எதிர்நீச்சல்: அசிங்கப்படுத்தும் ஜீவானந்தம்.. சீறும் கதிர்..நடுத்தெருவில் ஜான்சி ராணி.. செம சர்ப்ரைஸ்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 24ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் ஈஸ்வரி ஜீவானந்தத்திற்கு போன் செய்து வெண்பாவை பற்றி பேசி மீண்டும் அவமானப்படுகிறார்.

அதே நேரத்தில் ஜீவானந்தம் பற்றி கதிர் ஒரு பக்கம் பிளான் போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நடு தெருவில் ஜான்சி ராணி தவிக்கிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் ஏற்கனவே ஈஸ்வரி ஜீவானந்தம் வீட்டிற்கு சென்று ஜீவானந்தத்தை காப்பாற்ற உண்மையை சொல்லலாம் என்று நினைத்து, நீங்க கோவில் திருவிழாவிற்கு போக வேண்டாம் ஏற்கனவே உங்க மனைவியை கொலை செய்தது குணசேகரனும் அவருடைய தம்பி கதிரும்தான் என்ற உண்மையை சொன்னார்.
அதைக் கேட்டு கடும் கோபத்தின் உச்சத்தில் ஜீவானந்தம் இத்தனை நாட்களாக உங்களுக்கு எல்லா உண்மையும் தெரிந்திருந்தும் என்கிட்ட சொல்லலையே. அப்போ நீங்க சுயநலமா தான் இருந்திருக்கீங்க? ஏன் என் மீதும் என்னுடைய குழந்தை மீதும் நீங்க காட்டிய பாசம் எல்லாம் வேஷம்தான். நீங்க உங்க கணவரையும் உங்க கணவர் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் எங்ககிட்ட நடிச்சி இருக்கீங்க என்றவாறு கண்டமேனிக்கு பேசி இருந்தார்.

அதோடு இனி இந்த வீட்டுக்கு வந்து விடாதீங்க என்று சொல்லி அனுப்பி வைத்திருந்தார். அந்த அவமானத்தில் ஈஸ்வரி வீட்டு மருமகளிடம் சொல்லி அழுது இருந்தார். யாரு நம்மை கஷ்டப்படுத்தி நம்ம அவமானப்படுத்தனும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்குத்தான் நாம உண்மையாக இருந்து கொண்டு இருக்கோம். நம்ம நல்லா இருக்கணும் என்று நினைக்கிறவங்களுக்கு நாம நடிச்சுட்டு தான் இருந்திருக்கோம் என்று ஃபீல் பண்ணி அழுதிருந்தார்.
இப்படியாக இருக்கும் நிலையில் தற்போது வீட்டு மருமகள் அனைவரும் சக்தியோடு காரில் கோவில் திருவிழாவிற்கு சென்று கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் அந்த காரில் ஜான்சி ராணியும் நானும் வருவேன் என்று விடாப்பிடியாக கிளம்பி போய்க் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கதிர், வளவன், கரிகாலன் மூன்று பேரும் இன்னொரு காரில் போய்க்கொண்டிருக்கின்றனர்.
இப்படியாக இருக்கும் நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் கரிகாலன் ஒருவேளை கோவில் திருவிழாவுக்கு ஜீவானந்தம் வரவில்லை என்றால் என்ன பண்ண என்று கதிரிடம் கேள்வி கேட்க, அதற்கு கடும் கோபத்தில் கதிர் வருவான்டா, அவன வச்சு அடிக்க போறேன் பாரு. அவனுக்கு இருக்கு என்று வக்கரத்தின் உச்சத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஈஸ்வரி மீண்டும் மீண்டும் ஜீவானந்தத்திற்கு போன் செய்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் ஜீவானந்தம் போனை எடுக்கிறார்.

அப்போது வெண்பா என்கூடவே இருக்கட்டும் ப்ளீஸ் என்று கேட்க அதற்கு ஜீவானந்தம் இதுவரைக்கும் நீங்க எங்க மேல காட்டுன அக்கறை போதும் என்று முகத்தில் அடித்தது போல பேசி போனை வைக்கிறார். அதைத் தொடர்ந்து சாப்பிடுவதற்காக ரோட்டில் காரை நிறுத்தி இருந்த நிலையில் நந்தினி எல்லாரும் வாங்க போவோம் என்று ஜான்சி ராணியை விட்டுவிட்டு போவதற்காக பிளான் போட அதற்கு ஜனனி அத்தை என்ன சொல்லுவாங்களோ பயமா இருக்கு அத்தை பிரச்சனை பண்ணுவாங்க என்று சொல்லுகிறார்.
அதற்கு நந்தினி இல்லன்னா மட்டும் அத்தை எந்த பிரச்சனையும் பண்ண மாட்டாங்களா? என்று கேட்டு சக்தி காரை எடு என்று சொல்லி வேக வேகமாக கிளம்பி போகின்றனர். அப்போது கார் கிளம்பி போவதை பார்த்து ரோட்டில் ஜான்சி ராணி ஓடி வந்து கொண்டு இருக்க, இவர்கள் போய்விடுகிறார்கள். இப்படியாக இருக்கும் நிலையில் இன்று ஜான்சி ராணியை விட்டுவிட்டு வந்ததால் அடுத்து என்ன பிரச்சனை நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications