எதிர்நீச்சல்: திரும்பி வந்த குணசேகரன் சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் ஈஸ்வரி.. ஜனனிக்கு தெரிந்த உண்மை
சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 28ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் வீட்டை விட்டு காணாமல் போயிருந்த குணசேகரன் மீண்டும் கதிருக்கு போன் செய்து பேசுகிறார்.

அதே நேரத்தில் குணசேகரன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டதாக ஜீவானந்தம் ஈஸ்வரியிடம் சொல்லுகிறார். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.
எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யோசிக்க முடியாத வகையில் தான் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. குணசேகரன் வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு கடிதம் எழுதி வைத்துவிட்டு போன பிறகு வீட்டில் ஞானம், கதிர், விசாலாட்சி என மொத்த பேரும் கோபத்தில் வீட்டில் இருக்கும் பெண்களை பாடாய்ப்படுத்தி எடுத்து வருகின்றனர்.

இனி தங்களுடைய சொந்தக்காலில் நிற்கலாம் என்று நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி எல்லோரும் அடுத்தடுத்து தங்களுடைய பயணத்தை தொடங்கியிருந்த நிலையில் இப்போது அதை கதிர் ஞானம் விசாலாட்சி மூன்று பேரும் சேர்ந்து தடை போட்டு அவர்களை எதுவும் செய்ய முடியாமல் தடுத்து மிரட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் ரசிகர்களுக்கு இருக்கிறது.
அதே நேரத்தில் காணாமல் போயிருந்த குணசேகரன் மீண்டும் தன்னுடைய தம்பிகளை பார்க்க வந்து இருந்தார். அப்போது ஞானமும் கதிரும் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்களிடம் சாமியார் மூலமாக கோவில் திருவிழாவை நடத்த வேண்டும் என்றும் அதே நேரத்தில் கோவில் திருவிழாவில் வைத்து ஜீவானந்தம் மற்றும் பட்டமாவை காலி செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ஈஸ்வரிக்கு ஜீவானந்தம் போன் செய்கிறார். அப்போது குணசேகரன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தாச்சு என்று ஜீவானந்தம் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதே நேரத்தில் கதிருக்கு குணசேகரன் போன் போட்டு என்ன நடந்தாலும் இந்த வாட்டி மிஸ் ஆகக்கூடாது கதிரு என்று சொல்கிறார். அதற்கு கதிர் இந்த தடவை பிசுரே தட்டாது அண்ணே நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லுகிறார்.
கதிர் போனில் பேசிக் கொண்டிருப்பதை கிச்சனிலிருந்து கேட்ட ஜனனி இந்தவாட்டி நாமளா? அவரா? என்று பார்த்திடுவோம் என்று சபதம் போடுகின்றார். இப்படியாக பிரமோ வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் குணசேகரன் இன்னும் இரண்டு நாளில் கோவில் திருவிழாவில் வருவாரா? என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் கோவில் திருவிழாவில் வைத்து குணசேகரன் கொலை செய்வது போன்று காட்சிகள் வரும். அதற்கு பிறகு கதிர், ஞானத்தினுடைய ஆட்டம் மீண்டும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications