கௌதமால் குணசேகரனுக்கு வரும் ஆபத்து.. ஜீவானந்தத்தை சந்திக்கும் ஈஸ்வரி.. இனி வருவது இது தானா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 21ஆம் தேதி ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் ஜீவானந்தம் மனைவியை கொலை செய்தது குணசேகரன் தான் என்று உண்மை கௌதமிற்கு தெரிய வந்திருக்கிறது.

அதே நேரத்தில் ஜீவானந்தத்தை சந்தித்து ஈஸ்வரி முக்கிய வேண்டுகோள் வைக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யோசிக்க முடியாத வகையில் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. எத்தனை நாட்களாக குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்து இறந்த பிறகு அவருடைய கேரக்டரில் யார் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்தன. இந்த நிலையில் இனி குணசேகரன் கேரக்டரில் வேறு எந்த நடிகரும் நடிக்கவில்லை என்று இப்போது கதை தெளிவுபடுத்துகிறது.

அதே நேரத்தில் குணசேகரன் எப்படி இறந்து போவார் என்பது போன்று காட்சி அமைப்புகள் இனி வர இருக்கிறது. அதற்கான ப்ரோமோ இன்று வெளியாகி இருக்கிறது. அதில் ஏற்கனவே ஜீவானந்தத்தின் மனைவியை கொலை செய்தது யார் என்று தெரிந்து கொண்டு அவர்களை பழிவாங்குவேன் என்று கௌதம் சபதம் போட்டிருந்தார். இந்த நிலையில் முதலில் கௌதம் ஒரு நபரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது தோழர் மனைவியை கொலை செய்தது யாரு என்று நீ விசாரிச்சியா? ஏதாவது தெரிஞ்சதா? என்று கௌதம் அந்த கேட்க, அதற்கு அவர் அந்த விஷயத்தை செய்தது குணசேகரன் தான் என்று சொல்ல கௌதம் அதிர்ச்சி அடைகிறார். அதை தொடர்ந்து ஜீவானந்தத்தை சந்திக்கும் ஈஸ்வரி நிறைய சங்கடம் இருக்கு, வேற வழி இல்லையே என்று சொல்ல அதற்கு ஜீவானந்தம் ஆனால்.. என்று சொல்லியபடி அங்கு இருக்கும் வெண்பாவை பார்க்கிறார்.

அதுபோல வீட்டில் விசாலாட்சி நீங்கள் ஆச்சு அந்த கெழவி ஆச்சு எதுவும் என்ன இழுக்காதீங்க என்று நந்தினியிடம் சொல்ல, அதற்கு நந்தினி நீங்க என்ன தப்பு பண்ணீங்க? என்று கேட்க, விசாலாட்சி அழுது கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் ஜீவானந்தம் மனைவியை கொலை செய்ததற்காக கௌதம் கையால்தான் இனி குணசேகரன் இறப்பது போன்று காட்சிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே குணசேகரன் புண்ணிய ஸ்தலத்தில் இருக்கிறார். ஆனால் அவருக்கு ஆபத்து இருக்கிறது என்று ஜோதிடர் சொல்லி இருக்கும் நிலையில் அங்கு வைத்து தான் குணசேகரன் தன்னுடைய அண்ணனை பார்த்து தன்னுடைய கதையை எல்லாம் சொல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் கடைசி நேரத்தில் தன்னுடைய அண்ணனால் காப்பாற்றப்பட முடியாமல் கௌதமால் குணசேகரன் இறந்து போவார். அதற்கு பழி தீர்ப்பதற்காகத்தான் மீண்டும் வீட்டிற்கு வந்து குடும்பத்தை ஆட்டி படைக்க குணசேகரனின் அண்ணன் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்க போகுது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications