எதிர்நீச்சல்: தன்னை கொல்ல சொல்லி கதறும் குணசேகரன்.. சக்தி கேட்ட கேள்வி.. அம்பலமான உண்மை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 8 ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் சக்திக்கு விசாலாட்சி செய்த உதவிகளை தெரிந்து கொண்ட குணசேகரன் விசாலாட்சி இடம் கேள்வி மேலே கேள்வி கேட்கிறார்.
அதற்கு விசாலாட்சி சொன்ன வார்த்தையை கேட்டு குணசேகரன் என்னை கொன்றுவிடு என்று கதறி அழுது கொண்டு இருந்தார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

எதிர்நீச்சல் சீரியலில் இத்தனை நாட்களாக குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து நேற்று திடீரென்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்திருந்தார். ஆனாலும் அவர் கடைசியாக பேசிய டப்பிங் டயலாகுகள் நேற்றைய எபிசோடில் ஒளிபரப்பானது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எபிசோடின் ஆரம்பத்தில் சக்தியும் ஜனனியும் புதியதாக தாங்கள் தொடக்கப் போகும் தொழில் பற்றி தன்னுடைய அம்மா விசாலாட்சியிடம் சொல்ல, இதை கேட்டு கோபமான குணசேகரன் எனக்கு எதிரா வீட்டிலேயே பிரச்சனை செய்தது பத்தாது என்று எனக்கு எதிரா தொழில் தொடங்க போறீங்களா? என்று கத்துகிறார்.
அதைத்தொடர்ந்து ஞானமும் சக்தி இடம் உனக்கு என்ன தெரியும்னு இப்ப தொழில் தொடங்கப்போறா? உன்னால நிர்வாகம் பண்ண முடியுமா? யாருடைய பெயரில் தொழில் தொடங்கப்போற? என்று கேள்வி கேட்க அதற்கு ஜனனி நாம இனி எதற்கு மறைத்து வைக்கணும் எல்லா உண்மையை சொல்லிரு சக்தி என்று சொல்ல, அதற்கு சக்தி ஜனனி பெயரில் தான் தொழில் தொடங்க போகிறோம் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் கம்பெனி நிர்வகிக்க போகிறோம் என்று சொல்கிறார்.
அதைக் கேட்டு கோபமான குணசேகரன் தொழில் தொடங்க அப்படியே பேங்க் மொத்த பணத்துக்கும் லோன் கொடுக்குதா? முதல் பணம் எங்கிருந்து வந்தது? என்று கேள்வி கேட்க, அதற்கு கதிர் அந்த கிழவி அதான் நம்ம கிட்ட இருந்து பிடுங்கி இதுகளுக்கு கொடுத்து இருப்பா என்று சொல்கிறார். அப்போது விசாலாட்சி பொறுமை இழந்து நான்தான் பா என்னுடைய நகைகளை கொடுத்து தொழில் தொடங்க சொன்னேன் என்று சொல்ல, குணசேகரன் நான் என் சொந்த உழைப்பில் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு உனக்கு நகை நட்டு போட்டு அழகு பார்த்தா நீ அதை தூக்கிக் கொடுப்பியா என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு இந்த நகைகள் நான் யாருடைய உழைப்பில் இருந்து வாங்கவில்லை. என்னுடைய அம்மா எனக்கு கொடுத்த நகை என்று சொல்ல, அதற்கு குணசேகரன் எனக்கு இதுவரைக்கும் நீ இதுவரைக்கும் ஏதாவது செஞ்சு இருப்பியா? ஒரு அரையான் கொடி கூட நீ வாங்கி போட்டு அழகு பார்த்தது கிடையாது என்று திட்ட, விசாலாட்சி உன்னை பத்து மாசம் சுமந்து பெக்கலயா? நான் வெக்காமலே நீ இவ்வளவு சம்பாதிச்சியா? நீ கஷ்டப்படும்போது நானும் உனக்கு உறுதுணையா தானே இருந்தேன். உன் நோய் நொடி எல்லாம் பார்த்து வளர்த்து விட்டேன். அதையெல்லாம் எப்பவாவது நான் சொல்லி காட்டி இருக்கனா? என்று கேட்கிறார்.
அப்போ நான் சொல்லி காட்டுனதுனால நான் கெட்டவன் என்று நீ சொல்றியே அம்மா அப்போ உன் கையால என்னை கொன்னுடு என்று கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, அதற்கு ஜனனி சத்தியிடம் அம்மாவின் நகைகளை திருப்பிக் கொடுக்க சொல்கிறார். உடனே சக்தியும் நகைகளை எடுத்துட்டு வந்து கொடுக்க, அதை விசாலாட்சி வாங்க மறுக்கிறார். அதோடு யார் என்ன சொன்னாலும் இந்த நகை உனக்கு தான் என்று சக்தியிடம் விசாலாட்சி சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து குணசேகரனிடம் நீ சம்பாதிச்ச சொத்தை கொடுத்தால் தான் தப்பு ஆனா இது என்னுடைய அம்மா எனக்கு போட்ட நகை. இதை நான் விருப்பப்பட்டவர்களுக்கு கொடுக்க எனக்கு உரிமை இருக்கு. என்னை யாருமே இந்த வீட்ல மதிக்கவே மாட்டேங்கிறீங்க என்ன இப்படி கொடுமை படுத்துவதற்கு பதில் என்னை உன் கையாலே கொன்னுடு என்று விசாலாட்சி அழுது கொண்டிருக்கிறார்.
அதைப் பார்த்ததும் ஞானம் சக்தியிடம் சண்டை போடுகிறார். ஜனனி உன்னை நடு தெருவில் விட்டுட்டு போவா. அப்பதான் அண்ணன்களோட அருமை உனக்கு தெரியும் என்று சொல்ல, அதற்கு சக்தி அப்பக்கூட நான் என்னோட சொந்த கல்லில் தான் இருப்பேன். வசதியாக வாழ வேண்டும் என்று இவங்களோட ஒட்டிக்கிட்டு உன்னை மாதிரி இருக்க மாட்டேன். இவங்க காட்டுறது உண்மையான பாசம் இல்ல. அவங்களோட சுயரூபம் தெரிஞ்சா தான் நீ திருந்துவ என்று கோபத்தில் பேசுகிறார்.
அதற்கு கதிரும் சக்தியிடம் சண்டைக்கு வர உடனே சக்தி, சீ வாய மூடு. நீ செஞ்ச கிரிமினல் வேலையெல்லாம் சொன்னா நீ நாண்டுக்கிட்டு தான் சாவா என்கிறார். அதற்கு கதிர் நான் என்ன செஞ்சுட்டேன்? எனக்கு கேட்க, அதற்கு நந்தினி அது அவங்க மனசாட்சிக்கு தெரியும் என்று கூறுகிறார். அதற்கு குணசேகரன் நான் முடிவா சொல்றேன் இந்த வீட்ல ஆதி குரூப் ஆப் கம்பெனி மட்டும் தான் இருக்கணும் என்று பேசுகிறார். இப்படியாக எபிசோடு முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications