எதிர்நீச்சல்: வெளிவந்த ஈஸ்வரியின் கடந்த கால வாழ்க்கை ரகசியம்.. குணசேகரன் எடுக்கும் முடிவு இதுதான்!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி முதல் முறையாக தன்னுடைய தன்னுடைய வீட்டில் குரலை உயர்த்தி பேசியிருக்கிறார்.
ஈஸ்வரி எதனால் குணசேகரனை திருமணம் செய்து கொண்டார் என்பதை குறித்து ஜனனிடம் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இதுவரைக்கும் அமைதியாகவே இருந்து வந்த ஈஸ்வரிக்குள் இருக்கும் திறமையை பார்த்து அவருடைய மகன் மன மாற்றம் அடைந்து இருக்கிறார்
ஈஸ்வரியின் திடீர் மாற்றத்தை பார்த்து குடும்பத்தினர் அனைவரும் வியந்து போய் இருக்கும் நிலையில் மாதிரையின் கேள்விக்கு இன்று சரியான பதிலை கொடுத்திருக்கிறார்.

ஈஸ்வரியின் பதில்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி தன்னுடைய மகன் காலேஜ் ப்ரொபஷனல் பெண் என்ற காரணத்தினால் இழிவாக பேசியதை பேசியதற்கு கன்னத்தில் பளார் என்று அடித்து பின்பு இப்போது அவருக்காக காலேஜுக்கு சென்று இருக்கிறார். கல்லூரியில் அவர் பெண்கள் பற்றி தவறான கண்ணோட்டத்தில் இருப்பதாலும், பிற்போக்குத்தனத்தில் இருப்பதால் இதற்கு தானும் ஒரு காரணமாக அமைந்துவிட்டேன். பெண் என்றால் என்னதான் தனக்கு பிரச்சனை வந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அமைதியாக போய்விட வேண்டும் என்கிற ஒரு மனநிலையிலே நான் தர்ஷனை வளர்த்து விட்டேன். அதனால் எதற்காக மன்னிப்பு கேட்கவில்லை. தன்னுடைய மகனின் படிப்பை நிறுத்தி விடுமாறு கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தார்.

காலேஜ் டாப்பர்
ஈஸ்வரியின் எதிர்பாராத முடிவை கேட்ட காலேஜ் பிரின்சிபல் இந்த ஒருமுறை மட்டும் தர்ஷனுக்கு மன்னிப்பு கொடுத்து மீண்டும் காலேஜில் சேர்த்து விடுவதாக கூறி இருக்கிறார். பின்பு அங்கே தனியாக அமர்ந்திருந்த ஈஸ்வரி இடம் காலேஜுக்கு வந்த ஜனனி நீங்கள் இப்படி எல்லாம் தைரியமாக பேசுவீர்கள் என்று எனக்கு தெரியாது உங்களுடைய கடந்த காலத்தை பற்றி சொல்லுங்கள் என்று சொல்ல ஈஸ்வரி காலேஜ் படிக்கும் போது தான் அதிகமாக படிக்க வேண்டும், படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசை பட்டதாகவும் அப்போது காலேஜ் டாப்பர் ஆகவும் ஈஸ்வரி தான் இருந்திருக்கிறார்.

திருமணத்திற்கு ஆன காரணம்
ஈஸ்வரி காலேஜ்க்கு சென்று கொண்டிருக்கும்போது அங்கு சுவற்றில் எழுதும் ஒரு நபரை பார்த்திருக்கிறார். அந்த நபரை பிடித்திருந்தாலும் பயம் அதிகமாகவே இருந்திருக்கிறது. அந்த நிலையில் அந்த நபர் ஈஸ்வரியின் அப்பாவிடம் வந்து பெண் கேட்டு இருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியான ஈஸ்வரியின் அப்பா நீ இடம் கொடுக்காமல் அவர் இப்படி வந்து வீட்டில் பெண் கேட்பார் என்று திட்டிவிட்டு இதற்கு மேலே நீ படிக்க வேண்டாம் படித்தது போதும் குணசேகரன் என்கிற ஒரு பையன் படிக்காவிட்டாலும் பொறுப்பாக வேலை செய்து நிறைய சொத்து எடுத்திருக்கான். பொறுப்பாகவும் இருக்கான். அவனை திருமணம் செய்து வைக்கலாம் என்று திருமணம் செய்து வைத்திருக்கின்றனர்.

சக்தியின் கேள்வி
தன்னுடைய திருமணத்திற்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்றே கேட்காமல் அப்பா எடுத்த முடிவுக்கு ஈஸ்வரியும் கட்டுப்படவே குணசேகரனை திருமணம் செய்து இருக்கிறார். வீட்டில் அடிமையாக மாறி இருக்கிறார் இந்த ரகசியங்களை ஜனனிடம் சொல்ல, எல்லா பெண்களுக்கும் வாழ்க்கையில் இப்படித்தான் இருக்கிறது என்று ஜனனியும் கேட்டுக் கொண்டு பிறகு இதை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்து படியே வீட்டிற்கு வருகிறார். அங்கே சக்தி பைக் ஸ்டார்ட் பண்ணி பார்த்துக் கொண்டே இருக்க, அது ஸ்டார்ட் ஆகாததால் கோபத்தில் இருக்கும் போது ஜனனியை பார்த்து முறைத்தபடியே இருக்க ஜனனி வீடு வரைக்கும் சென்று மீண்டும் கதிர் அருகே வருகிறார். நீ என்ன இப்போ அன்று கௌதமுடன் சுற்றுவதை பற்றி விளக்கம் கொடுக்க போறியா? என்று கேட்க ஜனனி எந்த பதிலும் சொல்லாமல் பைக்கின் சாவியை மட்டும் ஆன் செய்துவிட்டு கிளம்புகிறார் .

பதறும் குணசேகரன்
இந்த நிலையில் இன்று வீட்டிற்கு வந்த தர்ஷனிடம் ஆதிரை உனக்கு அசிங்கமா இல்லையா? என்று கேள்வி கேட்க, தர்ஷன் மேல போ என்று ஈஸ்வரி சொல்ல, என்ன ஆட்டிட்யூட் எல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு என்று கேட்க, திஸ் இஸ் நாட் ஆட்டிட்யூட் திஸ் இஸ் மை செல்ப் ரெஸ்பெக்ட என்று ஈஸ்வரி சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பின்பு நான் செய்தது இந்த வீட்டிற்கு தெரிய வரும்போது பூகம்பம் நிச்சயமாக வெடிக்கும் என்று பட்டம்மாள் பாட்டி கூற, அப்போது கதிர் வீரப்பாக லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து, ஏ கிழவி வெளியே வா என்று கத்திக் கொண்டிருக்க, முளைப்பாரி முளைக்கிறதுக்கு முன்னாடியே கும்மி அடிச்சிட்டு போய்டாதடா என்று குணசேகரன் கதிரை தடுக்க ஓடி வருகிறார். இத்துடன் இன்றைய பிரமோ முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications