரி வாசலில் அமர்ந்திருக்க சுற்றி வீட்டு மருமகள்கள் அமர்ந்திருக்கின்றனர்.

Ethirneechal Serial 2023 October 20th promo full update

அப்போது ஜனனியிடம் அந்த பங்க்ஷனில் அங்க என்று சொல்ல அதற்கு அப்பத்தாவே நம்பிக்கையோடு இருக்காங்க. அந்த பங்க்ஷன் முடியும் போது நிறைய மாற்றங்கள் நடைபெறும் என்று ஜனனி சொல்ல, அதற்கு ஈஸ்வரியை அழுது கொண்டே இருக்கிறார். இதைத்தொடர்ந்து வீட்டு குழந்தைகள் எல்லோரும் வாசல் படியில் அமர்ந்திருக்கும் போது விசாலாட்சி வயிற்றை காய போட்டு இருக்கணும் அப்படி போட்டு இருந்தா இந்த பேச்செல்லாம் வந்திருக்குமா என்று கேட்கிறார்.

அதற்கு தர்ஷினி, நிறுத்துங்க அப்பத்தா சோறு சோறுன்னு பேசிக்கொண்டே இருக்கீங்க என்று கோபமாக திட்ட, அதை கேட்டு கதிர் என்ன.. என்று அதட்டி கொண்டு வருகிறார். அடுத்ததாக கதிரும் கரிகாலனும் விசாலாட்சியிடம் அம்மா நாங்க ஊருக்கு கிளம்புறோம் என்று சொல்லிக் கொண்டிருக்க, அப்போது கரிகாலன் ஆமா நாங்க பல ஏற்பாடுகளை பண்ண வேண்டியது இருக்கு என்று சொல்கிறார்.

Ethirneechal Serial 2023 October 20th promo full update

அப்போது நந்தினி, "திருவிழா ஏற்பாடு தானா? இல்ல வேற எதுவுமே?..." என்று கேள்வி கேட்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது. அதே நேரத்தில் இந்த ப்ரோமோவிற்கு அதிகமான ரசிகர்கள் நந்தினி மற்றும் ரேணுகா இருவரையும் அப்பத்தா சோபாவில் உட்கார சொன்ன போது அவர்கள் இருவரின் கண்களில் பார்த்த மகிழ்ச்சி பார்க்கும் ரசிகர்களுக்கும் சந்தோஷத்தை கொடுத்தது என்று பலர் பீல் பண்ணி கமெண்ட் போட்டு வருகின்றனர். அதே நேரத்தில் அப்பத்தாவுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்றும் பலர் பீலிங்கை ஆறாக ஓட விடுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+