சத்தியத்தால் சொத்தை இழக்கும் குணசேகரன்! நீதிபதியிடம் ஈஸ்வரி சொன்ன வார்த்தை.. குழப்பத்தில் ஜனனி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் 23ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரன் தன்னுடைய மகளுக்காக சொத்துக்கள் முழுவதையும் உமையாள் குடும்பத்திற்கு தரப்போவதாக சத்தியம் செய்து கொடுக்க அதை பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.

அதே நேரத்தில் ஜனனி தன்னுடைய தங்கையிடம் திருமண விஷயம் குறித்து முக்கியமான முடிவு எடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Ethirneechal Serial 23th march 2024 promo and episode full update

இந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியின் தங்கச்சி காதலிப்பது ஜனனியின் அத்தை உமையாளின் மகன் சித்தார்த் தான் என்பது எல்லோருக்கும் தெரியவந்திருக்கும் நிலையில் சித்தார்த் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடு நேற்றைய எபிசோடு இருந்தது.

அதிலும் அடி வாங்குவதற்கே நேர்ந்து விட்டது போல நேற்று சித்தார்த் உமையாளிடமும், ஜனனி தங்கச்சி இடமும் மாறி மாறி அடி வாங்கிக் கொண்டிருந்ததை பார்க்கும்போது யார்ரா இவர் இப்படி இருக்கிறாரே என்று தான் ரசிகர்களுக்கு தோன்றியிருக்கும். அதே நேரத்தில் இப்படி எதையும் பேசத் தைரியம் இல்லாத நபரை நம்பி ஜனனியின் தங்கை தன்னுடைய வாழ்க்கையை ஒப்படைத்தால் இனி அடுத்து இவருக்காகவும் ஜனனி பல சவால்களை போட்டு போராட வேண்டியது தான் இருக்கும்.

Ethirneechal Serial 23th march 2024 promo and episode full update

அதே நேரத்தில் இன்று வெளியான ப்ரோமோவில் ஈஸ்வரி நீதிபதியிடம் 17 வயசு பொண்ணு தர்ஷினிக்கு இந்த ஆளு குணசேகரன் கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறார் என்று சொல்ல, அதை கேட்டு நீதிபதி என்னது கல்யாணமா? என்று அதிர்ச்சி ஆகிறார். அதே நேரத்தில் மறுபக்கத்தில் உமையாளிடம் குணசேகரன் கையில் திருநீரை வைத்து சத்தியம் செய்து கொடுக்கிறார்.

அதில் உங்க பையன் என்னுடைய பொண்ணு கழுத்தில் தாலி கட்டுற அந்த நேரத்தில் எல்லா சொத்துக்களும் அவர் பெயரில் மாறி இருக்கும் என்று சொல்ல உமையாள் தான் வெற்றி பெற்று விட்டதாக நக்கல் சிரிப்பு சிரிக்கிறார். ஏற்கனவே ஆதிரையை கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று கரிகாலனிடம் இருந்து கல்யாண மண்டபத்தை எழுதி வாங்கிய குணசேகரன் இப்போது தன்னுடைய மகனுக்காக மொத்த சொத்துக்களையும் மருமகனுக்கு எழுதிக் கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.

Ethirneechal Serial 23th march 2024 promo and episode full update

இப்படியான நிலையில் ஜனனி தன்னுடைய தங்கையிடம் இவ்வளவு பிரச்சனை நடந்து இருக்கிறது சித்தார்த் உனக்கு போன் பண்ணி எதுவும் பேசினானா? என்று கேட்க அதற்கு ஜனனியின் தங்கச்சி வந்தனா சித்தார்த் எதுவுமே பேசவில்லை என்று சொல்கிறார். அதற்கு ஜனனி இவ்வளவு பிரச்சனை நடந்ததற்கு அவன் வாய்திறக்கவில்லை என்றால் அவனை எப்படி நாம் நம்புவது என்று கேள்வி கேட்கிறார்.

இப்படியாக ப்ரோமோ இருக்கும் நிலையில் இந்த சீரியலில் கல்யாணம் என்பதை தவிர வேற கதையே இல்லையா? ஆரம்பத்தில் ஜனனி சக்தி கதையில் கல்யாணத்தில் சீரியல் தொடங்கியது. அடுத்ததாக தர்ஷினி கரிகாலனுக்கு கல்யாணம் என்று பிரச்சனையை தொடங்கியிருந்தார்கள். அதற்குப் பிறகு ஆதிரை -கரிகாலன் கல்யாணம், பிறகு மீண்டும் தர்ஷினி- கரிகாலன் கல்யாணம். இப்போது தர்ஷினி சித்தார்த் கல்யாணம் இப்படி தொடர்ச்சியாக இந்த சீரியலில் கல்யாணத்தை மட்டுமே மையப்படுத்தி பிரச்சனைகளை இழுத்துக் கொண்டு இருக்கிறார்களே என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+