மாமன்னன்னை ரீ கிரியேட் செய்த எதிர்நீச்சல்.. மீண்டும் வந்த குணசேகரன்.. அப்பத்தா செய்த மாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 19ஆம் தேதிக்கான எபிசோடில் மாமன்னன் திரைப்படத்தில் வரும் காட்சிகளைப் போலவே ரி கிரியேட் செய்திருந்தனர்.

வீட்டில் மருமகள்கள் மாமியாருக்கு எதிரே உட்கார கூடாது என்ற ரூல்ஸை அப்பத்தா உடைத்து இருந்தார்.

Ethirneechal Serial 2023 October 19th episode and promo full update

அத்தோடு தன்னுடைய முடிவு பற்றியும் அப்பத்தா ஹிண்ட் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் நேற்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கதிர், ஞானம் கரிகாலன் மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அண்ணன் வந்து இறங்கும்போது அவருக்கு கொடுக்கிற பரிசு நம்ம உயிர்பழி தான் என்று கதிர் பேசிக் கொண்டிருக்க இதையெல்லாம் ஜான்சி ராணி மறைந்து இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.

எதிர்நீச்சல் புது வில்லன் கிருஷ்ணா யார் தெரியுமா? விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி
அந்த நேரத்தில் ஆதிரை அப்பத்தா உங்களை கூப்பிட்டார் என்று அங்கு வந்து கூப்பிடுகிறார். எல்லோரும் அப்பத்தா என்னதான் சொல்ல போறாங்கன்னு பார்ப்போம் வாங்க என்று கிளம்பி மாடிக்கு போகின்றனர். அங்கு அப்பத்தா தன் வீட்டு மருமகள்கள் பேரக் குழந்தைகளோடு தனியாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அப்பத்தா சொன்னதும் உடனே கதிர் தன்னுடைய அண்ணன்களோடு வந்ததை பற்றி என்ன அப்பத்தா இப்ப எல்லாம் நீங்க சொன்னதை உடனே கதிர் சித்தப்பா கேட்கிறார் என்று தர்ஷினி கேட்கிறார்.

அதற்கு கோவில் திருவிழா வரைக்கும் அப்படித்தான் நடந்துக்குவாங்க என்று அப்பத்தா சொல்ல, அதற்கு தர்ஷன் ஆமா அதற்குப் பிறகு வழக்கம்போல கத்தத் தொடங்கிடுவாங்க என்று நக்கல் செய்கிறார். இப்படி இருக்கும் போது ஆதிரை தூங்கிக் கொண்டிருக்கும் விசாலாட்சியை போய் எழுப்புகிறார். விசாலாட்சி இடம் அப்பத்தா உங்ககிட்ட பேசணும்னு சொன்னாங்க எல்லாரும் வரணுமாம் என்று சொல்ல விசாலாட்சியும் என்னவென்று கேட்பதற்காக மாடிக்கு வருகிறார்.

அங்கு விசாலாட்சி நின்று கொண்டிருக்க அப்பத்தா வா என் பக்கத்தில் உட்காரு என்று சோபாவில் உட்கார வைக்கிறார். கூடவே வீட்டு மருமகள்களையும் சோபாவில் உட்கார வைக்க அதற்கு விசாலாட்சி என்ன பண்றீங்க என்று மிரட்டுகிறார். அதற்கு அப்பத்தா நீயும் என் மருமகள் தானே நீ எனக்கு சமமா இருக்கும்போது உன் மருமகள்கள் ஏன் உட்கார கூடாது என்று சொல்லுறா என்று கேள்வி கேட்டு வீட்டு மருமகள்களை தனக்கு பக்கத்தில் இருக்கும் சோபாவில் உட்கார வைக்கிறார்.

அதை பார்த்து கதிர், ஞானம் அதிர்ச்சியாகி முறைத்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த நேரத்தில் ஜான்சி ராணி அப்பத்தா பக்கத்தில் வந்து உட்காராவர, நீ என்ன இங்க வந்து இருக்க வர என்று அப்பத்தா கேள்வி கேட்க, நான் இந்த வீட்டு சம்மந்தி என்று சொல்ல வர அதற்கு இந்த வீட்டிற்கு பிடித்த சாபக்கேடு என்று அவமானப்படுத்தி நீ இங்க எல்லாம் உட்கார கூடாது. அங்க போ என்று கிளப்பி விடுகிறார்.

அதை தொடர்ந்து நாங்க எல்லாரும் திருவிழாவுக்கு இரண்டு நாள் முன்னாடியே அங்க போயிருவோம் என்று அப்பத்தா சொல்ல, அதைக் கேட்டு கரிகாலன் அதிர்ச்சியாகி என்னது நீங்களுமா? என்று கேட்கிறார். அதற்கு என்ன நீங்களுமா? அப்போ நீங்களும் ரெண்டு நாள் முன்னாடியே போறீங்களா? என்று அப்பத்தா கேட்க, அதற்கு ஆமா எல்லாம் அப்படித்தான் என்று கரிகாலன் சமாளிக்கிறார்.

அதைத்தொடர்ந்து நீங்கள் திருவிழா நடத்துவதற்கு அடுத்த நாள் நான் என்னுடைய 40% ஷேர் பற்றி முக்கிய முடிவு சொல்ல போறேன் என்று சொல்ல, அதற்கு விசாலாட்சி என்ன முடிவு அதை இங்கேயே சொல்லுங்க என்று கேட்க, அதற்கு அப்படியெல்லாம் இங்கு சொல்ல முடியாது என்று அப்பத்தா சொல்ல அதைத் தொடர்ந்து கதிர் அந்த ஃபங்ஷனுக்கு ஜீவானந்தம் வருவானா? என்று கேட்க, அதற்கு அப்பத்தா கண்டிப்பா வருவாரு என்று சொல்ல அப்போ எல்லாமே சரிதான் பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

Ethirneechal Serial 2023 October 19th episode and promo full update

அவர்கள் போனதும் நந்தினி எனக்கு என்னவோ சரியா தோணல அப்பத்தா, இந்த கதிர் அடிக்கடி ஜீவானந்தம் வருவாரா? என்று கேட்கிறார். ஏற்கனவே... என்று அவருடைய மனைவி பற்றி சொல்ல வர, அப்போதும் ரேணுகா தடுத்து விடுகிறார். இருக்கிற பிரச்சனையில் எதுவும் புதிய பிரச்சனை ஆகி விடக்கூடாது என்று நந்தினி ரேணுகா எல்லாரும் பேசிக் கொண்டிருக்க அதற்கு அப்பத்தான் எல்லாத்தையும் பாத்துக்கலாம் என்று தைரியமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இப்படியாக நேற்றைய எபிசோடு முடிவடைந்திருக்கும் நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமைக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் அதில் மீண்டும் குணசேகரன் காரில் வந்து கொண்டிருக்கிறார். குணசேகரன் நான் கோவிலுக்கு ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் கோவிலுக்கு வந்துவிடுகிறேன் என்று சொல்லி இருக்கும் நிலையில் இப்போது அப்பத்தாவும் தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கும் நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+