எதிர்நீச்சல்: வீட்டில் நடந்த உச்சகட்ட பிரச்சனை.. திடீர் பல்டி அடித்த ஞானம்.. நந்தினி உடைத்த உண்மை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 29ஆம் தேதிக்கான எபிசோடு ஞானம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருக்கிறார்.
கதிரை தொடர்ந்து ஞானமும் ரேணுகாவை அடித்து அவமானப்படுத்தி இருக்கிறார்.

அதே நேரத்தில் விசாலாட்சி மரண பயத்தில் தன்னுடைய மகனைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் நேற்றைய எபிசோடில் ஆதி குணசேகரன் இடம் இருந்து போன் வந்த பிறகு ஞானம், கதிர், விசாலாட்சியின் செயல்பாடுகளில் பெரிய அளவில் மாற்றம் தெரிகிறது. அப்போது விசாலாட்சி குணசேகரனை வீட்டிற்கு வர சொல்லிருக்கப்பா. என் பிள்ளையை எனக்கு பாக்கணும் போல இருக்கு. அவன் சொன்னபடி தானே வீட்டில் எல்லாமே இப்போ நடந்துகிட்டு இருக்கு. அவன் கண்டிப்பா சீக்கிரமா வீட்டுக்கு வரணும்.

எனக்கு ஏதாவது ஆயிருமோன்னு தோணுது. அந்த ஜோதிடர் வேற பெரிய தல ஒன்னு சாகப்போகிறது என்று சொன்னார். அது கேள்விப்பட்டதும் யாராயிருக்கும் என்று நான் குழப்பத்தில் இருக்கேன். ஒருவேளை அது நானாகத்தான் இருக்குமோ என்று விசாலாட்சி பயப்படுகிறார். அதற்கு கதிர், ஞானம், ஜான்சி ராணி, கரிகாலன் என எல்லாரும் விசாலாட்சிக்கு ஆறுதல் கூறுகின்றனர். அப்போது கதிர் நாங்க எல்லாரும் இங்கதான் இருக்கோம். உங்களுக்கு எதுவும் ஆகிவிடும் விட மாட்டோம்.

ஆனால் பெரிய தல போக போறது அந்த பட்டு தான் என்று சொல்லிக் விசாலாட்சியை ஆறுதல் படுத்துகின்றனர். அதைத் தொடர்ந்து ஞானம் வீட்டு மாடியில் தனியாக நின்று யோசித்துக் கொண்டிருக்க அப்போது அவருக்கு பால் கொண்டு கொடுக்கும் ரேணுகா, அந்த டம்ளரிடம் கோபத்தை காட்டி அதை டக்கென்று வைக்கிறார். பிறகு ஞானத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
உங்க அண்ணன் பின்னாடி சுத்திக் கொண்டிருந்ததால் தான் அவர் உங்களுக்கு சொத்து தந்து இருக்கிறார். சொத்து தந்ததால் அவருக்கு ஆதரவாக நீங்க இப்போ பேசுறீங்க. இதற்கு முன்னாடியாவது கொஞ்சமாவது மனசாட்சியோடு இருந்தீங்க. இப்போ அந்த மனசாட்சியை மொத்தமா சொத்துக்கு அடமானம் வச்சிட்டீங்க என்று கண்டமேனிக்கு திட்டிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த ஞானம், ரேணுகாவை திட்டி அவரை தலைமுடியை பிடித்து தரதரவென மாடியில் இருந்து இழுத்து வந்து வீட்டை விட்டு வெளியே போகும்படி தள்ளி விடுகிறார். அப்போது ஜனனியும், ஈஸ்வரியும் கிச்சனிலிருந்து இதை வேடிக்கை பார்க்கிறார்களே தவிர அவர்களும் வந்து தடுக்கவில்லை.

அதை கதிர் சொல்லி குத்தி காட்டுகிறார். அப்போது ஞானம் நான் என்னுடைய அண்ணன் பேச்சை தான் கேட்பேன். அவர்தான் எனக்கு முக்கியம் இந்த வீட்ல இருக்கிறதா என்றால் இரு இல்லனா வெளியே போ என்று திட்ட, ரேணுகா அழுது கொண்டு சமையலறைக்குள் போய்விடுகிறார். அதைத் தொடர்ந்து ஜான்சிராணி கரிகாலன் இடம் இப்பதான் இந்த வீட்டு ஆம்பளைங்களுக்கு வீரம் வந்து இருக்கு. இனி குணசேகரன் சொன்னபடி அவர் வந்ததும் உனக்கும் ஆதிரைக்கும் மறுதாலி பிரிச்சி கட்டிட்டா, இந்த ஆதிரையை கைய கால உடைச்சு வீட்டில் போட்டு அதுக்கு பிறகு நடக்கிறதை நாம பாத்துக்கலாம் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.
இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் ஜனனி நந்தினி எல்லோரும் கிச்சனில் பிறகு பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ரேணுகா அழுது கொண்டே இருக்க இத்தனை நாட்களாக நாம இந்த வீட்டை விட்டு வெளியே போனா என்ன பண்ணுவோம்? என்று நம்மை அறியாமலே நமக்கு ஒரு பயத்தை இவங்க கொடுத்துட்டாங்க.

சமுதாயம் என்ன சொல்லும்? குழந்தைகள் என்ன பண்ணுவாங்க? அம்மா, அப்பா என்ன பண்ணுவாங்க? என்ற ஒரு பயத்திலேயே நம்ம வாழ்ந்துட்டோம். அதனாலதான் இவங்க இந்த மாதிரி ஆட்டம் போடுறாங்க. இனி நம்ம சொந்த காலில் நிற்கலாம் என்று நினைத்தாலும் அதையும் நிற்க்க விடக்கூடாது என்பது தான் இவங்களோட கனவு. அதிலிருந்து நம்ம மீண்டு வந்தா மட்டும் தான் இந்த உலகத்துல வாழ்றதுக்கு தகுதியானவங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications