எதிர்நீச்சல்: குணசேகரனுக்கு செருப்படி பதில் கொடுத்த ஈஸ்வரி.. கதிருக்கு நடந்த அவமானம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் இரண்டாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஜீவானந்தம் ஈஸ்வரியை காதலித்ததை தெரிந்து கொண்ட குணசேகரன் ஈஸ்வரியிடம் அசிங்கமாக பேசுகிறார்.

அதற்கு ஈஸ்வரி சரியான பதிலடி கொடுக்க அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் இடம் எதிர்நீச்சல் சீரியலில் சற்றும் எதிர்பார்க்காத பல அதிரடியான திருப்பங்கள் வேகவேகமாக வந்து கொண்டே இருக்கிறது. இதுவரைக்கும் ஜீவானந்தம் ஈஸ்வரியின் முன்னாள் காதலன் என்ற ரகசியம் வீட்டில் இருக்கும் மருமகள்களுக்கு தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து இப்போது ஈஸ்வரியின் அப்பா மூலமாக குணசேகரனுக்கும் வீட்டில் இருக்கும் மற்ற குடும்பத்தினருக்கும் தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில் ஜீவானந்தத்தையும் அவருடைய குழந்தையையும் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த ஈஸ்வரியிடம் வீட்டு வாசலில் வைத்து குணசேகரன் பிரச்சனை செய்கிறார். "அப்போது அந்த ஜீவானந்தம் உன்னிடம் சொல்லி அனுப்பி இருக்கானா?" என்று குணசேகரன் கேள்வி கேட்க, பக்கத்தில் நின்று கொண்டிருந்த கதிர் "ஆமா சொல்லி இருப்பான்" என்று சொல்ல, ஈஸ்வரி "ஏய் கதிரு மரியாதையா பேசு" என்று கையை நீட்டி அடிக்கப் போகிறார்.

அடுத்ததாக குணசேகரன் தர்ஷனும் தர்ஷினியும் ஸ்கூலுக்கு போயிட்டு வீட்டுக்கு வரும்போது இங்க நடக்குற கூத்தையெல்லாம் பாத்தீங்களா? என்று குணசேகரன் அவர்களிடம் கேட்க, ஈஸ்வரி "மனுஷனா நீ எல்லாம்" என்று கேட்க, ஏய் என்று அதட்ட, அதற்கு என்ன பேச்சு பேசிக்கிட்டு இருக்க, குழந்தைங்க கிட்ட என்று ஈஸ்வரி திட்ட உங்க அப்பா சரின்னு சொல்லி இருந்தா என்று கேள்வி கேட்க, அதற்கு ஈஸ்வரி கல்யாணம் பண்ணி இருப்பேன் என்று சொன்னதும் குணசேகரன் பதில் பேச முடியாமல் தலையை குனிந்து கோபத்தில் இருக்கிறார். வீட்டில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர்.
இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் அதிகமான ரசிகர்கள் எந்த பிரமோ தாங்கள் எதிர்பார்த்த வகையில் இருப்பதாக பாராட்டி வருகின்றனர். அதுவும் ஈஸ்வரி தைரியமாக குணசேகரனை எதிர்த்து பேசியது பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் அதுபோல பல டூஸ்ட்கள் உடனுக்குடனே வந்து விடுவதால் சீரியலில் விறுவிறுப்பு அதிகரித்திருக்கிறது.

அதனால்தான் கடந்த வாரத்தில் டிஆர்பியில் டாப் 10 இடத்தில் முதல் இடத்தை மீண்டும் எதிர்நீச்சல் பிடித்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவும் விறுவிறுப்பாக இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடு காண ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. இத்தனை நாட்களாக வில்லனுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது அவரை எதிர்க்க குடும்பத்தினர் துணிந்து விட்டதால் சீரியலின் வேகமும் கூடியிருக்கிறது என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications