எதிர்நீச்சல்: அடப்பாவமே குணசேகரன் தர்ஷினியை கடத்தலையா? இதற்கு காரணமே இவங்க தானா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பிப்ரவரி 26 ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் இதுவரைக்கும் குணசேகரன் தான் தர்ஷினியை கடத்தி வைத்திருக்கிறார் என்று சந்தேகம் வருகிற மாதிரியே கதை பயணித்துக் கொண்டிருந்தது. ஆனால் இன்று வெளியான ப்ரோமோவில் புது வில்லன் ஒருவர் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
அதே நேரத்தில் தர்ஷினியை கண்டுபிடிப்பதற்காக புதிய போலீஸ் ஆபீசர் எதிர்நீச்சலில் அறிமுகம் ஆகி இருக்கும் நிலையில் குணசேகரனுக்கு தம்பிமார்கள் புது பிரச்சினையை கொடுக்கிறார்கள்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினி காணாமல் போய் ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் காப்பாற்றப்படாமல்தான் இருக்கிறார். அதே நேரத்தில் தர்ஷினி பேசியதாக ஒரு வீடியோ நீதிமன்றத்திற்கு வந்திருந்தது அதற்குப் பிறகு ஜெயிலிலிருந்து வெளியே வந்த ஜனனி குரூப் சி எம் செல்லுக்கு கம்ப்ளைன்ட் பண்ணி இப்போது தர்ஷினியை காப்பாற்றுவதற்காக ஸ்பெஷல் போலீஸ் என்ட்ரி கொடுத்திருக்கின்றனர்.
இப்படியான நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்குற மாதிரி தர்ஷினியை ஒரு அறையில் அடைத்து வைத்திருக்கின்றனர். அங்கு இருக்கும் ஒரு பெண் தர்ஷினியை அடித்து கொடுமைப்படுத்தி இருக்கிறார். தரையில் விழுந்து மயக்க நிலையில் கிடக்கும் தர்ஷினி நீங்க சொன்ன மாதிரியே நான் சொல்கிறேன், நீங்க என்னை எங்க அம்மா கிட்ட மட்டும் விட்ருங்க ப்ளீஸ் என்று கதறி கொண்டு இருக்கிறார்.

அப்போது அங்கு வெள்ளை வேஷ்டி சட்டை கட்டி, கழுத்தெல்லாம் நகை போட்டுக்கொண்டு ஒரு வில்லன் ஒருவர் நிற்கிறார். மறுபக்கத்தில் ஒரு ஆற்றின் கரையோரத்தில் ஸ்பெஷல் டீம் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள் அப்போது அங்கு ஜனனி அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஸ்பெஷல் ஆபிசர் தர்ஷினியோட வீடியோ பார்க்கும் போது அவர் சுயநினைவிலே இல்லைன்னு தோணுது ரொம்ப வீக்கா இருக்கான்னு தோணுது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக குணசேகரன் வீட்டில் குணசேகரன் உனக்கு எதுக்குடா நான் பதில் சொல்லணும் என்று சொல்ல அதற்கு ஞானம் சொல்லணும்னு எங்களுக்கும் இதுல சம்பந்தம் இருக்கு நீங்க சொல்லி தான் ஆகணும் என்று சொல்ல அதற்கு குணசேகரன் ஆவேசமாக கைநீட்டி பேசிக் கொண்டிருக்கிறார்.
இப்படியாக ப்ரோமோ இருக்கும் நிலையில் தர்ஷினியை குணசேகரன் தான் கடத்தி இருந்தார் என்று இவ்வளவு நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது தர்ஷியை கடத்தி வைத்திருக்கும் நபரை பார்க்கும்போது இவர் ஜனனியின் அப்பத்தா குடும்பத்தினர் சொல்லி தர்ஷினியை கடத்தி வைத்திருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.

ஒருவேளை குணசேகரனை தன் வசப்படுத்தி ஜனனியை பலி வாங்குவதற்காக தான் தர்ஷினியை கடத்தி வைத்திருக்கிறார்களா என்ற கேள்விகள் எழுகிறது. ஏற்கனவே குணசேகரன் தம்பிமார்களையும் பிரிந்து விட்டார் அப்போது உங்களுக்காக நாங்க இருக்கோம் யாரை கையை காலை எடுக்கணும்னு சொல்லுங்க நாங்க செய்றோம் என்று ஜனனியின் சித்தப்பா பையன் ராமசாமி சொல்லி இருக்கிறார்.
அதோடு ஜனனியின் அப்பத்தாவும் குணசேகரன் வீட்டில் தங்கி இருக்கும் நிலையில் ஜீவானந்தம் தர்ஷினியை கடத்தி காப்பாற்ற போகிறாரா? அல்லது ஜனனி போலீஸோடு சேர்ந்து தர்ஷினியை காப்பாற்றப் போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications