எதிர்நீச்சல்: கதிரை அறைந்த ஈஸ்வரி.. வீட்டிற்கு வரும் குணசேகரன்.. தர்ஷனின் கேள்வி.. பரபரப்பின் உச்சம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் முப்பதாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் எல்லோரும் எதிர்பார்த்த வகையில் கதிர் ஈஸ்வரியையும், அவருடைய குழந்தைகளையும் பற்றி தவறாக பேச கோபத்தில் ஈஸ்வரி கதிரின் கன்னத்தில் அறைந்து விடுகிறார்.
அதே நேரத்தில் தற்போது வெளியான ஸ்பெஷல் ப்ரோமோவில் குணசேகரன் வீட்டிற்கு வருவது போன்று காட்சிகள் இருக்கிறது. இந்த நிலைகள் இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு கிளப்பிய பிறகு கதிர், ஞானம், விசாலாட்சி என மூவரும் மொத்தமாக மாறி குணசேகரன் மீது இருக்கும் பாசத்தால் வீட்டு பெண்களை அடிமையாக நடத்துகின்றனர். அதே நேரத்தில் கடுமையான வார்த்தைகளாலும் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் நந்தினி செய்து வந்த கேட்டரிங் பிசினஸ்சும் கதிருக்கு மட்டுமல்லாமல் மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் இனி கேட்டரிங் பிசினஸ் நடத்தக் கூடாது என்று கதிர் பெரிய அளவில் சண்டை போட்டு பிரச்சனை செய்து நந்தினியின் போனை உடைத்து இருந்தார். அது மட்டுமல்லாமல் நந்தினியை கதிரும் விசாலாட்சியும் அடித்தும் இருந்தனர்.
அதைத்தொடர்ந்து ஈஸ்வரி காலேஜில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதும் மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் இனி யாரும் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று கதிர் மட்டுமல்லாமல் ஞானமும் வீட்டில் இருக்கும் பெண்களை மிரட்டி இருக்கிறார். அதே நேரத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்குள் குணசேகரன் வீட்டிற்கு வரப் போகிறார் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்
இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நந்தினி, "குணசேகரன் எங்கேயும் போகவில்லை. இங்கனகுள்ளையே சுத்திகிட்டு நம்மள வேவு பாத்துகிட்டு தான் இருக்காரு" என்று அழுதப்படியே பேசிக் கொண்டிருக்க, அதற்கு ஜனனி நாம இங்க வர வைக்கணும் என்று சொல்ல எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து தர்ஷன் எங்களாலதான அவர் போனார்னு அசிங்கப்படுத்திக்கிட்டு இருக்கீங்கல்ல நாங்களே போயி அவரை கூட்டிட்டு வர்றோம் என்று கதிரிடம் கேட்க, அதற்கு கதிர் தாடிக்காரன் எங்க அப்பாவா இருந்தா நல்லா இருக்கும்ன்னு சொன்னீங்கல்ல என்று கத்தி பேசுகிறார். அதற்கு ஈஸ்வரி அவங்க பேசுனது ஆதங்கத்துல என்று சொல்ல, அதற்கு கதிர் அசிங்கமாக பேசுகிறார். அதில் கோபமான ஈஸ்வரி கதிரின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார்.
அதைப் பார்த்த மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்து நிற்கிறது. விசாலாட்சி நெஞ்சில் கை வைத்து அய்யோ என்று கதறுகிறார். சக்தி இப்படித்தான் கொடுக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்க, நந்தினி ரேணுகா முகத்தில் சந்தோஷம் தெரிகிறது. இந்த அதிர்ச்சியில் கதிர் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக பிரமோ வெளியாகி இருப்பது ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இத்தனை நாட்களாக வீட்டில் ரொம்பவே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கதிரை யாராவது அடிக்க மாட்டார்களா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அது ஈஸ்வரி கையாலேயே அவருக்கு கிடைத்துவிட்டதை பார்த்ததும் ரசிகர்கள் இதைத்தான் நாங்கள் ரொம்ப நாளா எதிர்பார்த்தோம். கடைசியில் இப்பதான் இதை செய்ய தொடங்கி இருக்கிறார்கள். இப்படித்தான் போல்டாக இருக்க வேண்டும் என்று பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அது போல வெளியான ஸ்பெஷல் ப்ரோமோவில் கூட குணசேகரன் மீண்டும் வீட்டிற்கு வருவது போன்று காட்சிகள் இருக்கிறது. இதனால் கதிரை ஈஸ்வரி அடித்ததால் இனி கதிர் என்ன செய்யப் போகிறார். அதே நேரத்தில் வீட்டிற்கு வரும் குணசேகரன் இதற்கு என்ன மாதிரி பதிலடி கொடுக்கப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது. ஆனால் எது எப்படியோ இன்றைய எபிசோடில் கதிர் அடி வாங்கியதை பார்ப்பதற்காகவே மொத்த ரசிகர்களும் ஆஜராகி விடுவார்கள் என்பது தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications