எதிர்நீச்சல்: கதிரை சுற்றி வளைத்த கௌதம்.. கடைசியில் சொன்ன வார்த்தை.. முடிவுக்கு வரும் மொத்த பிரச்சனை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 28ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இத்தனை நாட்களாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கதிருக்கு இன்று கௌதம்மாள் கழுத்துக்கு கத்தி வந்திருக்கிறது.

ஜீவானந்தத்தை பற்றி குணசேகரன் சொன்ன வார்த்தைக்கு அப்பத்தா பதிலடி கொடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் நேற்றைய எபிசோடில் கதிரிடம் பூங்குழலி என்ற பெயரில் ஒரு பெண் தானாக முன்வந்து நீங்க ஆதிரை கல்யாணத்தில் போட்ட ஆட்டம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. என்னை பார்க்க பல பேர் ஆசைப்பட்டாலும் நான் உங்களை தான் அன்று முழுக்க பார்த்தேன். எனக்கு உங்களுடைய டான்ஸ் மட்டுமல்லாமல் உங்களையும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.
உங்களை மீட் பண்ணலாமா என்று கேட்க அப்போது தானும் அந்தப் பெண்ணின் ஊர் பக்கத்திலேயே இருக்கிறேன் என்று சொன்னதால் நீங்க தனியா வாங்க என்று சொல்லி பூங்குழலி சொன்னதும் கூட வந்த கரிகாலனையும் வளவனையும் அனுப்பி வைத்துவிட்டு கதிர் அவசர அவசரமாக ஓடி வந்திருந்த நிலையில் கடைசியில் அந்தப் பெண் ஒரு வீட்டிற்குள் தனியாக கதிரை கூட்டிக்கொண்டு போயிருந்தார்.
போகிற வழியில் அந்தப் பெண்ணிடம் கதிர் நீ கல்யாணமே பண்ணிக்காத இப்படியே பேசி ஜாலியா இருக்கலாம் என்று சொல்லும்போது அந்தப் பெண் இப்படித்தான் அப்போ உங்க தங்கச்சி ஆதிரைக்கு நீங்க அட்வைஸ் கொடுத்தீங்களா? அதனால தான் அந்த பொண்ணு உங்க பேச்சைக் கேட்காமல போயிட்டான்னு பிடிக்காத கல்யாணத்தை பண்ணி வச்சீங்களா? என்று நறுக் என்று உரைக்கிற மாதிரி கேள்வி கேட்க அப்போது அதை கேட்டு கதிர் கோபமாகி இருந்தார்.
ஆனாலும் அப்போதும் அலர்ட் ஆகாமல் கடைசியில் அந்த பெண்ணை நம்பி போய் வீட்டிற்குள் மாட்டி இருக்க அங்கு கௌதம் வந்து அதிர்ச்சி கொடுத்திருந்தார். இப்படியாக நேற்றைய எபிசோடு முடிவடைந்து இருந்த நிலையில் இன்றைய எபிசோட் வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரன் விசாலாட்சியோடு அப்பத்தாவின் ஊருக்கு வந்து இறங்குகிறார்.

அப்போது ஈஸ்வரி, "அத்தை என்கிட்ட சொல்லலைங்க"என்று சொல்ல, குணசேகரன் "எங்ககிட்ட சொல்லி தான் உன் முன்னாள் காதலனை வர சொன்னியா..?" என்று கேட்கிறார். அதற்கு அப்பத்தா, "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்று சொல்லுவாங்க என்று பதிலடி கொடுக்கிறார். அதே நேரத்தில் கதிர் ஆரம்பத்தில் கௌதமிடம் கெத்தாக நான் குணசேகரன் தம்பிடா என்று பேசிக் கொண்டிருக்க,
அப்போது கூட இருந்த பூங்குழலி கதிரை பிடித்து கௌதமிடம் தள்ளிவிட்டு இன்னைக்கு நீ செத்தடா... என்று கோபமாக பேசுகிறார். அப்போது கெளதமோடு வந்திருந்த அடியாள்கள் கதிரை அடித்து துவைத்து எடுக்கின்றனர். இதை பார்க்க பல நாட்களாக ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு இன்றைய எபிசோடு செம ட்ரீட்டாக இருக்கப் போகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications