எதிர்த்து பேசிய ஈஸ்வரி.. அந்த 2 பேரு இல்லையே பாத்தீங்களா? இனி கதை? கொண்டாட்டத்தில் எதிர்நீச்சல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் செய்த சாதனைக்காக சீரியல் நடிகர்கள் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.
ஆனால் அந்த புகைப்படங்களில் இரண்டு நடிகர்கள் மட்டும் இல்லை என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதே நேரத்தில் இனி சீரியலின் கதை என்ன மாதிரி போகப்போகிறது என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருக்கிறது. அது குறித்தும் பார்க்கலாம்.
சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் பாராட்டப்படும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலுக்கென்று ரசிகர்களின் மத்தியில் அமோகமான வரவேற்பு இருக்கிறது. அதனாலேயே இந்த சீரியல் கடந்த வாரத்தில் டிஆர்பியில் முதல் இடத்தை மீண்டும் பிடித்திருக்கிறது.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு ஆதிரை மற்றும் கரிகாலனின் திடீர் திருமணம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்து.இந்த நிலையில் அந்த வாரமும் இந்த சீரியல் முதல் இடத்தில் இருந்தது. அதற்கு பிறகு தொடர்ச்சியாக இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் இப்போது மீண்டும் முதல் இடத்தில் வந்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் வெற்றிகரமாக 500 எபிசோடுகள் முடிவடைந்து இருக்கிறது.

எதிர்நீச்சல்: குணசேகரனுக்கு செருப்படி பதில் கொடுத்த ஈஸ்வரி.. கதிருக்கு நடந்த அவமானம்
இந்த நிலையில் இது எதிர்நீச்சல் சீரியல் செய்த சாதனையாக தான் ரசிகர்களின் மத்தியில் பார்க்கப்படுகிறது. இதற்காக சீரியல் அணியினர் அனைவரும் மகிழ்ச்சியோடு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த கொண்டாட்டத்தில் ஜனனி மற்றும் சக்தி இருவரும் அங்கு இல்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்து இருக்கிறது. இந்த கொண்டாட்டம் புகைப்படங்களில் இவர்கள் இருவரும் மட்டும் இல்லையே என்பது பலருடைய கேள்வியாகவும் இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த சீரியலில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் வந்திருக்கிறது. அதிலும் ஜீவானந்தம் ஆரம்பத்தில் ஈஸ்வரியை காதலித்த விஷயத்தை நேற்றைய எபிசோடில் குணசேகரனிடம் ஈஸ்வரியின் அப்பா வந்து சொன்னது சற்றும் எதிர்பார்க்காத விதமாக இருந்தது. இது குணசேகரனுக்கு தெரிய வருவதற்கு இன்னும் பல எபிசோடுகள் ஆகும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் கதை வேகமாக நகர்ந்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று வெளியான பிரமோவில் ஈஸ்வரி கதிரை அடிக்க பாய்ந்திருக்கிறார். அதுபோல குணசேகரனிடமும் துணிச்சலாக ஆமாம் எங்க அப்பா சம்மதித்திருந்தால் நான் ஜீவானந்தத்தை கல்யாணம் செய்து இருப்பேன் என்று பேசி இருக்கிறார். இந்த நிலையில் இனி என்ன மாதிரி நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கிறது. அதே நேரத்தில் ஜீவானந்தத்தை வைத்து இனி ஈஸ்வரியை வார்த்தைகளால் காயப்படுத்தும் போது ஈஸ்வரி வீட்டை விட்டு வெளியேறுவாரா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
ஏற்கனவே குணசேகரனிடம் ஜீவானந்தத்தை பற்றி நந்தினி தடுத்த பிறகும் ஈஸ்வரியின் அப்பா போட்டு கொடுத்திருப்பதால் ஈஸ்வரி குணசேகரனை எதிர்த்து தனியாக தன்னுடைய பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஈஸ்வரிக்கு தனியாக ஒரு வேலை இருக்கிறது. இந்த நிலையில் தன் மீது விழுந்த வீண் பழியை துடைத்து தனியாக நீச்சல் போடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications