எதிர்நீச்சலில் களமிறங்கும் புது நபர்கள்.. அதிரடியாக மாற்றப்பட்ட கதை! குணசேகரனுக்கு பிரச்சனை தான்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பிப்ரவரி 24ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் தர்ஷினியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஜெயிலில் இருந்து தப்பித்த ஜீவானந்தத்தால் குணசேகரனுக்கு புது பிரச்சனை வர இருக்கிறது.
அதே நேரத்தில் தர்ஷினியை கண்டுபிடிப்பதற்காக எதிர்நீச்சல் சீரியலில் ஸ்பெஷல் டீம் களம் இறங்கி இருக்கும் நிலையில் அவர்களும் ஜீவானந்தம் தப்பித்து போனது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். இதைக் கேட்டு ஜனனி குரூப் அதிர்ச்சியாக இருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் காணாமல் போன தர்ஷனியை பெண்களே தேடி கண்டுபிடிப்பது போன்று முதலில் கதை போய்க் கொண்டிருந்த நிலையில் அதற்கு பிறகு இடியாப்ப சிக்கலாக அடுத்தது பிரச்சனை வர வைத்து இப்போது இந்த சீரியலின் இயக்குனரே கதாநாயகனாக களம் இறங்கி இருக்கிறார். போலீஸ் வேனில் இருந்து நேற்று ஜீவானந்தம் தப்பித்து போயிருக்கிறார்.
ஆனால் கதைப்படி நேற்று ஜீவானந்தம் தப்பியது எதார்த்தமாக நடந்தது போல இருந்தது. ஆனால் ஜீவானந்தம் தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே ஈஸ்வரி ரெஸ்ட் ரூம் போய்விட்டு ரொம்ப நேரத்தை கடத்தியது போன்று தான் இருந்தது. ஆனால் எதற்காக ஈஸ்வரி இப்படி செய்தார் என்று தெரியவில்லை. அதுபோல ஈஸ்வரி வண்டிக்குள் இருக்கும்போது கான்ஸ்டபிள் ஈஸ்வரியிடம் கண்ணை காட்டி போய்விட்டார் என்று கூறுவதையும் பார்க்க முடிந்தது.
இதனால் ஜீவானந்தத்தை தப்பிக்க வைக்க வேண்டும் என்பதற்காக ஈஸ்வரியும் கான்ஸ்டபிளும் இப்படி ஒரு பிளான் போட்டு இருக்காங்களா என்று தெரியவில்லை. ஆனால் எதற்காக இப்படி கதையை மாற்றி இருக்கிறார்கள் என்று தான் குழப்பமாக இருக்கிறது. ஏற்கனவே கோர்ட்டில் தர்ஷினியை கடத்தியது நான்தான் என்று ஈஸ்வரி சொன்னதால்தான் இப்போது அவருக்கு பெரிய பிரச்சினையாகவே ஆகி இருக்கிறது.
அதுபோல போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் ஜீவானந்தத்தை கைது செய்த போது அவர் ஒரு கதையை சொல்லியிருந்தார். அதற்கு பிறகு ஈஸ்வரி ஜனனி எல்லோரும் வந்து வேறு கதை சொல்லியதால் ஜீவானந்தம் மீதுதான் அதிகமான சந்தேகம் போலீசுக்கு வந்தது. அதை தொடர்ந்து இப்போதும் ஜீவானந்தம் போலீஸிடம் இருந்து தப்பித்து சென்றிருப்பதால் ஜீவானந்தம் தான் தர்ஷினியை கடத்தினார் என்று போலீஸ்காரர்களுக்கு சந்தேகம் வலுக்கிறது.
இப்படியான நிலையில் நேற்றைய எபிசோட்டில் ஜனனியின் அப்பத்தா குணசேகரன் வீட்டிற்கு வந்து இருக்கும்போது குணசேகரனிடம் கவலைப்படாதீங்க உங்க பொண்ணு திரும்ப சீக்கிரமாக வந்துடுவா என்று சொல்லும் போது குணசேகருடைய ரியாக்ஷன் வேற மாதிரி இருந்தது. தன்னுடைய மகள் வரவேண்டாம் என்பது போலவே குணசேகரன் முழித்துக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் ஜனனி சிஎம் செல்லுக்கு போன் பண்ணி கம்பிளைன்ட் பண்ணியதால் ஸ்பெஷல் டீம் இந்த கேசில் போட்டு இருக்கின்றனர்.
இன்றைய ப்ரோமோவில் ஸ்பெஷல் டீம் வந்து விட்டனர். ஆனால் அவர்களும் ஜீவானந்தம் தப்பித்து விட்டார் என்று கதையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதனால் ஒருவேளை ஜீவானந்தம் தர்ஷினியை கண்டுபிடித்தால் கூட குணசேகரன் மீண்டும் தப்பித்து ஜீவானந்தம் மீது பழியை தூக்கி போட்டு விடுவார்களோ என்ற எண்ணம் வருகிறது.
காரணம் இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு இடத்திலும் குணசேகரன் தான் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். அவரை எதிர்ப்பவர்கள் தோற்றுக் கொண்டு இருப்பது போலத்தான் கதையை கொண்டு போய்க் கொண்டிருக்கின்றனர். அதனால் இனியும் என்ன மாதிரி குழப்பம் எல்லாம் செய்ய காத்திருக்கிறார்களோ தெரியவில்லை... அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications